என்னடா கொஞ்ச நாளா ஆளை காணோமேன்னு சிலர் என்னை தேடியிருக்காங்கன்றதை Counter மூலமா தெரிஞ்சிகிட்டதில் கொஞ்சம் சந்தோசமா இருக்கு. ஒரு வாரமா எனது கணிணி கொஞ்சம்
பிரச்சனை கொடுத்தது. அதனாலதான் ஒன்னுமே எழுதலை(இல்லேன்னாலும் கிழிச்சிருவே!). அதுவும் இல்லாம அடுத்த கேள்வி கொஞ்சம் கஷ்டமா வேற கேக்கிறேன்னு சொல்லிட்டேனா?! நான் சொன்னதிலேருந்து ஒரு கஷ்டமான கேள்வியுமே சிக்கலை(அதானே பார்த்தேன். இதுதான் உண்மையான காரணமா?!).
இன்னைக்கு சில "லேட்டரல் திங்கிங்"(தமிழ் வார்த்தை!?!) புதிர்கள் போடப் போறேன். Latteral Thinkingனா விடை கண்டுபிடிக்க பல வழிகளிலும் சிந்திக்கிறது(அதாவது இஷ்டத்துக்கு யோசிக்கிறது!!!). இது கஷ்டமா இருக்கான்னு நீங்கதான் சொல்லனும்.(கஷ்டப்பட்டு யோசிக்காதீங்க! இஷ்டத்துக்கு யோசிங்க!!!)
1) ஒரு மனிதன் உயரரரரமான(அவ்வளவு உயரம் இல்லை!) கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றான். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டான். ஆனால் தற்கொலைக்கு முயன்றதற்காக அவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை. ஏன்?
2) கார்த்தி ஒருமுறை பயணம் மேற்கொண்டான்(காரில்தான்). அவன் சேர வேண்டிய இடம் அவன் கண்களுக்கு தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் அதை அடைவதற்கு, அவன் இன்னும் 400 மைல் பயணம் செய்தாக வேண்டும். இது எப்படியென்று விளக்க முடியுமா?
3) ஒரு நாளிரவு, ஒரு மனிதன் அவனுடைய வீட்டின் பின்கட்டுக்கு சென்றான். பின் துப்பாக்கியால் ஒரு முறை சுட்டான். அதன் பிறகு அவன் சூரிய உதயத்தை பார்க்கவே இல்லை. ஆனால் அவன் தன்னை தானே சுட்டுக் கொள்ளவில்லை. என்ன நடந்தது?
4) டாம் (ஹாங்ஸ் இல்லை!) ஒரு தீவில் தனியாக மாட்டிக்கொண்டான். அவனிடம் நெருப்பு குச்சிகளும், விறகுகளும் இருந்தன. ஆனாலும் ஒன்பது நாள் குளிரில் வாடினான். பத்தாவது நாள் மழை பெய்ய ஆரம்பித்தது. டாம் நெருப்பை பற்ற வைக்க ஆரம்பித்தான். என்ன நடக்குது இங்க?
Tuesday, January 10, 2006
இது கஷ்டமா?!?
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
1. அவன் பேரஷூட் கட்டிக்கொண்டு குதித்திருப்பான்.
3. அவன் பார்வையில்லாதவனாக இருந்திருக்கலாம்
1. is he hospitalized after jumped down? didn't the police got any material evidence
2. seeing the place in the map
3. pinnkattu? you mean kitchen? if yes did he shoot the gas cylinder?
4. is he staying in a hut?afraid of getting burnt?
நான் 10.01.06 கீழே உள்ள விடைகளை எழுதி இருந்தேன். அது யோசனைகளுக்குள் இருக்கிறது. ஆனால் இங்கே கொமெண்ட் இற்குள் இல்லையே. ஏன்?
1. அவர் தற்கொலை செய்ய எண்ணி கட்டடத்தில் ஏறியிருப்பார். ஆனால் குத்திருக்க மாட்டார். அபப்டியானால் எத்ற்கு வழக்கு போடுகிறார்கள்?
2. ஒருவேளை விமானத்தில் 400 மைல் உயரத்தில் பறந்து கொண்டிருப்பாரோ?
3. அதாவது துப்பாக்கியின் பின் பக்கத்தால் சுட்டுக் கொண்டிருப்பார். ஆனால் இயற்கை மரணம் அடைந்திருப்பார். அதனால் சூரிய உதயத்தை பார்த்திருக்க மாட்டார்.
4. அவனிடம் இருந்த விறகுகள் ஈரமாக இருந்ததால் (அவன் அங்கு போய்ச் சேர்வதற்கு முதல் மழை பெய்திருக்கலாம்தானே), அவனால் அவற்றை பற்ற வைக்க முடியாது இருந்திருக்கும். அவை காய்வதற்கு 9 நாட்கள் எடுத்திருக்கலாம். பிறகு அவன் குடிசை ஏதாவது கட்டிக் கொண்டு இருந்திருப்பான். பத்தாவது நாள் வெளியே மழை பெய்திருக்கும். அவன் குடிசைக்குள்ளிருந்து நெருப்பு பற்ற வைத்திருப்பான்.
நீங்க சொன்ன மாதிரியே இஷ்டத்துக்கு யோசிச்சு எழுதியிருக்கேன். )
Kalai | 10.01.06 - 8:50 pm | #
--------------------------------------------------------------------------------
என்னைப் போலவே றெனிநிமல் என்பவர் சொன்ன பதில்களும் அங்கே இருந்தது. அதையும் இங்கே போடுகிறேன்.
கலை
1. உயரமான கட்டிடம் என்றால் அவர் குதித்தது வெறும் 4 அடி உயரம் தான்.
2. அந்த காரில் ரோட் மைப் அல்லது நெவிகேட்டர் இருந்திருக்கும். அதுவும் இல்லை என்றால் பாதையில் எழுதியிருப்பார்களே இந்த இடத்திற்கு இத்தனை கிலோமீற்றர் தூரம் இருக்கின்றது என்று.
3. பின் (ஊசி) அவன் கண்களை குருடாக்கி இருக்க வேண்டும்!
4. அவனிடம் நெருப்பு குச்சிகள் தானே இருந்தது அதை உரசுவதற்கு பெட்டி இல்லையோ!
எது எப்படி. ஹி ஹி ஹி.....
றெனிநிமல் | Homepage | 11.01.06 - 1:38 am | #
--------------------------------------------------------------------------------
Post a Comment