இன்றிலிருந்து நமது வலத்துணுக்கில் ஒரு புதிய பகுதி!!!
சூடோகு!!!(கீழே இருக்கு பாருங்க)
சூடோகு பற்றி அறிமுகம் தேவையில்லை என்றெண்ணுகிறேன். இருந்தாலும் தெரியாத ஒன்றிரண்டு பேருக்காக....
மொத்தம் 9x9 கட்டங்கள். இவை 3x3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 1 - 9 வரையிலான எண்களால் நிரப்ப வேண்டும். ஒரு எண் ஒரு வரிசையில் (இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்) ஒரு தடவைதான் வர வேண்டும். அதே மாதிரி ஒரு எண் அது இருக்கும் 3x3 கட்டத்திலும் ஒரு முறைதான் வர வேண்டும். ஆரம்பத்தில் சில எண்கள் கொடுக்கப்படும். அதிலிருந்து நீங்கள் மற்றவற்றை இட்டு நிரப்ப வேண்டும். குருட்டாம்போக்கில் நிரப்ப முடியாது. ஒவ்வொரு எண்ணையும் தர்க்கரீதியாக(Logical) நிரப்பினால் மட்டுமே முடிக்க முடியும்.
சூடோகு பற்றிய யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. முக்கியமாக Message Box எப்படி வருகிறது என்று தெரிய வேண்டும்.
வாசகர்களே! சூடோகு நிரப்பி மகிழுங்கள்.
Tuesday, November 29, 2005
சூடோகு மூலை
Posted by யோசிப்பவர் at 8:32 PM
Labels: அறிவிப்புகள், மொத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
யோசிப்பவரே,
சூடோகு நன்றாக இருக்கு. ஆனால் இந்த புதிர் ஒரு வித mirror இமமேஜ் போல் இருக்க வேண்டும். Crosswordல் இருப்பது போல்.
http://www.sudoku.com/ பார்த்தால் உங்களுக்கே புரியும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
தேசிகன்
நன்றி தேசிகன். ஆனால் மிரர் இமேஜ் என்று எதை சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை(நீங்கள் குறிப்பிட்டுள்ள சைட்டை ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்). தோற்றத்தை சொல்கிறீர்களா அல்லது அடிப்படையிலேயே தவறிருப்பதாக கருதுகிறீர்களா?
அப்புறம் தேசிகன் அண்ணாச்சி, நம்ம சுஜாதாவுக்கு என்னாச்சு? ரெண்டு வாரமா அவரை ஆளை காணோமே(ஆனந்த விகடன்)?
எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. இந்த சுட்டியில் கலர் அடித்து காண்பித்துள்ளேன். புரியவில்லை என்றால் எனக்கு தனி மடல் அனுப்புங்கள்.
http://img.photobucket.com/albums/v166/desikann/sudokumonq.jpg
Post a Comment