Friday, October 26, 2012

வழிமொழி - 3

சென்ற முறை மிக எளிதான புதிராக அமைந்துவிட்டதென சுரேஷ் குறைபட்டிருந்தார். அதனால் இந்த முறை சிறிது கஷ்டமான புதிர்.

எனது கதை எழுதுகிறேன் - http://kathaiezuthukiren.blogspot.in/ தளத்திலிருக்கும் ஒரு கதையின் ஒரு சிறிய பத்தியையே இங்கு புதிராக்கியிருக்கிறேன்.

மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் விடையை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.

எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

 புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!

 யோசனைகள்:
மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும். 

மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.

சென்ற வழிமொழிக்கான விடை :

இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ -
மன முந்தியதோ விழி முந்தியதோ
கர முந்தியதோ எனவே
உயர் சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கணி வீதியிலே மணிப் பைந்தொடி
நாரி வசந்த ஒய்யாரி
பொற்பந்து கொண்டாடினாளே

- குற்றால குறவஞ்சிப் பாடல். காதலன் திரைப்படத்தில் இடம்பெற்றது(வீடியோ பார்க்க).

சரியான விடையளித்தவர்கள் :- டைனோ, சுரேஷ், தினேஷ், முத்து சுப்ரமணியம், ராமராவ், நாகராஜன்,  கோடீஸ்வரன் துரைசாமி, இளங்கோவன்.

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Friday, October 19, 2012

வழிமொழி - 2

சென்ற வழிமொழிக்கு வெகு சிலரே விடை கூறியிருந்தாலும், பலரும் முயன்றது ஹிட்டுகளின் மூலம் புரிந்தது. செயலி எழுதிய மனுவுக்கு நன்றி!!

இந்த முறை ஒரு சினிமாப் பாடல், அதே சமயம் இலக்கியப் பாடலும்கூட. எந்த சினிமா, எந்த இலக்கியம் என்பதையும் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள்  பாடலை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.

எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!

யோசனைகள்:
 மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும்.

 மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.

சென்ற வழிமொழிக்கான விடை :
ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்

 விடை கண்டுபிடித்தவர்கள் : ராமராவ், சுரேஷ்,நாகராஜன், சாந்தி நாராயணன்.

Friday, October 12, 2012

வழிமொழிப் புதிர் - 1

இது நண்பர் மனு அறிமுகப்படுத்திய புதியப் புதிர்!! வழிமொழி !!
இதற்கான செயலி எழுதியதும் அவரே!

ஒரு சொற்றொடர் அல்லது பத்தி புதிராக அமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் பழமொழி அல்லது சொற்றொடரை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும். 

எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

   யோசனைகள்: 
மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும். 
மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.

இந்த முறை என்னுடைய ஃபேவரைட் எழுத்தாளர் சுஜாதாவின் கவிதை ஒன்றை புதிராக்கியிருக்கிறேன். 

புதிர் சரியாக Load ஆகவில்லையென்றால் நீங்கள் ஒரு முறை Java அப்டேட் செய்ய வேண்டியிருக்கும்.