Thursday, March 29, 2007


சாயங்காலம் மணி சரியாக ஆறு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு (பெயர் தெரியாத) ரயில், சேலத்தை நோக்கி கிளம்புகிறது. அதே ஆறு மணிக்கு சேலத்திலிருந்து இன்னொரு (பெயர் தெரியாத) ரயில் சென்னையை நோக்கி கிளம்புகிறது. இரண்டு ரயில்களும் 100 கி.மீ. வேகத்தில் பயனிக்கின்றன.

சரியாக இரண்டு ரயில் இஞ்ஞின்களின் தலைகளுக்கும் இடையே 250 கி.மீ. தூரம் இருக்கும்பொழுது, முதல் ரயில் இஞ்ஞினின் தலையிலிருந்து ஒரு ஈ, மணிக்கு 120 கி.மீ வேகத்தில், இரண்டாவது ரயிலை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. ரயில் தண்டவாளத்தின் பாதையிலேயே பறந்து செல்கிறது. இரண்டாவது ரயிலின் இஞ்ஞினைத் தொட்டவுடன், திரும்பி முதல் ரயிலை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. முதல் ரயிலின் இஞ்ஜினைத் தொட்டவுடன் மறுபடி திரும்பி இரண்டாவது ரயிலை நோக்கி பறக்கிறது. இப்படியே இரு ரயில்களும் மோதும்வரை மாறி மாறி பறந்து, கடைசியில் இரு ரயில்களுக்குமிடையில் சிக்கி இறந்து போனது.

ச்சு.. ச்சூ.. ச்சூ.. ச்சூ..

உச்சூ கொட்டுனது போதும். இப்ப கேள்விக்கு வாங்க!
அந்த ஈ முதல் தடவை, முதல் ரயிலிலிருந்து பறக்க ஆரம்பித்ததிலிருந்து, கடைசியில் இறந்து போகும் வரை மொத்தம் எத்தனை கி.மீ. பறந்தது?

பி.கு.:
இதுக்கு சரியா விடை சொன்னீங்கன்னா இன்னொரு கதை சொல்லுவேன்!!!

5 comments:

Show/Hide Comments

Post a Comment