மாயக்கட்டம்ன்னா என்னன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்(டேய் தெரியும்டா!! மேட்டருக்கு வா.). அதாவது இங்கிலீஸ்ல மேஜிக் ஸ்கொயர்னு சொல்லுவாங்க(இதெல்லாம் ரொம்ப ஓவரு!!). அதாவது நான் என்ன சொல்ல வர்ரேன்னா(டேய் எதாவது சொல்றா!!), இப்ப கீழேயுள்ள படத்தை பாருங்க(ஏன், சொல்லத் தெரியலையா?)
இந்த 3x3 கட்டத்தில் உள்ள எண்களை எப்படி கூட்டினாலும்(மேலிருந்து கீழ், இடமிருந்து வலம், அப்புறம், குறுக்கால, நெடுக்கால) 15தான் வரும். இந்த மாதிரி வர்ரதுதான் மாயக்கட்டங்கிறது.
இப்ப கீழேயுள்ள படத்தை பாருங்க(மறுபடியுமா?! ஓ, இதுக்கு கீழேயா?)
இதுவும் ஒரு மாயக்கட்டம்தான். 4x4 மாயக்கட்டம். எப்படி கூட்டினாலும்(குறுக்கால, நெடுக்கால, மேலாக்க, கீழாக்க, ஸைட்ல!...) 34 வரும். ஆனா இந்த மாயக்கட்டத்தில் இன்னொரு சிறப்பும் இருக்கு. அது என்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.
Saturday, January 20, 2007
மாயக் கட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
என்ன ஒண்ணுலருந்து பதினாறு வரைய்க்கும் அத்தினி நெம்பரும் இருக்குன்னு சொல்லப்போறீய்ங்க. அதுதானே?
இத்தனை சொன்ன நீங்க...அப்படியே அந்த சிறப்பியல்பையும் சொல்லீடலாம்ல....ஏன்னா சனிக்கிழமை யோசிக்கிறதில்லைன்னு ஒரு விரதம்...அதான்...ஹி..ஹி..
மற்றபடி இதற்கு இன்னொரு பெயரும் உள்ளது...அதாவது Numerical Yantra....
இந்த மாயகட்டங்களை எழுதுவது மிகவும் சுலபம்....அதற்கான எளிய சூத்திரங்கள் இருக்கின்றன.இது பற்றி பின்னர் சமயம் கிடைக்கும் போது எழுதுகிறேன்...
யாரும் சரியாக விடை சொல்லவில்லை. சரி நானே சொல்கிறேன். இந்த 4x4 மாயக்கட்டத்தினுள் இருக்கும் ஒன்பது 2x2 கட்டங்களிலுள்ள எண்களை கூட்டினாலும் 34தான் வரும்.
பங்காளி,
நானும் இந்த மாயக்கட்டங்களை உருவாக்கும் முறைகள் பற்றி எழுதவேண்டுமென்று வலைத்துணுக்கு ஆரம்பித்த காலத்திலிருந்தே நினைத்து கொண்டிருக்கிறேன். அந்த 'சமயம்'தான் கிடைக்க மாட்டேங்கிறது.;)
Good thinking. Keep it up.
GOMATHI,
எது Good thinking?!?!
//Keep it up.//
நீங்க ஸ்கூல்ல டீச்சரா இருக்கீங்களா?;)
Post a Comment