Friday, March 09, 2012

சொல் கலை அறிமுகம்

Hindu, Indian Express போன்ற நாளிதழ்களில் Jumbled Words புதிர்கள் பார்த்திருப்பீர்கள். அதன் தமிழ் வடிவமே இது. இதை இணையத்தில் முதலில் அறிமுகப்படுத்தியவர் பார்த்தசாரதி. நான் அதற்கு கொஞ்சம் கலர் கொடுத்து, கட்டங்களை க்ளிக்கியே, எழுத்துக்களை ஒழுங்காக அடுக்க script எழுதியிருக்கிறேன். கலர்கள் தெரியாவிட்டால் சிறிது நேரம் விட்டு page refresh செய்து பாருங்கள்.

முதலில் இருக்கும் நான்கு வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “கல்கி படித்திருந்தால் இவரைத் தெரியாமல் இருக்காது!!” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடை அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.

முதல் முறை என்பதால் கொஞ்சம் எளிதாகத் தான் கொடுத்திருக்கிறேன். கலைமொழியை விட எளிதான புதிர்தான். இந்தப் புதிர் குறித்த உங்கள் கருத்துக்களையும் தயங்காமல் கூறுங்கள்!!!



1.
2.
3.
4.


கல்கி படித்திருந்தால் இவரைத் தெரியாமல் இருக்காது!!

23 comments:

Show/Hide Comments

Post a Comment