அரிச்சுவடியில் ஆரம்பிக்கும் எண்களின் ஆர்ப்பாட்டம், ஆயுள் வரை நீடித்தாலும், சில எண்கள் மட்டும் கவர்ச்சிகரமாய் அமைந்து விடுகிறது. இத்தகைய எண்களை கண்டுபிடித்ததாலேயே ராமானுஜம் உலகப்புகழ் பெற்றார்.
இப்பொழுது நீங்கள் கண்டுபிடிக்கப்போகும், இந்த ஒன்பதால் வகுபடும் ஆறு இலக்க எண்ணும் பிரபலமான ஒன்றுதான். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!
1. அனைத்து இலக்கங்களும் வேறு வேறு எண்களால் ஆனது.
2. இரண்டாம் இலக்கத்தையும் மூன்றாம் இலக்கத்தையும் பெருக்கினால் நான்காம் இலக்கம் வரும்.
3. ஐந்தாம், மூன்றாம் இலக்கங்களை கூட்டினாலும், நான்காம் இலக்கத்திலிருந்து முதல் இலக்கத்தை கழித்தாலும் ஆறாவது இலக்கம் வரும்.
எனில் அந்த ஆறு இலக்க எண் எது?
முடிந்தால் அந்த எண் ஏன் சிறப்பு வாய்ந்தது என்றும் கண்டுபிடியுங்கள்!!!
Thursday, October 08, 2009
எண் என்ப...?!
- ஸ்ரீதேவி.
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
பொறுமையா யோசிக்கிறேன். இப்போதைக்கு வேற யாராவது பதில் சொன்னா தெரிஞ்சுக்க இந்த பின்னூட்டம். :)
வாங்க வெண்பூ,
குறுக்கெழுத்துப் புதிர்னா எஸ்கேப்பாய்டறீங்க. இன்றைக்கு நம்பர் புதிர்னதும் அட்டண்டென்ஸா?!;-))
எந்த எண்ணும் ஒரு முறைக்கு மேல் வருவதில்லையென்பதிலிருந்தும் இரு இலக்கங்களைக் கூட்டவோ கழிக்கவோ, பெருக்கவோ மற்றொரு இலக்கம் வருகிறதென்பதிலிருந்தும் பூச்சியம் இல்லயென்று
தீர்மானிக்கலாம்.
அதன் பிறகு விடை சற்று சுற்றி வளைத்து 1/7 கண்டுபிடிக்கும்போது வரும் 142857தான் என்று அடைந்தேன்.
1+2+ ...+9 = 45, அவற்றில் மூன்றை நீக்க, 9ஆல் வகுபடும் எண் என்றால் இலக்கங்களின் கூட்டற்பலன் 27 அல்லது 36ஆக இருக்கும். இத்தகவல் விரைவாக விடையைக் கண்டுபிடிக்க உதவுமா என்று பார்க்கவேண்டும்
வாஞ்சி,
கலக்கிட்டீங்க!! சிறப்பையும் கண்டுபிடித்துவிட்டதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்!!
142857
Not sure about the speciality :(
got the speciality about the number from Wiki :)
வெண்பூ,
சரியான விடை!!. ஸ்பெஷாலிட்டிக்கும் பாராட்டுக்கள்!!
//
வாங்க வெண்பூ,
குறுக்கெழுத்துப் புதிர்னா எஸ்கேப்பாய்டறீங்க. இன்றைக்கு நம்பர் புதிர்னதும் அட்டண்டென்ஸா?!;-))
//
நமக்கு எது நல்லா வருதோ அதை மட்டும்தானே பாக்கணும் :))
hi sridevi,
the number is 142857
speciality of this number:
if you divide 1 by 7 you get 0.142857142857142857.....
and i noticed another thing. when you multiply this number (142857) with the numbers from 1 to 6, the result is amazing...it gives the same digits but shuffled.... multiply by 7, you get all 9s.
1 x 142857 = 142857
2 x 142857 = 285714
3 x 142857 = 428571
4 x 142857 = 571428
5 x 142857 = 714285
6 x 142857 = 857142
7 x 142857 = 999999
வணங்காமுடி,
சரியான விடை சொன்னதோடு, நான் எழுத நினைச்ச சிறப்பையும் அப்படியே சொல்லிட்டீங்க!! வாழ்த்துக்கள் & நன்றி!!
124837
சிறப்புத் தெரியலை :-(
பூங்கோதை,
புதிரை கவனமா படிங்க!!
//இந்த ஒன்பதால் வகுபடும் ஆறு இலக்க எண்ணும் பிரபலமான ஒன்றுதான்.//
இப்ப உங்க விடையை சரி பாருங்க!!
என்னடா, நானா இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சேன்னு, அப்பவே சந்தேகம் வந்துச்சு. மூணு பாயிண்ட் மட்டும் சரிபார்த்துட்டு விடை போட்டுட்டேன். :-(
here it is...142857
பூங்கோதை,
இப்ப சரியா சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்!!
கான மயிலாட...
வணகங்காமுடி 142857 என்ற எண்ணை 2,3,..,6, இவற்றால் பெருக்கிப்பார்த்து அதே இலக்கங்கள்ஆக மாறி வருவதை கவனித்துச் சொல்லியுள்ளார். அனால் இன்னமும் நுணுக்கமாகப் பார்த்தால் இலக்கங்களின் வரிசை மாற்றங்களும் சுழல் மாற்றமமாக (cyclic rearrangement) வருகின்றன.
1 ஐ 7 ஆல் வகுக்க அவ்வப்போது பூச்சியத்தைப் பின்னிட்டு வகுத்துக் கொண்டே போவோம். (அதாவது 1.00000000..... என்ற எண்ணைத் தான் 7 ஆல் வகுக்கிறோம்).
அதனால் முன்பே வந்த மீதி மற்றொரு முறை வந்த பின் முதல்முறை தொடர்ந்து வந்த மீதிகள் அதே வரிசையில் வந்து சுழலைத் தருகின்றன.)
உங்களின் இந்த பதிவினை 'வலைச்சரத்தில்' அறிமுகம் செய்துள்ளேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும். நன்றி.
madhavan 17-12.2010
Post a Comment