Monday, March 12, 2012

சொல் கலை - 2

இந்தப் புதிருக்கு நான் நினைத்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் scriptஇல் சில குறைபாடுகளும் உள்ளன. சிலருக்கு கட்டங்கள் சரியான முறையில் தெரியவில்லை. வாஞ்சினாதன் 11 ஆரஞ்சுக் கட்டங்கள் தெரிந்தது என்றார். பூங்கோதை Refresh Answer Boxes அழுத்தும்பொழுது தவறான எழுத்து கீழே உள்ள கட்டங்களில் வருவதாகக் கூறினார். ஹரி IE8/IE9 ப்ரவுசர்களில் எரர் அடிப்பதாகக் கூறினார். இதில் ஹரி கூறிய பிரச்சினை எனக்கும் வந்ததால் அது சரி செய்யப்பட்டு விட்டது. வாஞ்சி கூறிய பிரச்சினை எந்தெந்த தருணத்தில் வருகிறது என்று தெரியவில்லை. பூங்கோதை கூறிய பிரச்சினையும் எனக்கு வரவில்லை. அதனால் அந்தக் குறைகளை நீங்கள் காண நேர்ந்தால், எந்தத் தருணத்தில் அந்தப் பிரச்சினை வருகிறது என்பதை எனக்குத் தெரிவித்தால் சரி செய்ய ஏதுவாக இருக்கும். முடிந்தால் ஒரு Screen Shot அனுப்புங்கள்.

இந்த முறை இறுதி விடையில் 14 எழுத்துக்கள் உள்ளன. அதனால் புதிரைத் தீர்க்க ஆரம்பிக்குமுன், முதலில் உள்ள ஏழு வார்த்தைகளிலும் மொத்தமாக 14 கட்டங்கள்தான் உள்ளனவா என்பதை ஒரு முறை எண்ணி விடுங்கள்!!:)

புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :-
முதலில் இருக்கும் ஏழு வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 14 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “சுஜாதாவின் சத்யமேவ...” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடை அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.


சென்ற முறையை விட கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனிப் புதிர்...
1.
2.
3.
4.
5.
6.
7.


சுஜாதாவின் சத்யமேவ.....

சென்ற சொல்கலைக்கான விடை : 1) அந்தாதி, 2) பெயரெழுத்து, 3)வங்க தேசம், 4) இளவரசன். இறுதி விடை : வந்தியத்தேவன். 

 விடை கூறியவர்கள் :- பூங்கோதை, மீனாட்சி, வாஞ்சினாதன், சாந்தி, தமிழ் பிரியன், அரசு, 10அம்மா, முத்து, ராசுக்குட்டி, ஹரி

31 comments:

Show/Hide Comments

Post a Comment