இந்தப் புதிருக்கு செஸ் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. செஸ் பலகையில், குதிரையை எப்படி நகர்த்த வேண்டும் என்று தெரிந்திருந்தாலே போதும். அதுவும் தெரியாது என்றாலும் பரவாயில்லை. குதிரையை எப்படியெல்லாம் நகர்த்தலாம் என்ற விளக்கம் கீழே இருக்கிறது.
இப்பொழுது உங்களிடம் 3x3 செஸ் பலகை இருக்கிறது. ஏழு குதிரை வீரர்கள் இருக்கிறார்கள். முதலில் ஒரு குதிரையை எடுங்கள். அதை 3x3 பலகையில் காலியான ஏதாவதொரு கட்டத்தில் வையுங்கள். பின் அதை வைத்த கட்டத்திலிருந்து ஒரு முறை அதை குதிரை நகர்த்தல் முறையில் நகர்த்துங்கள். பின் இதே முறையில் இரண்டாவது குதிரையை காலி கட்டத்தில் வைத்து, ஒரு முறை நகர்த்தல்... இப்படியே ஏழு குதிரை வீரர்களையும் பலகையில் வைக்க முடியுமா? முடியுமென்றால் எப்படி?
குதிரை நகர்த்தல் முறை :
குதிரை எப்பொழுதும் L வடிவ பாதையில்தான் நகரும். L வடிவ பாதையில், மொத்தமாக மூன்று கட்டங்கள் தாண்டும். பாதையில் வேறு காய்கள் இருந்தாலும், அவற்றைத் தாண்டிச் செல்லும். ஆனால் நகர்த்தலின் முடிவிலிருக்கும் கட்டத்தில் வேறு காய்கள் இருக்க கூடாது. 3x3 பலகையில் ஒரு குதிரை வீரன் செல்லக் கூடிய இரண்டு சாத்தியக்கூறுகளை கீழேயுள்ள படங்கள் காட்டுகின்றன.
Monday, August 18, 2008
குதிரை வீரர்கள்
Posted by யோசிப்பவர் at 11:26 PM
Labels: Puzzles, புதிர், மொத்தம், விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
யோசிப்பவரே,
ஏழு என்ன எட்டே வைக்கலாம் போல இருக்கிறதே!
1 2 3
4 5 6
7 8 9
என கட்டங்களைக் குறித்துக் கொண்டோமானால்,
முதலில் 7-ல் தொடங்கி 2,9,4,3,8,1,6 என மொத்தம் 8 வீரர்களை நிறுத்தாலாம் அல்லவா?
இல்லை புதிரைத் தப்பாகப் புரிந்து கொண்டுவிட்டேனா?
http://elavasam.blogspot.com/2008/08/blog-post.html
தமிழில் குறுக்கெழுத்து புதிர் ஒன்று போட்டு இருக்கிறேன். வந்து பாருங்கள்.
No you can't. You need atleast 4 empty places to place a knight and then move it. You can only place 6 knights in the method you explained.
சுலபம். முதல் குதிரையை எந்த கட்டத்தில் இருந்து நகர்த்த ஆரம்பித்தோமோ அந்த கட்டத்தில் முடிப்பது போல இரண்டாம் குதிரையை நகர்த்த வேண்டும். இரண்டாம் குதிரையை நகர்த்த ஆரம்பித்த கட்டத்தில் மூன்றாம் குதிரையை நிறுத்துமாறு நகர்த்த வேண்டும்.
இம்முறையில் நிறுத்தினால் இவ்வாறு வரலாம் :
+-----------------------+
| | | |
| 7 | 2 | 5 |
| | | |
+-----------------------+
| | | |
| 4 | | |
| | | |
+-----------------------+
| | | |
| 1 | 6 | 3 |
| | | |
+-----------------------+
அன்புடன்
முத்து
Let Column be A,B,C an row be 1,2,3
Moves are:
B3 to C1
C3 to A2
A1 to B3
C2 to A1
B1 to C3
A3 to B1
C2 to A3
Thanks for making me think :))) Its a nice puzzle.
இ. கொத்தனாரே,
புதிரை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் என்றுதான் நானும் நினைக்கிறேன். முதலில் குதிரையை பலகையில் வைக்கும்பொழுது, வைக்கப்படும் கட்டம் காலியாக இருக்க வேண்டும். அப்புறம் அதை ஒரு முறை நகர்த்துவதற்கும் இடம் வேண்டும். இந்த முறையில் எட்டு வைக்க முடியாது. ஏழுதான் முடியும்.;-)
Anony,
We can place the 7 Knights in the above method. Try more.
Hi,
The answer is
0 1 4
3 0 6
5 7 2
Thanks,
Amar
Yes. I got it.
2 4 7
x x 1
3 5 6
முத்துக்குமார்,
ஆமாம் சுலபம்தான். நான் நீங்கள் விளக்கிய முறையில் தான் விடை கண்டுபிடித்தேன். ஆனால் இந்த முறையில் இல்லாமலும் போடலாம் என்று வெண்பூவின் விடையும், அமரின் விடையும் கூறுகின்றன.
விரைவாக விடை கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள்!!;-)
வெண்பூ, அமர்,
உங்கள் இருவர் விடையும் சரிதான் வாழ்த்துக்கள்!! மேலும் புதிர்கள் வந்து கொண்டேயிருகின்றன. தயாராயிருங்கள்!!;-)
Anony,
Your answer is also correct!!
Post a Comment