சபரிமலை போனவாரம் பாதயாத்திரையாக சபரிமலை சென்றிருந்தேன். ஒவ்வொரு வருடமும் போவதுதான்.. இந்தமுறை எனது நண்பரையும் அழைத்துக்கொண்டு.. சிலவிசயங்களை இங்கே அறிவித்தே ஆக வேண்டிய கட்டாயம்.. சுகாதாரம்: சுட்டுப் போட்டாலும் சுகாதாரத்தை பற்றிய எண்ணம் இந்த கேரள மக்களுக்கு வரவே வராது.. பம்பா நதியில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் குளித்து உடைமாற்றி, துணிகளை துவைத்து மாசு விளைவிக்கிரார்கள். தெளிந்த நீராய் வரும் நதி சில நிமிடங்களில் சாக்கடையாய் மாறும் அதிசயத்தை இங்கே காணலாம். ஒருவழியாக குளித்து(புனித நதியாயிற்றே!!!) மலைக்கு புறப்பட தயாராணோம். வரிசையாய் கடைகள்.. விற்பது என்னோவோ சாதாரண அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்தான். விலை மட்டும் MRP இல் 75% (கூட்டி!?) கொடுக்கணும். உதாரணமாக 1 லிட்டர் மீனரல் வாட்டர் 15 தேங்காய் எண்ணை சின்ன பாக்கெட் 3 கோல்ட் ஃபில்டர் 5 கிங்ஸ் 7
இப்படியாக ஒரு புது உலகத்துக்கு வந்த பின்னர், நமது வயிறு சிறிது கலக்கமடையவே.. கழிப்பிடம் தேடினோம். இருந்தது!!! 2 கொடுத்து நுழைவு பெற்று உள்ளே போனால் அடேங்கப்பா..உள்ளே போனால் குடலை பிடுங்கும் நாற்றம்.. பீடி சிகரெட் துண்டுகள் மூலையில் குவீயலாய்!! தாழ்ப்பாள் இல்லாத கதவுகள்..(தாழ்ப்பாளை உடைத்த சாமிக்கு அன்றைய தினத்தில் அருள் வந்து இருந்திருக்கலாம்..) வழுக்கும் தரை. பாசி பிடித்த பைப்புகள்.அதுவும் 3 லிட்டர் தண்ணீரில்தான் அத்தனையும்!!! ... ச்சே!!
ஒருவழியாக நீலிமலையை கடந்து ஸரந்குத்தியை அடைந்தோம். ஏகப்பட்ட வரிசையாய் மக்களை நிறுத்தி நிறுத்தி பின்னர் விட்டார்கள். கிட்டத்தத்ட 2 மணி நேரம்!!! கூட்டத்தில் நசுக்க நசுக்க சிதறிப்போனோம். இடையிடையே வெடிகள் வேறு.. கையிலிருந்த ஊதுபத்தியை பற்ற வைத்ததின் மூலம் இந்த கொடுமையிலிருந்து மீண்டோம்.
18 ம் படியும் ஏறியாயிற்று.. தரிசனம் காண அருகில் சென்ற போது அங்கே உட்கார்ந்து இருக்கும் ரவுடிகள், ""போலீஸ்"" என்ற போர்வையில் எல்லோரையும் பிடித்து கீழே தள்ளி விடுகின்றனர். திருப்பதியவது பரவாயில்லை கொஞ்சம் அன்பவாவது ""ஜருகண்டி"" சொல்லி நம்மை தாட்டிவிடுவர். இதற்கு நேர் மாறாக இங்கே!!
பிரசாதம் வாங்க கவுண்டருக்கு போனால் அங்கே எல்லாமே காசுதான். வெண்பொங்கல் 5 ரூபாய்?!! உப்பில்லாத பண்டம் குப்பையிலே!! வீசிவிட்டு கிளம்பினோம். நெய்ஆபிசேகம் வேறு பார்க்கணுமே!!
சுகாதரத்தை எதிர்பார்த்து யாத்திரை கிளம்புவர்கள், தயவு செய்து மனத்தை திடப்படுத்திக் கொண்டு கிளம்பவும். கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்.. போதுமானவரை வீட்டிலிருந்து புளியோதரை தேவையான அளவு பார்சல் கட்டிக்கொள்ளவும். சோப்பு, சீப்பு, போன்ற அத்யாவிசய பொருட்களை கிளம்பும் இடத்திலேயே வாங்கிக் கொள்ளுவது உத்தமம். தண்ணீர் 5 லிட்டர் அல்லது 2 லிட்டர் களில் எடுத்து செல்வது நல்லது. சாஷே பாக்கெட் ஸானிடைஸர்கள் மிகவும் முக்கியம். முடிந்தவரை வெளியே வாங்கும் நடைமுறையை தவிர்ககவும். ப்ளாஸ்டிக் கழிவுகளை அதற்குரிய தொட்டிகளில் போடவும்.
கேரள அமைச்சர்கள் சிலருக்குக்கு சில்மிச வேலைகளில் சிந்தனைகள் இருப்பதால்.. இவைகளை பற்றி நாம்தான் கவலைப் படவேண்டும்!!
1 comment:
சபரிமலை போனவாரம் பாதயாத்திரையாக சபரிமலை சென்றிருந்தேன். ஒவ்வொரு வருடமும் போவதுதான்.. இந்தமுறை எனது நண்பரையும் அழைத்துக்கொண்டு..
சிலவிசயங்களை இங்கே அறிவித்தே ஆக வேண்டிய கட்டாயம்..
சுகாதாரம்:
சுட்டுப் போட்டாலும் சுகாதாரத்தை பற்றிய எண்ணம் இந்த கேரள மக்களுக்கு வரவே வராது..
பம்பா நதியில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் குளித்து உடைமாற்றி, துணிகளை துவைத்து மாசு விளைவிக்கிரார்கள். தெளிந்த நீராய் வரும் நதி சில நிமிடங்களில் சாக்கடையாய் மாறும் அதிசயத்தை இங்கே காணலாம்.
ஒருவழியாக குளித்து(புனித நதியாயிற்றே!!!) மலைக்கு புறப்பட தயாராணோம்.
வரிசையாய் கடைகள்.. விற்பது என்னோவோ சாதாரண அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்தான். விலை மட்டும் MRP இல் 75% (கூட்டி!?) கொடுக்கணும்.
உதாரணமாக 1 லிட்டர் மீனரல் வாட்டர் 15
தேங்காய் எண்ணை சின்ன பாக்கெட் 3
கோல்ட் ஃபில்டர் 5
கிங்ஸ் 7
இப்படியாக ஒரு புது உலகத்துக்கு வந்த பின்னர், நமது வயிறு சிறிது கலக்கமடையவே.. கழிப்பிடம் தேடினோம். இருந்தது!!!
2 கொடுத்து நுழைவு பெற்று உள்ளே போனால் அடேங்கப்பா..உள்ளே போனால் குடலை பிடுங்கும் நாற்றம்.. பீடி சிகரெட் துண்டுகள் மூலையில் குவீயலாய்!! தாழ்ப்பாள் இல்லாத கதவுகள்..(தாழ்ப்பாளை உடைத்த சாமிக்கு அன்றைய தினத்தில் அருள் வந்து இருந்திருக்கலாம்..) வழுக்கும் தரை. பாசி பிடித்த பைப்புகள்.அதுவும் 3 லிட்டர் தண்ணீரில்தான் அத்தனையும்!!!
... ச்சே!!
ஒருவழியாக நீலிமலையை கடந்து ஸரந்குத்தியை அடைந்தோம். ஏகப்பட்ட வரிசையாய் மக்களை நிறுத்தி நிறுத்தி பின்னர் விட்டார்கள். கிட்டத்தத்ட 2 மணி நேரம்!!! கூட்டத்தில் நசுக்க நசுக்க சிதறிப்போனோம். இடையிடையே வெடிகள் வேறு.. கையிலிருந்த ஊதுபத்தியை பற்ற வைத்ததின் மூலம் இந்த கொடுமையிலிருந்து மீண்டோம்.
18 ம் படியும் ஏறியாயிற்று.. தரிசனம் காண அருகில் சென்ற போது அங்கே உட்கார்ந்து இருக்கும் ரவுடிகள், ""போலீஸ்"" என்ற போர்வையில் எல்லோரையும் பிடித்து கீழே தள்ளி விடுகின்றனர். திருப்பதியவது பரவாயில்லை கொஞ்சம் அன்பவாவது ""ஜருகண்டி"" சொல்லி நம்மை தாட்டிவிடுவர். இதற்கு நேர் மாறாக இங்கே!!
பிரசாதம் வாங்க கவுண்டருக்கு போனால் அங்கே எல்லாமே காசுதான். வெண்பொங்கல் 5 ரூபாய்?!! உப்பில்லாத பண்டம் குப்பையிலே!! வீசிவிட்டு கிளம்பினோம்.
நெய்ஆபிசேகம் வேறு பார்க்கணுமே!!
சுகாதரத்தை எதிர்பார்த்து யாத்திரை கிளம்புவர்கள், தயவு செய்து மனத்தை திடப்படுத்திக் கொண்டு கிளம்பவும்.
கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்..
போதுமானவரை வீட்டிலிருந்து புளியோதரை தேவையான அளவு பார்சல் கட்டிக்கொள்ளவும்.
சோப்பு, சீப்பு, போன்ற அத்யாவிசய பொருட்களை கிளம்பும் இடத்திலேயே வாங்கிக் கொள்ளுவது உத்தமம்.
தண்ணீர் 5 லிட்டர் அல்லது 2 லிட்டர் களில் எடுத்து செல்வது நல்லது.
சாஷே பாக்கெட் ஸானிடைஸர்கள் மிகவும் முக்கியம்.
முடிந்தவரை வெளியே வாங்கும் நடைமுறையை தவிர்ககவும்.
ப்ளாஸ்டிக் கழிவுகளை அதற்குரிய தொட்டிகளில் போடவும்.
கேரள அமைச்சர்கள் சிலருக்குக்கு சில்மிச வேலைகளில் சிந்தனைகள் இருப்பதால்.. இவைகளை பற்றி நாம்தான் கவலைப் படவேண்டும்!!
யாத்திரை புனிதமாக அமைய வாழ்த்துக்கள்
Post a Comment