Tuesday, February 11, 2014

கலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு

சமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ் செய்து முடித்தவுடன் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.


சென்ற கலைமொழிக்கான விடை : முழுதாக இருக்கும்போது கவனத்தில் விழவில்லை இடிந்து கிடக்கும்போது இம்சை படுத்துகிறது யாருடையதாகவோ இருந்த வீடு - கல்யாண்ஜி


விடை கூறியவர்கள்  : முத்து சுப்ரமண்யம், ராமராவ்,  தமிழ் பிரியன், நாகராஜன் 

Monday, February 03, 2014

ஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்

சமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங்.

ஒரு பாலைவனம். மொத்த நீளம் 1000 மைல். உங்களிடம் ஒரு ஒட்டகமும், 3000 வாழைப்பழங்களும் இருக்கின்றன. பாலைவனத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு வாழைப்பழங்களை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் வேலை. ஆனால் ஒட்டகத்தால் ஒரு நேரத்தில் 1000 வாழைப்பழங்களுக்கு மேல் சுமக்க முடியாது. மேலும் ஓட்டகம் கடக்கும் ஒவ்வொரு மைல் முடிவிலும் அதற்கு உணவாக ஒரு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். உங்களால் அதிகபட்சமாக எத்தனை வாழைப்பழங்களை மறுமுனையில் சேர்ப்பிக்க முடியும்??? 

விடை தெரிஞ்சா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க!!!