Friday, January 13, 2012

கலைமொழி - 9

கலைமொழி போன்ற வார்த்தை விளையாட்டுக்களை ஒவ்வொரு முறை வெளியிடும்போதும், அறிவிப்பதற்கென vaarthai_vilayaatu@googlegroups.com என்ற கூகிள் மடல் குழுவை ஆரம்பித்திருக்கிறேன். தொடர்ந்து வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும், வெளியிடவும் ஆர்வமிருப்பவர்கள் இதில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

அநேகமாய் இதுதான் எனது பொங்கல் பதிவாக இருக்கும் என்பதால், அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!

இந்த முறை பேச்சு வழக்கு இருக்கலாம். மேலும் வாக்கியங்களுக்கிடையில் சில இடங்களில் தொடர்பு இல்லாமலும் இருக்கலாம்!!;)

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


கலைமொழி 8 விடை :- கடலிலே நீங்கள் எவ்வளவு புயல்களைச் சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி உலகத்துக்கு அக்கறை இல்லை. கப்பலைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா? அதில்தான் அக்கறை.


விடை கூறியவர்கள் :- பூங்கோதை, இளந்தென்றல், ஹேமா, மாதவ், 10அம்மா, ராமசாமி, அரசு. அனைவருக்கும் நன்றி!!

5 comments:

Show/Hide Comments

Post a Comment