Thursday, November 17, 2005

கேக்கு கணக்கு

இன்னைக்கு ஒரு கேக்கு கணக்கு கேக்கலாம்னா, கேக்கறதுக்குள்ள எனக்கு ஒரு கேக்கு மிஸ்ஸாயிருச்சி. சரி! இப்ப கணக்க பாக்கலாம். என்னோட நண்பனோட காதலிக்கு இன்னைக்கு பிறந்தநாள். அவளுக்கு கொடுக்கறதுக்குன்னு தலைவர் கேக் டப்பா வாங்கிட்டு போனார். ஆனாப் பாருங்க அவள பார்க்க போற வழியிலே அவனோட நண்பன் பழனி வந்துட்டான். எழவெடுத்தவன் வந்துட்டானேன்னு, வேற வழியில்லாம கொண்டு போன கேக்கில் பாதிய அவனுக்கு கொடுத்தான். ஆனா நம்ம பழனிக்கு பெரிய மனசு! ஒரு கேக்க திருப்பி கொடுத்துட்டான். ஆனாலும் நம்மாளுக்கு கெரகம் விடலை. இதே மாதிரி போற வழியில அவனோட நண்பர்கள் ஆறு பேர், ஒருத்தர் மாத்தி ஒருத்தரா பார்த்தான். ஒவ்வொருத்தருக்கும் தன்னோட கையிலிருந்த கேக்கில் பாதிய கொடுத்தான்(தர்மபிரபுபுபு...). அதே மாதிரி எல்லா நண்பர்களுமே ஒரு கேக்க திரும்ப கொடுத்துட்டாங்க. கடைசியா நம்ம தங்கச்சி(அதாங்க, அவன் காதலி! சே எப்பவும் அண்ணனாவே இருக்கேன்!?!) கைல ரெண்டே ரெண்டு கேக்கை போய் கொடுத்திருக்கான்.

இப்ப கணக்கு என்னன்னா நம்ம நண்பன் மொதல்ல எத்தன கேக் எடுத்துட்டுப் போனான்? இது பெரிய கணக்கான்னு கேக்கறீங்களா? சின்ன கணக்குதான். ஆனா நல்ல (சுவையான) கணக்கு.

5 comments:

Show/Hide Comments

Post a Comment