பத்ரியை பார்த்ததும் ஜோன்ஸுக்கு சிரிப்பு வந்து விட்டது.
"என்னடா, கோயில் உண்டியலை உடைச்சுட்டியா?" நக்கலாக கேட்டான் ஜோன்ஸ்.
"அடப் போடா நீ வேற! நம்ம அண்ணாச்சி, கடைல சில்லறை வேணும்னு கேட்டிருந்தார். இன்னைக்கு பேங்க்குக்கு போனப்ப ஞாபகம் வந்தது. சரின்னு, கையிலிருந்த ஆயிரம் ரூபாய்க்கும் சில்லறை வாங்கி, ஒரு ரூபாயா கொண்டுபோய் கடைல கொடுத்தா, அவர் ஏற்கனவே வேற இடத்துல 1500 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டாராம். இது வேண்டாம்னுட்டார்." சலித்தபடி பத்ரி அந்த சாக்குப் பையை ஓரமாக வைத்தான்.
"இப்ப இதை என்ன பண்ணப் போற? திரும்பவும் கொண்டு போய் பேங்குல கொடுத்துற வேண்டியதுதானே?"
"டைம் இப்பவே ஆறாகி விட்டதே! சாயங்காலம் போய் ஒரு ஷூ வாங்கலாம்னு நினைச்சேன். ஆனா இப்ப கடைல போய் நின்னுகிட்டு சில்லறைய எண்ணிகிட்டிருந்தா நல்லாவா இருக்கும்? நாளைக்குதான் வாங்கமுடியும் போல!", என்றான் எரிச்சலோடு.
ஜோன்ஸ் சிறிது நேரம் யோசித்தான். "நீ கடைல போய் சில்லறைய எண்ண வேண்டாம். ஆனா, இன்னைக்கே ஷூ வாங்கிரலாம். நான் சொல்றபடி செய்."
பிறகு இருவரும் சாக்குப்பையிலிருந்த சில்லறைகளை பிரித்து, எண்ணி, பத்து பைகளில் கட்டினர்.
ஜோன்ஸ், "இப்ப நீ சில்லறைகளை எண்ணாமலேயே பணம் கொடுத்து ஷூ வாங்கிரலாம்!" என்று கண் சிமிட்டினான்.
அப்படியென்றால் அவர்கள் சில்லறைகளை எவ்வாறு பிரித்துக் கட்டியுள்ளனர்?
7 comments:
நல்லா தான் யோசிக்க வைக்கிறீங்க!
//நல்லா தான் யோசிக்க வைக்கிறீங்க! //
ஆனால் யாரும் பதில் சொல்ல மாட்டேன்கிறீர்களே?!?!
;-)
1,2,4,8,16,32,64,128,256,489 - சரியா?
100 100 ஆ பத்துநூறு.
நளாயினி,
//100 100 ஆ பத்துநூறு. //
ஷுவோட விலை 750 ரூபாய்னா உடனே எப்படி குடுப்பீங்க?
1,2,4,6,8,16,32,64,128....
உங்கள் விடை சரிதான் அனானி. ஏற்கெனவே யாரோ ஒருவனும் இதற்கு சரியான விடையளித்திருந்தார்.
Post a Comment