நவன் கொடுத்துள்ள அண்ணா பல்கலைகழகத்தின் பக்கத்திலிருந்து இது அவர்களின் ஆராய்ச்சிப் பிரிவில் இருப்பது தெரிகிறது. இன்னொரு சுட்டி வேலை செய்யவில்லை. அண்ணா பல்கலைகழகத்தில் இதைப் பற்றி யாரைத் தொடர்பு கொள்வதென்று தெரியவில்லை. இது பற்றி யாராவது உதவினால், அவர்கள் ஆராய்ச்சிக் குழுவுக்கு உதவ தயாராயிருக்கிறேன்.
325 வலைப்பதிவர்கள் இருந்தும், இது பற்றி மூன்று பேர் மட்டுமே யோசித்தது கொஞ்சம் கவலையளிக்கிறது. மூர்த்தி, விஜய் இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நவன், உங்கள் தகவலுக்கு நன்றி. நீங்களும் இது குறித்து யாரை அணுகலாம் என்று யோசியுங்கள். தகவல் எதேனும் தெரிந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். நான் இந்த பணி செய்ய ஆவலாயுள்ளேன்.
Tuesday, January 18, 2005
தமிழ் அகராதி
Posted by யோசிப்பவர் at 8:37 PM
Labels: மொத்தம், வேலைக்காகாதவை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தமிழா! வலைப்பக்கத்திற்கான சுட்டி இங்கே ஒழுங்காக வேலை செய்கிறதே.
எதற்கும் மீண்டும் ஒரு முறை தந்து விடுகிறேன்: http://developer.thamizha.com/spellchecker/தமிழா குழுவினரை தொடர்பு கொள்ள:
[at]க்குப் பதிலாக @ மற்றும் [dot]க்குப் பதிலாக . சேர்த்துக்கொள்ளவும்
முகுந்தராஜ் - mugunth[at]thamizha[dot]com
இளஞ்செழியன் - elan[at]thamizha[dot]com
ராதாகிருஷ்ணன் - nradhak[at]yahoo[dot]com
விஜய் - vijayd_81[at]hotmail[dot]com
--
நவன் பகவதி
'Tamizha site' seems to have some problems at the moment(or may be it is being updated). You can try after some time.
Otherwise drop an email to Mugunth.
--
Navan Bhagavathi
நடந்து முடிந்த தமிழிணைய மாநாட்டின் இறுதியில் இதற்கென ஒரு Task force அமைப்பதெனெ முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
அண்ணாப் பல்கலையில் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவரின் பெயர் பாஸ்கரன். அவரது முகவரியை நாள் மாலை இந்த வலைப்பதிவில் தெரிவிக்கிறேன்.
தமிழ் மொழி அமைப்பைக் குறித்து விரிவான ஆய்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழில் உள்ள சொற்களில் 10 சதவீதம் சொற்களே பெருமளவில் (90 சதவீதமளவிற்குப் பயன்படுத்தப்படுகின்றன)
மாலன்
Post a Comment