Friday, May 11, 2007

புலன் விசாரணை - விடை

வந்தியத்தேவன் ஒருவர்தான் சரியான விடையளித்திருந்தார்.

நான்கு வாக்குமூலங்கள் உண்மையெனும்பொழுது , அவற்றில் மூன்று கண்டிப்பாக "நான் நிரபராதி." என்பதாகத்தான் இருக்க முடியும். மீதியொரு சரியான வாக்குமூலத்தை கண்டுபிடித்துவிட்டால் குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம்.

"சிகப்பு சேலையணிந்த பெண் கொலையுண்டவனோடு பேசிக் கொண்டிருந்தாள்.", "நான் கொலை செய்யப்பட்டவனோடு பேசவே இல்லை." இந்த இரண்டில் ஏதாவதொன்றுதான் அந்த உண்மையாக இருக்க முடியும். ஏனென்றால், இரண்டுமே பொய்யாக இருக்க முடியாது.

இப்பொழுது "இரண்டு ஆண்களில் யாரோ ஒருவர்தான் கொலையை செய்தது." என்பது பொய் என்பது முடிவாகிவிட்டது. கொலையை செய்தது கண்டிப்பாக பெண்தான். "குதிரை வால் கொண்டை போட்ட பெண்தான் கொலை செய்தாள்." என்பதும் பொய் என்று முடிவாகிவிட்டதால், கொலையை செய்தது சிகப்பு சேலையணிந்த பெண்தான்.

வெகு நாட்களுக்குப் பின் வந்தியத்தேவன் நமது வலைத் துணுக்கில் விடையளித்திருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள்!;-)

No comments:

Post a Comment