ஒரு காகிதத்தை எடுத்துக்கோங்க. அதுல 1செ.மி. விட்டமுள்ள ஒரு ஓட்டை போடுங்க. இப்ப அந்த ஓட்டை வழியா எவ்வளவு பெரிய நாணயம் உள்ளே போகும்? அதாவது நான் கேக்கறது அந்த நாணயத்தோட விட்டம்!
பி.கு.: நாணயத்தோட திண்ணம் மிக மிக குறைவு!, அதை புறக்கணித்துவிடலாம்னு வச்சுக்குங்க.
Wednesday, June 21, 2006
நாணயம் எவ்வளவு பெருசு?
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
1 CM - 1 MM?
இதென்ன தமாசு.
1 செ.மீ நாணயம்தான் போகும்.
22/7
( 2 * 1 * 22 / 7 ) / 2
ponS, prabu raja you both are wrong. Think more!!;)
Latha, Please give explanation!
Latha, niinggaL yoosiththa vitham sarithaan. aanaalum sinna thappu paNNi vittiirkaL. athanaal vidai thavaRu. keeLviyai miiNdum oru muRai sariyaaka padiyunggaL.;)
தலைய சுத்த விட்றீங்களே!
1 செ.மீ ஓட்டையில் 1 செ.மீ நாணயம் தானே போகும்?
அந்த பேப்பர் கிழியாமல் நாணயம் உள்ளே போக வேண்டுமா? அதை நீங்கள் சொல்லவில்லையே (நிஜமாக தான் கேக்கிறேன்...) வெளி விளிம்பையும் சேர்த்து நாணயத்தின் விட்டம் 1செமீ க்குக் குறைவாக இருந்தால், (0.99செமீ?) நாணயம் செல்லக்கூடும் - பேப்பரைக் கிழிக்காமல்.
என் மறு "கெக்கே"ள்விகள்:-)
1. என்ன மாதிரி பேப்பர்? டாலர் நோட்டா?
2. பொற்காசுகள் எங்கிருந்து அடிச்சீங்க? அதான் பொன்ஸ் படத்த மாத்திட்டாங்களா?
3. எவ்வளவு பெரிய நானயம் என்று சொல்லியிருக்கிறீர்கள், ட்ரிக் அது தானா?
நான் ஜோக் அடிப்பதை தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன். விடுகதைகள் எனக்கு மிக விருப்பம் அதனால் உங்க யோசிக்கும் தளத்துக்கு அடிக்கடி வருவதுண்டு. நன்றி.
மன்னிக்கவும். நான் 1 செ.மீ ஆரம் என்று நினைத்துக்கொண்டு அவசரமாக எழுதி அனுப்பிவிட்டேன்.
:-(((
சரியான விடை = 1 செ.மீ. x 22 / 7 ) / 2
= 11 / 7 செ.மீ.
1 செ.மீ. விட்டமுடைய வட்டத்தின் சுற்றளவில் பாதி அளவு விட்டம் உள்ள நாணயம் அந்த ஓட்டை வழியாகச் செல்ல இயலும்.
என்ன, குழப்பிவிட்டேனா? :-)))
பிரபு ராஜா,
ஒரு செ.மீ. ஓட்டையில் ஒரு செ.மீ. நாணயம்தான் நுழையுமென்றால் நான் ஏன் கேள்வி கேட்க போகிறேன்?;)
கெக்கெ பிக்குனி(Spelling Correcta?),
பேப்பர் கிழியாமல்தான் நாணயம் உள்ளே செல்ல வேண்டும். நம் மக்கள் அறிவாளிகள் என்று நினைத்ததால்தான் அதை முதலில் சொல்லவில்லை!!!;)
என் கெக்கெ பதில்கள்:
1) அது உங்க வசதிய பொறுத்தது!
2) கூகிளிலிருந்து அடித்தது. பொன்ஸ் விவரம் எனக்கு தெரியாது.
3) அது ட்ரிக்கில்லை. டைப்பிங் பிழை. இப்போ சரி பண்ணிட்டென்.
ஜோக்கடிச்சா நான் தப்பா எடுத்துக்குவேன்னு எப்படி நினைச்சீங்க. நீங்க ஜோக்கடிக்கலைன்னாதான் தப்பா எடுத்துக்குவேன்;)
யோசிங்க்ஸ்,
சிரிக்கப் போறீங்களோன்னு தான் கேட்காம இருந்தேன்.. விட்டம்னா என்ன? Diameterஆ, Radiusஆ?
(அவ்வையார், தமிழறிஞர்னு பட்டமா கொடுத்துத் தள்றாங்களா(ஓவர் சீன்).. அந்த இமேஜெல்லாம் டேமேஜ் பண்ணுற மாதிரி கேள்வி கேட்டு என்னைத் தவிக்க விடறீங்களே? நியாயமா?:) )
லதா,
சரியாக பதிலளித்து விட்டீர்கள். மற்றவர்களுக்கு இன்னும் ஒரு நாள் டைம் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதற்கப்புறம் உங்கள் பின்னூட்டங்களை பிரசுரிக்கிறேன். மேலும் பேப்பர் கிழியாமல் நாணயத்தை செலுத்தும் வித்தையையும் கொஞ்சம் விளக்கி விடுங்களேன்.
பொன்ஸ்,
கோபப்படாதீர்கள்! படித்தவுடன் சிரித்துவிட்டேன்;)
விட்டம்னா - Diameter , ஆரம்னா - Radius. போதுமா?;)
//மேலும் பேப்பர் கிழியாமல் நாணயத்தை செலுத்தும் வித்தையையும் கொஞ்சம் விளக்கி விடுங்களேன்.
நன்றி, அதானே ட்ரிக்கு! பேப்பரை மடித்து - ஓட்டையை பெரிதாக செய்தால், 1செமீக்கும் சற்று பெரிய நாணயங்களையும் "செலுத்தலாம்". சரியா?
வழியின் ஓரம் (BTW?), ஜோக்"கடிக்"க நானும் ரெடி.
கெ. பிக்குணி
வழியின் ஓரம், நான் அறிவாளி இல்லை என்று ஒத்து கொண்டதற்கு நன்றி;-)))
கெ.பிக்குணி,
வழியை சொல்லி விட்டீர்கள். விடையை சொல்லவில்லையே?
கெ பி,
பை த வே, எனபது வழியில் என்று தானே வரும், போகிற போக்கில் என்று தமிழ் வழக்கு வேற இருக்கே?
வழியின் ஓரம் என்பது என்ன?
யோசிங்க்ஸ்,
யோசிச்சி யோசிச்சி, காலை வேளை கழிஞ்சிடும் போலிருக்கு.. நீங்க தான் ஒரு நாள்னு சொல்லிட்டீங்களே.. உங்க காலைக்குள்ள ஏதாச்சும் சொல்ல முயல்கிறேன்.. லதா ஸ்டைல்ல யோசிச்சி பார்க்கிறேன்.. :)
நாணயம் எவ்வளவு பெருசு?
இது ஏதோ என்னப்பாத்து கேள்வி கேக்கற மாதிரி இல்ல
இருக்குது.சங்கத்து ஆளுங்க எல்லா எங்கிட்டு போனாங்க.
நாக்கு மேலே பல்ல போட்டு கேக்குற கேள்வியா இது?
ஆனாலும் நாணயத்தையும் (நேர்மை) நா-நயத்தையும் அளக்க
முடியுமா?
நல்லா யோசிச்சு சொல்லுங்க
பொன்ஸ், விட்டமும் ஆரமும் தெரியாதவர்கள் ஓரம் அறிவதில்லை:-)
1 செமீ ஓட்டையில் 1.2செமீ வரை விட்டம் உள்ள நாணயம் செல்லலாம் / செலுத்தலாம் போலிருக்கிறது (கணக்கு போட்டு பார்க்க நேரம் இல்லை). ஓட்டை வடை - அதாவது விடை வரும் வரை காத்திருக்கிறேன்.
//சரியான விடை = 1 செ.மீ. x 22 / 7 ) / 2
= 11 / 7 செ.மீ.
1 செ.மீ. விட்டமுடைய வட்டத்தின் சுற்றளவில் பாதி அளவு விட்டம் உள்ள நாணயம் அந்த ஓட்டை வழியாகச் செல்ல இயலும்.
என்ன, குழப்பிவிட்டேனா? :-)))//
குழப்பமாத் தான் இருக்கு.. பேப்பர் கிழியாம எப்படி உள்ள செலுத்துவீங்கன்னும் சொல்லுங்களேன்..
பொன்ஸ்,
பேப்பரில் ஓட்டை போட்டு விட்டீர்களா? இப்பொழுது பேப்பரை இரண்டாக மடியுங்கள். ஓட்டை அரை வட்டமாகும். அந்த அரைவட்டத்தின் இருமுனைகளையும் பிடித்து இழுத்தீர்களென்றால், ஒரு செ.மீ.க்கும் அதிகமான விட்டமுள்ள நாணயத்தை செலுத்தலாம். அப்படி செலுத்தக் கூடிய மிகப்பெரிய நாணயத்தின் விட்டம் 11/7 அல்லது (pi/2) செ.மீ.!!!;)
பெருசு,
ஆளாளுக்கு இப்படியொரு பேரு வச்சுக்கிட்டா தமிழ்ல நான் ஒரு வார்த்தையையும் உபயோக படுத்த முடியாது போலிருக்கே!!!;)
// ஓட்டை அரை வட்டமாகும். அந்த அரைவட்டத்தின் இருமுனைகளையும் பிடித்து இழுத்தீர்களென்றால், ஒரு செ.மீ.க்கும் அதிகமான விட்டமுள்ள நாணயத்தை செலுத்தலாம். //
அட ஆமா!
Post a Comment