இன்று என் அண்ணன் ஒரு கணக்கு போட்டார்(அவரது சொந்த சரக்காம்!!!). நான் கணிணியை வைத்து போராடி 20 நிமிடத்தில் விடையனுப்பிவிட்டேன்(ப்ரோக்ராம் எழுதுவதற்குத்தான் 15 நிமிடமானது). கணக்கு கொஞ்சம் கஷ்டம்தான். அனாலும் போட்டு பார்க்க சுவையாயிருந்தது!!!
ஒரு பத்து இலக்க எண். பத்து இலக்கங்களும் வெவ்வேறு எண்கள்(0-9). இலக்க வரிசையை கணக்கில் இடதுபுறமிருந்தே எண்ணவும்(அதாவது 4வது இலக்கம் பத்து லட்சம், 8வது இடம் நூறு..).
ஒற்றை படை எண்கள் - ஒற்றை படை இடங்களிலும், இரட்டை படை எண்கள் - இரட்டை படை இடங்களிலும்(ie. odd numbers are in odd places & even nos are in even places) இருக்கின்றன. இதில் 2வது, 3வது, 4வது இடங்களில் உள்ள எண்களை மட்டும் ஒரு தனி மூன்றிலக்க எண்ணாக கவனித்தால்(Ex : if n=x456xxxxxx, consider it as four hundred and fifty six) அதன் ஒரு multiple(சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை!) தான் 8வது, 9வது, 10வது இலக்கங்கங்களை இணைத்து கிடைக்கும் எண்.
அதே போல், 1வது, 2வது இலக்க எண்களை இணைத்து கிடைக்கும் இரண்டிலக்க எண்ணின் ஒரு multiple தான் 7வது, 8வதை இணைத்தால் கிடைக்கும் எண்.
மேலும், இந்த இரண்டு multipleகளும் ஒரே mutiplierஆல் கிடைப்பவைதான்!!
அந்த பத்து இலக்க எண் என்னவென்று கண்டுபிடியுங்கள்!!!
பி.கு. :
-------
கணக்கு புரியுமென்றே நினைக்கிறேன், இதை விட எளிமையாக இந்த கணக்கை புரியும்படி எனக்கு எழுதி அனுப்பினால், அதையும் பிரசுரிக்க தயாராயிருக்கிறேன்!!!
Wednesday, June 28, 2006
கொஞ்ச(சு)ம் கணிதம்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
enna aachu nam makkaLukku? oru vidai kuuda ithuvarai illai?!?!
எல்லாம் உங்களை மாதிரியா யோஸ், கொஞ்சம் டைம் கொடுங்க.. நான் இன்னும் இதை முயற்சிக்கலை.. பதில் சொல்லிடாதீங்க..
கெ.பியைக் காணோம்.. ரெண்டு நாளா, வந்து அவங்களும் முயற்சிப்பாங்களாயிருக்கும்..
odd - otrai (not orelakka)
even - erattai (not eerilakka)
still u can use ortai & erattai for places also(edangal), not erattai elakka edam,b'cos
orelakka en - single digit number
eerilakka en - double digit number
//தனி மூன்றிலக்க எண்ணாக கவனித்தால்//
moonrilakka en- triple digit number? how can it be? all single digit numbers, right?
multiple - madangu/ madakkai
i didn't understand completely what u said, can u rephrase them if u can please?
குரு,
சரி செய்து விட்டேன். தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.
//தனி மூன்றிலக்க எண்ணாக கவனித்தால்//
எடுத்து காட்டு ஒன்று கொடுத்துவிட்டேன். இப்பொழுது புரிகிறதா பாருங்கள்.
//multiple - madangu/ madakkai//
இந்த வார்த்தைகளை முதலிலேயே யோசித்தேன். ஆனால் ஏற்கெனவே இலக்கம், ஒற்றை என்றெல்லாம் ரொம்ப தூய தமிழ் பேசி கணக்கு பாதி புரியாமல் போய் விட்டது. நம் மக்களை ரொம்பவும் படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்ததால், ஆங்கில பிரயோகம் செய்து விட்டேன். (அப்புறம் குரு, Powerரை என்ன சொல்வீர்கள்?)
//i didn't understand completely what u said, can u rephrase them if u can please?//
பி.கு. வை படிக்கவும்!!!;)
3218079654 or 3218709654...correct-ta?
கொஞ்ச(சு)ம் கணிதம் போட கொஞ்சம் நேரம் கொடுங்க
வார இறுதியில் முயல்கிறேன்:-)
power என்ற வார்த்தைக்கு மடங்கு என்பது சரியாக வருமா ?
ரொம்ப பிஸிங்க நான், என் கெக்கே பிக்குத்தனத்துக்கு டிமாண்டு நிறைய ஆயிடுச்சா, அதான்! (ஏதோ நாமே சொல்லிக்கறது தான்).
இன்னும் முயற்சி செய்யலை. (உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால்), பதில் சொல்லிடாதீங்க. நன்றி.
விடை சரிதானா? 3218709654 .
உங்கள் கேள்வியிலேயே துப்போ துப்பு! நீங்கள் குறிப்பிட்ட (1,2,3,4,7,8,9,0) எந்த இலக்கத்திலும் 0 வர முடியாது; multiple, அதுவும் ஒரே multiple என்பதால், அதுவும் எந்த மாதிரி எண்கள் எந்த இலக்கத்தில், multiple-இன் அதிக பட்ச value என்று பல துப்புக்கள்.
நன்றாக இருந்தது. உண்மையிலேயே கணிணியின் துணை இல்லாமல் (இன்னொரு game ஆடிக்கொண்டே) இதை போட்டேன். விடை சரியாக இருந்தால் தேவலை. இன்னும் ஒரு விடை வர வாய்ப்பு உள்ளது போலிருக்கே?
Seenu,
சரியான விடையும்(இரண்டாவது விடை) கொடுத்துவிட்டு , ஏன் முதல் விதியை(// odd numbers are in odd places & even nos are in even places// )மறந்து விட்டீர்கள்?
கெ.பி.,
உங்கள் விடை சரியானது. நீங்கள் அப்படியொன்றும் கெக்கே பிக்கே என்று யோசிப்பதில்லையென்று தெரிகிறது!!!;)))
அப்புறம் இன்னொரு விடை வர வாய்ப்பில்லை. நான் கிராஸ் செக் செய்த பிறகுதான் இதை பிரசுரித்தேன்!!!;)
Seenu,கெ.பி.
உங்கள் இருவர் பின்னூட்டங்களையும் இன்னும் ஒரு நாளைக்கு நிறுத்தி வைக்கிறேன். அதற்குள் வேறு யாரவது கண்டுபிடிக்கிறார்களா பார்ப்போம்!!
யோசிப்பவரே, விடை தான் கிடைத்தாகி விட்டதே. தாங்கள் எழுதிய அந்த ப்ரோக்ராமை பதிவிட்டால், என்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு உபயோகமாய் இருக்கும்(நானும் ப்ரோக்ராம் எழுத இரண்டு நாட்கள் முயற்சித்தேன், ம்ஹூம், பலனில்லை). நன்றி!
Post a Comment