யாரோ ஒருவன் மட்டும் சரியான விடையளித்திருக்கிறார். பாராட்டுக்கள்!!!
இந்த புதிரில் நாம் ஷூவின் விலை எவ்வளவாயிருந்தாலும், சில்லறைகளை எண்ணாமல் சில குறிப்பிட்ட பைகளை மட்டும் கொடுத்து வாங்கி விட வேண்டும்.
இதற்கு நாம் ஒவ்வொரு பையிலும், அடுத்தடுத்த இரண்டின் மடங்கு(பைனரி!) மதிப்புள்ள பணத்தை கட்டிக்கொள்ள வேண்டும். அதாவது முதல் பையில் 2^0=1 ரூபாய், இரண்டாவது பையில் 2^1=2 ரூபாய், 3வதில் 2^2=4, 4வதில் 2^3=8....9வது பையில் 2^8=256 ரூபாய், 10வது பையில் மீதியுள்ள 489 ரூபாய் என்று கட்டிக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஷூவின் விலை என்னவாயிருந்தாலும், சில்லறைகளை எண்ணிக் கொண்டிருக்காமல், சில பைகளை மட்டும் கொடுத்து வாங்கி விட முடியும்.
உதாரணத்துக்கு, ஷூவின் விலை 229 ரூபாய் என்று வைத்து கொள்ளுங்கள். அப்பொழுது 1, 3, 6, 7, 8 ஆகிய பைகளை மட்டும் கொடுத்து வாங்க வேண்டும். அதுவே ஷூவின் விலை 739 ரூபாய் என்றால், நீங்கள் கொடுக்க வேண்டிய பைகள் 2, 4, 5, 6, 7, 8, 10.
Tuesday, February 27, 2007
சில்லறை விடை
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
விடை வந்துடுச்சா.. நன்றி.
சேதுக்கரசி,
விடை சொல்வதற்கெல்லாம் நன்றி சொல்லும் ஒரே ஆள் நீங்கள்தான்!!!
அப்புறம் உங்கள் மௌனம் ரொம்ப பலமாயிருக்கே!?
;-)
மிக்க நன்றி!
:)
சிபி,
யாருக்கு நன்றி சொல்லியிருக்கீங்க? எனக்கா? சேதுக்கரசிக்கா?;-)
அப்புறம், உங்க சண்டைத் திடலில் நான் போட்ட விண்ணப்பத்துக்கு பதிலே சொல்லலையே?!?!
//அப்புறம் உங்கள் மௌனம் ரொம்ப பலமாயிருக்கே!?//
ஆரம்பத்தில் அப்படித்தான்.
Post a Comment