காஸினோக்களுக்கு எத்தனை பேர் போயிருக்கிறீர்கள்(அதாங்க, ஜூதாட்ற கிளப்பு). வெளிநாடுகளில் வசிப்பவர்களில் சிலர் போயிருக்கலாம். போகாதவகர்கள், அட்லீஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படத்திலாவது அந்த க்ளப்களை பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட சில க்ளப்களில் சீட்டாட்டங்களுக்காக சீட்டுக்களை கலைப்பதற்கு தனி மெஷின் இருக்கும்.
அப்படித்தான் ஒரு க்ளப்பில் ஒரு மெஷின் இருந்தது. அந்த மெஷின் ஒவ்வொரு முறையும் சீட்டுகளை ஒரே விதமாகத்தான் கலைக்கும். அதாவது உதாரணத்துக்கு, கலைப்பதற்கு முன் முதலாவதாக இருந்த சீட்டு, கலைத்தபின் ஐந்தாவதாக இருக்கும் என்று வைத்துக் கொண்டால், ஒவ்வொரு கலைப்பிலும் முதலாவதாக இருந்த சீட்டே ஐந்தாவது இடத்துக்கு வரும்.
இப்பொழுது ஒரு சீட்டுக் கட்டில் ஸ்பேட்(Spade) வகை சீட்டுக்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். அவை வரிசையாக A,2,3,4...10,J,Q,K என்று அடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 சீட்டுக்கள். இவற்றை அப்படியே அந்த மெஷினில் வைத்து கலைக்கிறோம். பின் மீண்டும், கலைந்த சீட்டுக்களை அப்படியே வைத்து, இன்னொரு முறை கலைக்கிறோம். இப்பொழுது சீட்டுக்களை வெளியே எடுத்துப் பார்த்தால், அவை 10,9,Q,8,K,3,4,A,5,J,6,2,7 என்ற முறையில் அடுக்கப்பட்டிருந்தது.
அப்படியென்றால் முதல் கலைத்தலுக்குப் பின், சீட்டுக்களின் வரிசை எப்படி இருந்திருக்கும்? கண்டுபிடிக்க முடியுமா?

10 comments:
கொஞ்ச நேரம் யோசிச்சி பாத்தேன்.. ஏதும் ஈசியான வழி இருக்குறதா தோணல.. அதனால கைய தூக்கிக்கிறேன்.. வேற யாராவது பதில் போட்டா சொல்லுங்க.. :)))
காலங்கார்த்தால எழுந்து வந்து, அரை மணி நேரம் முட்டி மோதிட்டு போயிட்டேன். சரி, யாராவது, எதுவாவது போடுவாங்க, கொஞ்சமாவது clue கிடைக்கும்னு பார்த்தேன். ம்ஹூம். ஒன்னும் வரலை.. please sir, ஏதாச்சும் clue கொடுங்க sir.
I've found the answer only in trial and error basis. But the problem has only single solution. All other options will leads to contradictions.
/*அதாங்க, ஜூதாட்ற கிளப்பு*/
நல்ல வேலை இப்படி போட்டு தப்பிச்சிட்டீங்க....
இல்லைனா தப்பா அர்த்தம் வந்திருக்கும்...
//இல்லைனா தப்பா அர்த்தம் வந்திருக்கும்...//
எக்குத்தப்பா வேற அர்த்தம் இருக்குதா? என்னதது?!
Data In adequate.....
Access Denied.......
/*வெண்பூ said...
கொஞ்ச நேரம் யோசிச்சி பாத்தேன்.. ஏதும் ஈசியான வழி இருக்குறதா தோணல.. அதனால கைய தூக்கிக்கிறேன்.. வேற யாராவது பதில் போட்டா சொல்லுங்க.. :)))*/
உங்களோட...இந்த கைய தூக்கின போட்டோ தான் எல்லா பதிவுலையும் வருதே......
அதனாலே யோசிப்பவருக்கு கொஞ்சம் வித்தியாசமா... செய்து போட்டோ எடுத்து போடுங்க....
//Data In adequate.....
Access Denied.......//
Enough Data provided.
Access already granted..;-)
I got it...
9 A 4 Q J 7 3 2 10 5 K 8 6
ஒரு வாரம் கழிச்சி யோசிச்ச உடனே ஒரே அட்டெம்ப்ட்ல 10 நிமிசத்துல விடை கெடச்சிடுச்சி...
கலக்கிட்டீங்க வெண்பூ,
வழக்கம் போல சரியான விடை!!!:-)
Post a Comment