Friday, October 19, 2012

வழிமொழி - 2

சென்ற வழிமொழிக்கு வெகு சிலரே விடை கூறியிருந்தாலும், பலரும் முயன்றது ஹிட்டுகளின் மூலம் புரிந்தது. செயலி எழுதிய மனுவுக்கு நன்றி!!

இந்த முறை ஒரு சினிமாப் பாடல், அதே சமயம் இலக்கியப் பாடலும்கூட. எந்த சினிமா, எந்த இலக்கியம் என்பதையும் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள்  பாடலை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.

எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!

யோசனைகள்:
 மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும்.

 மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.



சென்ற வழிமொழிக்கான விடை :
ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்

 விடை கண்டுபிடித்தவர்கள் : ராமராவ், சுரேஷ்,நாகராஜன், சாந்தி நாராயணன்.

17 comments:

Show/Hide Comments

Post a Comment