Tuesday, January 10, 2006

இது கஷ்டமா?!?

என்னடா கொஞ்ச நாளா ஆளை காணோமேன்னு சிலர் என்னை தேடியிருக்காங்கன்றதை Counter மூலமா தெரிஞ்சிகிட்டதில் கொஞ்சம் சந்தோசமா இருக்கு. ஒரு வாரமா எனது கணிணி கொஞ்சம்
பிரச்சனை கொடுத்தது. அதனாலதான் ஒன்னுமே எழுதலை(இல்லேன்னாலும் கிழிச்சிருவே!). அதுவும் இல்லாம அடுத்த கேள்வி கொஞ்சம் கஷ்டமா வேற கேக்கிறேன்னு சொல்லிட்டேனா?! நான் சொன்னதிலேருந்து ஒரு கஷ்டமான கேள்வியுமே சிக்கலை(அதானே பார்த்தேன். இதுதான் உண்மையான காரணமா?!).

இன்னைக்கு சில "லேட்டரல் திங்கிங்"(தமிழ் வார்த்தை!?!) புதிர்கள் போடப் போறேன். Latteral Thinkingனா விடை கண்டுபிடிக்க பல வழிகளிலும் சிந்திக்கிறது(அதாவது இஷ்டத்துக்கு யோசிக்கிறது!!!). இது கஷ்டமா இருக்கான்னு நீங்கதான் சொல்லனும்.(கஷ்டப்பட்டு யோசிக்காதீங்க! இஷ்டத்துக்கு யோசிங்க!!!)

1) ஒரு மனிதன் உயரரரரமான(அவ்வளவு உயரம் இல்லை!) கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றான். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டான். ஆனால் தற்கொலைக்கு முயன்றதற்காக அவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை. ஏன்?

2) கார்த்தி ஒருமுறை பயணம் மேற்கொண்டான்(காரில்தான்). அவன் சேர வேண்டிய இடம் அவன் கண்களுக்கு தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் அதை அடைவதற்கு, அவன் இன்னும் 400 மைல் பயணம் செய்தாக வேண்டும். இது எப்படியென்று விளக்க முடியுமா?

3) ஒரு நாளிரவு, ஒரு மனிதன் அவனுடைய வீட்டின் பின்கட்டுக்கு சென்றான். பின் துப்பாக்கியால் ஒரு முறை சுட்டான். அதன் பிறகு அவன் சூரிய உதயத்தை பார்க்கவே இல்லை. ஆனால் அவன் தன்னை தானே சுட்டுக் கொள்ளவில்லை. என்ன நடந்தது?

4) டாம் (ஹாங்ஸ் இல்லை!) ஒரு தீவில் தனியாக மாட்டிக்கொண்டான். அவனிடம் நெருப்பு குச்சிகளும், விறகுகளும் இருந்தன. ஆனாலும் ஒன்பது நாள் குளிரில் வாடினான். பத்தாவது நாள் மழை பெய்ய ஆரம்பித்தது. டாம் நெருப்பை பற்ற வைக்க ஆரம்பித்தான். என்ன நடக்குது இங்க?

4 comments:

Show/Hide Comments

Post a Comment