உங்களுடைய ரோல் மாடலை தேர்ந்தெடுக்க எளிய வழி.
ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை மூன்றால் பெருக்குங்கள். வந்த விடையோடு மூன்றை கூட்டுங்கள். பின் மறுபடி 3ஆல் பெருக்குங்கள். கடைசியாக கிடைத்திருக்கும் இரண்டிலக்க எண்ணில் உள்ள இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். அந்தக் கூட்டுத்தொகையிலிருந்து இரண்டை கழியுங்கள். முடிந்தது.
கணக்கை சரியாக போட வேண்டும். எதையும் மிஸ் செய்து விடக் கூடாது. கூட்டல் கழித்தல் எல்லாம் ஒரு தடவைக்கு, இரண்டு தடவை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் தவறான ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்து தொலைத்து விடுவீர்கள்
இப்பொழுது கடைசியாக உங்களுக்கு கிடைத்திருக்கும் எண்ணைக் கொண்டு, கீழிருக்கும் லிஸ்டில், உங்கள் ரோல் மாடல் யார் என்று கண்டு கொள்ளுங்கள். அவரையே நீங்கள் Follow செய்தால், வலையுலகில் வெற்றி நிச்சயம் என்பது உறுதி கிடையாது.
1) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
2) காந்தி.
3) ஐஸக் நியூட்டன்.
4) அப்துல் கலாம்.
5) பில் கேட்ஸ்.
6) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
7) யோசிப்பவர்.
8) பிராட் பிட்.
9) ஷிட்னி ஷெல்டன்.
Tuesday, November 10, 2009
உங்கள் ரோல் மாடல் யார்?
Posted by யோசிப்பவர் at 11:42 AM
Labels: நகைச்சுவை, மொத்தம், விளையாட்டு, வேலைக்காகாதவை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நானும் நல்லா யோசிப்பேன் பாசு..
என்னையும் அந்த ஜீப் லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க!!
கிர்ர்ர்ர்
என்னங்க இப்படியும் ஒன்னுங்களா ? இதெல்லாம் நம்பளாம் தானே .. ம் ம் ?
Post a Comment