சாயங்காலம் மணி சரியாக ஆறு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு (பெயர் தெரியாத) ரயில், சேலத்தை நோக்கி கிளம்புகிறது. அதே ஆறு மணிக்கு சேலத்திலிருந்து இன்னொரு (பெயர் தெரியாத) ரயில் சென்னையை நோக்கி கிளம்புகிறது. இரண்டு ரயில்களும் 100 கி.மீ. வேகத்தில் பயனிக்கின்றன.
சரியாக இரண்டு ரயில் இஞ்ஞின்களின் தலைகளுக்கும் இடையே 250 கி.மீ. தூரம் இருக்கும்பொழுது, முதல் ரயில் இஞ்ஞினின் தலையிலிருந்து ஒரு ஈ, மணிக்கு 120 கி.மீ வேகத்தில், இரண்டாவது ரயிலை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. ரயில் தண்டவாளத்தின் பாதையிலேயே பறந்து செல்கிறது. இரண்டாவது ரயிலின் இஞ்ஞினைத் தொட்டவுடன், திரும்பி முதல் ரயிலை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. முதல் ரயிலின் இஞ்ஜினைத் தொட்டவுடன் மறுபடி திரும்பி இரண்டாவது ரயிலை நோக்கி பறக்கிறது. இப்படியே இரு ரயில்களும் மோதும்வரை மாறி மாறி பறந்து, கடைசியில் இரு ரயில்களுக்குமிடையில் சிக்கி இறந்து போனது.
ச்சு.. ச்சூ.. ச்சூ.. ச்சூ..
ச்சு.. ச்சூ.. ச்சூ.. ச்சூ..
உச்சூ கொட்டுனது போதும். இப்ப கேள்விக்கு வாங்க!
அந்த ஈ முதல் தடவை, முதல் ரயிலிலிருந்து பறக்க ஆரம்பித்ததிலிருந்து, கடைசியில் இறந்து போகும் வரை மொத்தம் எத்தனை கி.மீ. பறந்தது?
அந்த ஈ முதல் தடவை, முதல் ரயிலிலிருந்து பறக்க ஆரம்பித்ததிலிருந்து, கடைசியில் இறந்து போகும் வரை மொத்தம் எத்தனை கி.மீ. பறந்தது?
பி.கு.:
இதுக்கு சரியா விடை சொன்னீங்கன்னா இன்னொரு கதை சொல்லுவேன்!!!
இதுக்கு சரியா விடை சொன்னீங்கன்னா இன்னொரு கதை சொல்லுவேன்!!!
5 comments:
( 250 கி.மீ. தூரம் / 100 + 100 கி.மீ. வேகம்) = 1.25 மணி நேரத்தில் இரண்டு தொடர்வண்டிகளும் ஒன்றையொன்று சந்திக்கும். அந்த 1.25 மணி நேரத்தில் ஈ பறக்கும் தூரம் = 1.25 x 120 கி.மீ. அதாவது 150 கி.மீ. இந்தப் புதிர் வலைஉலகில் ஏற்கனவே சிலமுறை வலம் வந்துவிட்டது :-)))
முதல்ல 120கி.மீ வேகத்தில பறக்குற ஈயை காமிங்க அப்புறம் விடைய சொல்லுறேன்.
:)
distance b/w the trains = 250
So both of them has to travel 125 KM before they meet.
250/2 = 125 KM
125/60 = 1hr 15 mins
1hr 15 min * 120 = 150 KM //Ans
பாலராஜன்கீதா, வெட்டிப்பயல் இருவருமே சரியான விடை தந்திருந்ததால், இந்தப் புதிரை அப்படியே விட்டுவிட்டேன். இன்றுதான் சரியான விடையை நான் உறுதி செய்யவில்லை என்பது, சிபி கேட்டபின் புரிந்தது. இப்பொழுது உறுதி செய்துவிட்டேன்!!;-)
இந்த கணக்கெல்லாம் பாத்து ரைமை வீணாக்க விருப்பமே இல்லை. ( கணக்கிலை புலி நான்)
Post a Comment