Saturday, May 12, 2007

விடுதலை

இப்பொழுது உங்களை ஒரு அறையில் போட்டு அடைத்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்(சும்மா ஒரு கற்பனைக்குதான்!!). அந்த அறையில் மூன்று கதவுகள், வெவ்வேறு நிறத்தில்(சிகப்பு, நீலம், மஞ்சள்) உள்ளன. ஒவ்வொரு கதவிலும் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறது(பார்க்க படம்). அறைக்குள் அடைக்குமுன் உங்களிடம், அந்த குறிப்புகளில் குறைந்தபட்சம், ஒன்று சரி என்றும், ஒன்று தவறென்றும்("குறைந்தபட்சம்" - சரி, தவறு இரண்டுக்கும்) கூறப்படுகிறது. உங்களுக்கு ஏதாவது ஒரு கதவை மட்டுமே திறக்க அனுமதி உண்டு என்று விதிக்கப்பட்டு அறைக்குள் அடைக்கப்படுகிறீகள். இப்பொழுது அந்த அறையிலிருந்து எப்படி விடுதலை அடைவீர்கள்?

4 comments:

Show/Hide Comments

Post a Comment