ஒரு கொலை! கொடூரமான கொலை!! கொலை செய்தவனை பிடித்துக் கோர்ட்டில் நிறுத்தினார்கள்(நல்லவேளையாக அரசியல் குறுக்கீடுகள் எதுவுமில்லை!). விசாரணை செய்த நீதிபதி, கொலையாளிக்கு மரண தண்டனை விதித்தார்(மனிதநேய ஆர்வலர்கள் யாரும் போராடவில்லை). கொலை நடந்த கொடூரமான முறையை கவனத்தில் கொண்ட நீதிபதி, மரணதண்டனை விதித்தோடு திருப்தியடையவில்லை. உளவியல் ரீதியாகவும் அவனை துன்புறுத்த எண்ணினார். அதனால் அடுத்த வாரத்தில், அவன் எதிர்பாராத ஒரு நாளில், அவனை தூக்கிலிடவேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இதனால் தினமும், 'இன்று நம்மை தூக்கில் போட்டு விடுவார்களோ என்று ஒவ்வொரு நாளும் அவன் பயந்தே சாவான்' என்று எண்ணினார். ஆனால் இந்த தீர்ப்பை கேட்டதும் கொலையாளி மிகவும் மகிழ்ந்தான். அடுத்தவாரத்தில் ஒரு நாளில், நீதிபதி தீர்ப்பளித்தபடி, அவனை தூக்கிலிட்டார்கள்.
இப்ப கேள்வி(கள்) என்னன்னா(எத்தனை "ன"?!), தீர்ப்பு சொன்னதும் கொலையாளி ஏன் சந்தோஷப்பட்டான்? அவனை வாரத்தின் எந்த நாளில் தூக்கிலிட்டார்கள்?
இப்ப கேள்வி(கள்) என்னன்னா(எத்தனை "ன"?!), தீர்ப்பு சொன்னதும் கொலையாளி ஏன் சந்தோஷப்பட்டான்? அவனை வாரத்தின் எந்த நாளில் தூக்கிலிட்டார்கள்?
19 comments:
ஸ்...அபாடா!
ஆரம்பிச்சிட்டீங்களா?
வருடத்தின் கடைசி வாரம்.
திங்க கிழம
மாசிலா,
//ஸ்...அபாடா!
ஆரம்பிச்சிட்டீங்களா?
//
அமாம்! தொழிலை விட முடியாதுல்ல!!;-)
//வருடத்தின் கடைசி வாரம்.//
நான் எந்த வாரம் என்று கேட்கவில்லை. அதுதான் தீர்ப்பிலேயே அடுத்த வாரம் என்றிருக்கிறதே!
//திங்க கிழம//
எந்த கிழமை சொன்னாலும் எனக்கு விளக்கம் தேவை! இன்னொரு கேள்வியும் கேட்டிருக்கேன் பாருங்க!!
யோசிப்பவரே!
உங்களுக்கு நான் ஒரு புதிர் போட்டிருக்கேன்.
போய் கொஞ்சம் எட்டி பாப்பீங்களா!
அவனுடைய மனைவியின் பிறந்த நாள்!
அவனது கல்யாண நினைவு நாள்!
பிப்ரவரி 29
அவன் வாரம்னா வருடம்னு நெனைச்சிட்டு இருந்தான்.
//அவனுடைய மனைவியின் பிறந்த நாள்!
அவனது கல்யாண நினைவு நாள்!
பிப்ரவரி 29
அவன் வாரம்னா வருடம்னு நெனைச்சிட்டு இருந்தான்.
//
ஆகா! மாசிலா வித்தியாச வித்தியாசமாய் யோசிக்க ஆரம்பிச்சுட்டார் டோய்!
பாருங்க மக்களே! பாருங்க!
இந்தப் பாவத்துக்கெல்லாம் நான் ஆளாவ மாட்டேன். சொல்லிபுட்டேன்!!
பின்ன என்னங்க!
உலகத்துல எந்த ஆண்பிள்ளைக்காவது அவருடைய மனைவியின் பிறந்த நாளோ அல்லது கல்யாண நாளோ ஞாபகம் இருந்தது உண்டா?
//உலகத்துல எந்த ஆண்பிள்ளைக்காவது அவருடைய மனைவியின் பிறந்த நாளோ அல்லது கல்யாண நாளோ ஞாபகம் இருந்தது உண்டா?
//
எனக்கு எப்படித் தெரியும்? நமக்கு இன்னும் கல்யாணமே ஆவலையே!;-)
தீர்ப்பு கொடுத்த அடுத்த நாளே தூக்கு போட்டு இருப்பாங்க, ஏன்னா அவன் ஒரு வாரம் நம்ம பயப்படனும்னு விட்டு வைத்து கடைசி நாளில் தூக்கு போடுவாங்க என்று மகிழ்ந்தான்!
//தீர்ப்பு கொடுத்த அடுத்த நாளே தூக்கு போட்டு இருப்பாங்க, ஏன்னா அவன் ஒரு வாரம் நம்ம பயப்படனும்னு விட்டு வைத்து கடைசி நாளில் தூக்கு போடுவாங்க என்று மகிழ்ந்தான்!
//
ம்ஹூம்! உங்கள் விளக்கம் தவறு வவ்வால்!
சரி இதுக்கு சொல்லுங்க யோசிப்பவர்,
ஒரு வீரன் கோட்டையை காவல் காக்கும் பணியில் இருந்தான் , இடையில் தூங்கிவிட்டான், அப்போது ஒரு கனவு வந்தது , அதில் எதிரி நாட்டு ஒற்றன் அதிக பணம் தருவதாக ஆசைக்காட்டி ராணுவ ரகசியத்தை கேட்டான் , தரவில்லை எனில் , அவனை அவர்கள் ஒற்றன் என தவறான தகவலை மன்னருக்கு கொடுத்து தூக்கு தண்டனை வாங்கி தருவேன் என மிரட்டினான். வேறு வழி இல்லாமல் வீரனும் ராணுவ ரகசியங்களை எடுத்து வந்து கொடுக்கும் போது மாட்டிக்கொண்டான் , அவனை பிடித்து மன்னர் முன் கொண்டு போய் நிறுத்தினர் அவர் தன் வாளை உருவி அவன் தலையை வெட்டிவிட்டார். நகர் வலம் வந்த மன்னர் தூங்கி கொண்டு இருக்கும் காவல் வீரனை பார்த்து கோவத்தில் வாளை எடுத்து அவன் தலையை வெட்டிவிட்டார்.
இது சரியா?
ஞாயிற்று கிழமை,ஆகஸ்ட் 15.
நான் இன்னொரு புதிர் போட்டிருக்கேன்.
//சரி இதுக்கு சொல்லுங்க யோசிப்பவர்,...
..இது சரியா? //
சரியில்லைதான் வவ்வால்! தூங்கி கொண்டு இருக்கும்பொழுதே மன்னன் தலையை வெட்டிவிட்டான் என்றால், வீரன் கண்ட கனவு என்ன்வென்று நமக்குத் தெரிய வாய்ப்பில்லையே!!;-)
இன்னைக்கு என்ன எனக்கு இன்டர்வியூவா? ஆளாளுக்கு ரவுண்டு கட்டி கேள்வியாக கேட்கிறீர்கள்!!;-)
இதுக்கு இதான் விளக்கமாக இருக்கும் ,
அவன் மகிழ காரணம் எந்த நாள் வந்து கேட்டாலும் இன்று எதிர்பார்த்தேன் என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என திட்டம் போட்டு இருப்பான்.
இன்று தூக்கு என்று எதிர்பார்த்தேன் என அவன் சொல்கிறான் அன்றே தூக்கில் இட்டால் அது அவன் எதிர்பாராத நாள் தானே, எனவே வாரத்தில் ஏதோ ஒரு நாளில் அவனை தூக்கில் போட்டு விட்டார்கள்!
யோசிப்பவர்,
ரொம்ப பழைய கதை தான் அது ஆனாலும் கனவு எப்படி தெரியும் என்று சரியா சொல்லிடிங்க !
Post a Comment