கயிற்றால் கட்டிப் போடாமலே, என்னால் உங்களை நாற்காலியிலிருந்து எழ முடியாமல் செய்ய முடியும்(உங்க ஒத்துழைப்போடதான்!). ஒன்றும் இல்லை. நாற்காலியில் நான் சொல்வது போல் உட்கார்ந்தால் உங்களால் எழுந்திருக்க முடியாது. சோதித்துப் பார்த்தால்தான் நம்புவீர்கள் என்றால் கீழே உள்ளபடி செய்யுங்கள்.
படத்தில் பையன் உட்கார்ந்து இருப்பது போல் நீங்களும் உட்கார்ந்து கொள்ளுங்கள். நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நாற்காலிக்கு அடியில் உங்கள் பாதங்களை வைக்கக் கூடாது. கால் தொங்காமலும், அதே சமயம் வளையாமலும் இருக்கும்படியான நாற்காலியிலேயே(அதாவது உங்கள் உயரத்துக்கு ஏற்ற நாற்காலியிலேயே) உட்கார வேண்டும். இப்பொழுது 1)கைகளை எதிலும் ஊன்றாமல், 2)பாதங்களை பின்புறமோ, முன்புறமோ நகர்த்தாமல், 3)முன்புறம் குனியாமல், எங்கே! எழுந்திருங்கள் பார்ப்போம்!!!
என்ன? அப்படியே நாற்காலியோடு கட்டிப்போட்டாற்போல் உட்கார்ந்திருக்கிறீர்கள்!?!?
இதைப் பற்றி கேள்வி கேட்டால் எளிதாக விடை கூறிவிடுவீர்கள் என்று தெரியும். ஆனாலும் தெரியாதவர்கள் சிலர் இருக்கலாம். அவர்களும் தெரிந்து கொள்வதற்காக கேள்வி.
ஏன் உங்களால் எழுந்திருக்க முடியவில்லை?
Tuesday, February 22, 2005
எழுந்திருங்கள், பார்க்கலாம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Center of gravity.
-dyno
Equilibrium
அன்புடன்
ஆசாத்
newtonin Etho oru vidhi. every body continues to be in a state of rest or motion unless it is acted by any other external force. (33 varudangaLukku mun padiththadhu muzuvadhum sariyaaga ninaivillai. )
Center of gravityதான். உங்கள் உடலின் புவியீர்ப்பு மையம் உங்கள் கால்களின் அடிப்பரப்புகளுக்கிடையே இருந்தால் மட்டுமே உங்களால் எழ முடியும்.
லதா, 33 வருடங்களுக்குமுன் இதை எதில் படித்தீர்கள் என்று நினைவிருக்கிறதா?
iyaRpiyal (physics)
Post a Comment