ஒரே ஒரு ஊர்ல ஒரு சதுரம் இருந்துச்சாம். அந்த சதுரத்துக்குள்ள ஒரு வட்டமாம். அந்த வட்டத்தோட விளிம்பு, நாலு பக்கமும் சதுரத்தோட விளிம்புங்கள தொட்டுகிட்டு இருந்திச்சாம். இப்ப சதுரத்தோட ஒரு மூலைல, வட்டத்துக்கும் சதுரத்துக்கும் இடையில கொஞ்சம் இடம் இருக்கும்ல; அதை அடைச்ச மாதிரி ஒரு செவ்வகம் வந்து உக்காந்திச்சு. அதாவது அந்த செவ்வகத்தோட ரெண்டு பக்கமும், சதுரத்தோட மூலைல ஒட்டிகிட்டு இருக்கும். அதே நேரத்துல செவ்வகத்தோட எதிர் முனை, வட்டத்த தொட்டுகிட்டு இருக்கும். இப்ப அந்த செவ்வகத்தோட ஒரு பக்கம் 7 அடி; இன்னொரு பக்கம் 14 அடி. அப்படின்னா நடுவுல இருக்கிற வட்டத்தோட ஆரம் என்ன?
Thursday, April 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
35 அடி
யோசிக்க வைத்ததற்கு மிக்க நன்றி.
அன்பு நித்யகுமாரன்
நித்யகுமாரன்,
விளக்கம் ப்ளீஸ்!!;-)
35
KP,
Please explain.
வட்டத்தோட ஆரையை r எனக் கொள்க.
செவ்வகம் வட்டத்தைத் தொடும் புள்ளியிலிருந்து வட்டத்தின் மைத்திற்கு ஒரு கோடு வரைக. அக்கோட்டிற்கும் நிலைக்குத்துக் கோட்டிற்கும் இடையான் கோணத்தை x எனக் கொள்க.
r cosx + 7 = r
r sinx + 14 = r
இந்த இரு சமன்பாடுகளையும் தீர்த்தால் r இற்கு வரும் விடை ஆரையை தரும்.
எனவே வட்டத்தின் ஆரைக்கு இரு பெறுமானங்கள் வரும் அவையாவன 7 அடி மற்றும் 35 அடி. 7 அடி பொருத்தமில்லாததாகையால் 35 அடியே வட்டத்தின் ஆரையாகும்.
மண்ட காயுது!! :-)
//KP,
Please explain// Grrrr!
ஆரம் = (7+14) +/- (sqrt(2*7*14)) இந்த sqrt ல எளிதாக கணிக்க உதவியாக 7 (=14/2). ஆரத்தைக் கணிக்கும் equationக்கு தரவு நான் கொடுத்த விக்கி சுட்டி.
((r − x)2 + (r − y)2 = r2
r2 − 2r(x + y) + x2 + y2 = 0
.....
r=x+y +/- sqrt(2*x*y) இதில் x,y நீள்சதுரத்தின் பக்கங்கள். r ஆரம். 7 is impossible as radius.
Post a Comment