Friday, October 12, 2012

வழிமொழிப் புதிர் - 1

இது நண்பர் மனு அறிமுகப்படுத்திய புதியப் புதிர்!! வழிமொழி !!
இதற்கான செயலி எழுதியதும் அவரே!


ஒரு சொற்றொடர் அல்லது பத்தி புதிராக அமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் பழமொழி அல்லது சொற்றொடரை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும். 

எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

   யோசனைகள்: 
மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும். 
மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.

இந்த முறை என்னுடைய ஃபேவரைட் எழுத்தாளர் சுஜாதாவின் கவிதை ஒன்றை புதிராக்கியிருக்கிறேன். 


புதிர் சரியாக Load ஆகவில்லையென்றால் நீங்கள் ஒரு முறை Java அப்டேட் செய்ய வேண்டியிருக்கும்.

8 comments:

Show/Hide Comments

Post a Comment