முன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல!!!!!!!!!
ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற விலையில் விற்கிறார். அழகிரி தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 3 கிலோ என்ற விலையில் விற்கிறார்.
ஒரு நாள் இருவரிடமும் தலா 60 கிலோ அரிசி இருக்கிறது. ஆனால் அன்றைக்கு ஸ்டாலினால் வியாபாரத்துக்கு போக முடியவில்லை. அதனால், தன்னிடமுள்ளதை அழகிரியிடம் ஒப்படைத்து, அதையும் தனக்காக சந்தையில் விற்று வரும்படி கூறுகிறார்.
ஸ்டாலின் விற்கும் விலை அழகிரிக்குத் தெரியுமாதலால், ஸ்டாலினுக்கு 30 ரூபாயை கொடுத்துவிட்டு அரிசியை வாங்கிக் கொள்கிறார். சந்தையில் விற்கும்பொழுது அழகிரி வழக்கம் போல விற்காமல், இரு அரிசிகளையும் கலந்து, இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ அரிசி வீதம் விற்றுத் தீர்த்தார். கணக்குப் பார்த்தார்.
ஸ்டாலினுக்கு 60கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 2 கிலோ வீதம், முப்பது ரூபாய். அது கொடுத்தாகிவிட்டது. அந்த அரிசியை விற்றதற்கு 30 ரூபாய் கையில்.
தனக்கு 60 கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 3 கிலோ வீதம், 20 ரூபாய் கையில். ஆக மொத்தம் 50 ரூபாய் இருக்க வேண்டும்.
ஆனால் அவர் கையில் 48 ரூபாய்தான் இருந்தது. இரண்டு ரூபாயை எங்கே, எப்படி கோட்டை விட்டார் அழகிரி?
பின்குறிப்பு : இது ஒரு அக்மார்க் புதிர் கணக்கு. நீங்கள் நுண்ணரசியலையெல்லாம் தேடினால், நான் பொறுப்பல்ல!!!
ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற விலையில் விற்கிறார். அழகிரி தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 3 கிலோ என்ற விலையில் விற்கிறார்.
ஒரு நாள் இருவரிடமும் தலா 60 கிலோ அரிசி இருக்கிறது. ஆனால் அன்றைக்கு ஸ்டாலினால் வியாபாரத்துக்கு போக முடியவில்லை. அதனால், தன்னிடமுள்ளதை அழகிரியிடம் ஒப்படைத்து, அதையும் தனக்காக சந்தையில் விற்று வரும்படி கூறுகிறார்.
ஸ்டாலின் விற்கும் விலை அழகிரிக்குத் தெரியுமாதலால், ஸ்டாலினுக்கு 30 ரூபாயை கொடுத்துவிட்டு அரிசியை வாங்கிக் கொள்கிறார். சந்தையில் விற்கும்பொழுது அழகிரி வழக்கம் போல விற்காமல், இரு அரிசிகளையும் கலந்து, இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ அரிசி வீதம் விற்றுத் தீர்த்தார். கணக்குப் பார்த்தார்.
ஸ்டாலினுக்கு 60கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 2 கிலோ வீதம், முப்பது ரூபாய். அது கொடுத்தாகிவிட்டது. அந்த அரிசியை விற்றதற்கு 30 ரூபாய் கையில்.
தனக்கு 60 கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 3 கிலோ வீதம், 20 ரூபாய் கையில். ஆக மொத்தம் 50 ரூபாய் இருக்க வேண்டும்.
ஆனால் அவர் கையில் 48 ரூபாய்தான் இருந்தது. இரண்டு ரூபாயை எங்கே, எப்படி கோட்டை விட்டார் அழகிரி?
பின்குறிப்பு : இது ஒரு அக்மார்க் புதிர் கணக்கு. நீங்கள் நுண்ணரசியலையெல்லாம் தேடினால், நான் பொறுப்பல்ல!!!
49 comments:
ஸ்டாலின் அரிசி 60 கிலோ
அழகிரி அரிசி 60 கிலோ
மொத்தம் 120 கிலோ
ஒரு கிலோவின் விற்பனை விலை (ரூ0.40 => இரண்டு ரூபாய்க்கு 5 கிலோ)
மொத்த விலை 120 * 0.40 => ரூ 48
சரியாத்தான் இருக்கு.
:)))
ஒரு வேளை ஒரு கிலோ அரிசி ரூ 2 மற்றும் ரூ 3 என்றால் மொத்தமாக விற்கும்போது 2 கிலோ 5 ரூபாய் என்று விற்கலாம். ஆனால் 2 கிலோ ஒரு ரூபாய், 3 கிலோ ஒரு ரூபாய் என்றால் அதே அளவில் பணம் கிடைக்க ஒரு கிலோ (0.50 + 0.33333) / 2 = 0.4166... (அதாவது 41.6666.. பைசாவிற்கு) க்கு விற்றிருக்க வேண்டும் ஆனால் அவர் 1.6667.. பைசா குறைவாக 40 பைசாவிற்கு விற்றதால் ஒரு கிலோவிற்கு 1.6667 பைசா. மூன்று கிலோவிற்கு நஷ்டம் 5 பைசா, அதனால் 120 கிலோவிற்கு நஷ்டம் 2 ரூபாய்)
சரியா?
ஆனாலும் அழகிரி மட்டும் அண்ணாவின் கொள்கையை பின்பற்றி ரூபாய்க்கு 3 கிலோ அரிசி தருவதாக சொன்னதாக உங்கள் நுண்ணரசியல் சூப்பர்.. :)))
//இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ அரிசி வீதம் விற்றுத் தீர்த்தார்.//
எனவே ஒரு ரூபாய்க்கு இரண்டரை கிலோ அரிசி.
மாற்றிச் சொன்னால் இரண்டரை கிலோ அரிசிக்கு ஒரு ரூபாய் கிடைக்கும்
120 கிலோ அரிசிக்கு (120 ÷ 2½ = 48) 48 ரூபாய்தான் கிடைக்கும்.
அரிசியைக் கலந்து விற்றது அழகிரியின் தவறு; தனித்தனியாக விற்றிருக்கவேண்டும்.
// எங்கே, எப்படி கோட்டை விட்டார் அழகிரி?//
ஸ்டாலினிடம் அழகிரி கோட்டை(யை) விட்டுவிடுவார் என்கிறீர்களா?
வெண்பூ,
சரியான விடைதான். பைசா லெவலில் என்னை சரிபார்க்க வைத்து விட்டீர்கள்!!!:-)
நுண்ணரசியலா?! அப்படின்னா என்னதுங்ணா?!;-))
அ. நம்பி,
அதுதான் தெளிவாயிருக்கே? எங்கே, எப்படின்னுதான் கேள்வி. விளக்கம் போதுமானதாயில்லையே!!
அப்புறம், இந்த எங்கே, எப்படின்னதுக்கு, நீங்க சொல்ற மாதிரி, நான் எதுவும் நினைக்கலை!! நோ கமெண்ட்ஸ்!!!:-)
குத்து மதிப்பா கணக்கு பார்த்தாலே தான், தெளிவா தெரியுதே ஸார்... அவர் வாங்கியது 1 ரூபாய்க்கு 2 கிலோ அரிசி.. ஆனா விற்கும்போது 1 ரூபாய்க்கு 2.5 கிலோ அரிசி கொடுத்திருக்கிறார்...தம்முடைய அரிசியில் இருந்து..
அதனால் வந்த நட்டமே அந்த 2 ரூபாய்
நையாண்டி நைனா ஸார்,
கணக்குன்னு வந்ததுக்கப்புறம் குத்துமதிப்பால்லாம் சொன்னா எப்படி? ஒவ்வொரு குத்துக்கும் எவ்வளவு மதிப்புன்னு போட்டுத் தாக்குங்க!!
மொத்தம் - 120 கிலோ.
5 கிலோ 2 ரூ
2+3 அல்லது 3+2
அதாவது ஸ்டாலின் அரிசி 2 கி + அழகிரி அரிசி 3 கி அல்லது ஸ்டாலின் அரிசி 3 கி + அழகிரி அரிசி 2 கி.
இப்படி விற்க்கும் போது எதாவது ஒரு அரிசி 20 பேர்க்கு விற்றதும் முடிந்துவிடும். அப்போது காசு 40 ரூ இருக்கும். மீதமுள்ள 20 கி அரிசியை விற்றால் 8 ரூ கிடைக்கும். மொத்தம் 48 ரூபாய் தான்.
do u want in detail????
//do u want in detail????//
Of course!!!!!!!:-)
ஜேகே,
சரியான/எளிதான பாதையில் விளக்க முயன்றிருக்கிறீர்கள். கடைசியில் கொஞ்சம் தொங்குகிறது. அது ஐம்பது ரூபாய் கிடைத்திருக்க வேண்டுமென்றால், எப்படி விற்றிருக்க வேண்டும் என்று விளக்கினால் நல்லது.
மொத்த 120 கிலோவும் 5 கிலோ வீதம் 24 பேர்க்கு விற்கலாம்.
50ரூ க்கு விற்ற வேண்டுமானால்
இரண்டு அரிசிகளையும் அதனுடைய விலையில் தனித்தனியாக விற்கலாம்.
ஹாஆஆ ஜேகே,
தனித் தனியா விற்றால் சரியாத்தானே வரும்! நீங்க முந்தின கமென்டில் சொன்ன லாஜிக்லேயே யோசிச்சுப் பாருங்க. கடைசி பகுதி மட்டும் மாத்தனும்.
//ஸ்டாலினுக்கு 60கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 2 கிலோ வீதம், முப்பது ரூபாய். அது கொடுத்தாகிவிட்டது. அந்த அரிசியை விற்றதற்கு 30 ரூபாய் கையில்.//
இல்லை. அந்த அரிசி வாங்கப்பட்டது ரூபாய் 30
விற்கப்பட்டது ரூபாய் 24க்கு (5 கிலோ
2 ரூபாய் என்றால் 60 கிலோ 24 ரூபாய்)
//தனக்கு 60 கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 3 கிலோ வீதம், 20 ரூபாய் கையில். ஆக மொத்தம் 50 ரூபாய் இருக்க வேண்டும்.//
இந்த அரிசியும் விற்கப்பட்டது
விற்கப்பட்டது ரூபாய் 24க்கு (5 கிலோ
2 ரூபாய் என்றால் 60 கிலோ 24 ரூபாய்)
எனவே 24 + 24 = 48
1 ரூபாய்க்கு 2 கிலோ அரிசி எனும் போது, ஒரு கிலோ அரிசி அரை ரூபாயும் அரை கிலோ அரிசி கால் ரூபாயும் ஆகிறது.
1 ரூபாய்க்கு 3 கிலோ அரிசி எனும் போது ஒரு கிலோ அரிசி 0.333333333333333333333 ரூபாயும் அரை கிலோ அரிசி 0.1666666666666667 என்றும் ஆகிறது.
இப்போது அவரின் 5 கிலோவில் 2.5 கிலோ, 2 ரூபாய் அரிசியும் 2.5 கிலோ 3 ரூபாய் அரிசியும் இருக்கும்போது
அதனுடைய விலை (5/2*1/2) + (5/2*1/3) அதாவது. (25/12) ரூபாய் ஆகிறது
ஆனால் அவர் வைத்துள்ள விலையோ 2 ரூபாய்.
இங்கே
(25/12) > 2
ஆக அவருக்கு
(25/12 -2 ) ரூபாய் நட்டம் ஆகிறது. ஒரு 5 கிலோ விற்பனையில்.
அவரிடம் 120 கிலோ உள்ளது. அதாவது 24, 5 கிலோ உள்ளது. அதாவது 24 முறை நட்டம் அடைகிறார்
ஆக மொத்த நட்டம்
=(25/12-2)*24
=((25-24)/12)*24
=2
அதுவே அந்த 2 ரூபாய் ஆகும்
இந்த விளக்கம் போதுமா....?????
( இதை முடித்து திரும்பினால்... என் பின்னால், என் மேலாளர், நற...நற.. .)
இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ வீதம் பன்னிரண்டு முறை விற்றால் அறுபது கிலோ அரிசி விற்றாகிவிடும்.
60 கிலோ அரிசிக்கு 24 ரூபாய் கிடைத்திருக்கும்.
இந்த 60 கிலோ அழகிரியின் அரிசி.
ரூபாய்க்கு மூன்று கிலோ விற்கவேண்டிய அழகிரியின் அரிசி விற்று முடிந்துவிட்டதால் எஞ்சியுள்ள ஸ்டாலினின் 60 கிலோ அரிசியை ரூபாய்க்கு இரண்டு கிலோ என்றுதான் விற்றிருக்கவேண்டும்.
சரியா?
நையாண்டி நைனா சார்,
ரொம்ப வெளக்கிட்டீங்க! டாங்க்ஸ்!!!;-))
புரூனோ சார்,
ஓகேதான்!!!
/*நையாண்டி நைனா சார்,
ரொம்ப வெளக்கிட்டீங்க! டாங்க்ஸ்!!!;-))*/
"SIR" பட்டம் வாங்குற அளவிர்கெல்லாம் இல்லை என்னோட கணித அறிவு...
விடை சரியா... அதை சொல்லுங்க.... ( அதாவது... நீங்க எதிர்பார்த்த / வேண்டிய )
அ. நம்பி,
உங்க லாஜிக் என்னமோ ஓரளவு சரிதான்னாலும், கணக்கு உதைக்குதே! 54 ரூபாய் வருது பாருங்க!!:-))
//விடை சரியா... அதை சொல்லுங்க.... //
சரியா இருந்ததாலேதானே டாங்ஸ் சொல்லியிருக்கேன்!!:-)
//( அதாவது... நீங்க எதிர்பார்த்த / வேண்டிய ) //
ஆனால் எதிர்பார்த்த / வேண்டிய விடை இது இல்லைதான். அதுக்காக உங்க விடை தப்பில்லை.:-))
/*ஆனால் எதிர்பார்த்த / வேண்டிய விடை இது இல்லைதான். அதுக்காக உங்க விடை தப்பில்லை.:-))*/
ஆகா... இதுக்கா..இவ்ளோ சிரமபட்டு விளக்கினேன்...??????
இவ்ளோ நேரம் யோசிச்சேன்... இப்போ குழம்புறேன்
60+60=120
120/5=24
24*2=48
//உங்க லாஜிக் என்னமோ ஓரளவு சரிதான்னாலும், கணக்கு உதைக்குதே! 54 ரூபாய் வருது பாருங்க!!:-))//
எஞ்சியுள்ள 60 கிலோ அரிசியை ரூபாய்க்கு இரண்டு கிலோ என்று விற்றிருந்தால்தான் 54 ரூபாய் ஆகும்.
ஆனால் தொடர்ந்து இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ வீதம் விற்றதால் மேலும் 24 ரூபாய் கிடைத்திருக்கும்.
மொத்தம் கிடைத்தது 48 ரூபாய்தானே?
கணக்கு உதைக்கவில்லையே?
நீங்கள் யோசிப்பவர் மட்டுமல்லர்; மற்றவர்களை நன்கு யோசிக்கச் செய்பவரும்கூட.
நையாண்டி நைனா,
தேவையில்லாம குழம்பாதீங்க! எப்படி விடை சொன்னால் என்ன? விடை சரியா வந்தா சரிதான்!
Jones,
How could it be sold for total Rs.50? You hadnt explained that!!
அ. நம்பி,
50 ரூபாய் கிடைத்தால் நியாயம். 48 கிடைத்தால் நஷ்டம். 54 கிடைத்தால் அநியாயம் இல்லையா? உங்கள் லாஜிக்படி, 50க்கு எப்படி விற்கலாம் என்று ஐடியா கொடுங்கள்!!!
கடைசி வரிக்கு நன்றி!!!:-))
யோசிப்பவரே நீங்க பேசுறது என்ன மொழின்னே தெரியலையே என்ன பண்றது? தெரியாத்தனமா உள்ள வந்துட்டனோ. ரொம்ப நாளா கேட்கணும்னு இருந்தேன். நீங்க தான் அந்த ஒக்காந்து யொசிப்பாங்யலே அவிங்கியலோ?
//நீங்க பேசுறது என்ன மொழின்னே தெரியலையே //
செம்மொழிதான் தலைவா!!:-)
//நீங்க தான் அந்த ஒக்காந்து யொசிப்பாங்யலே அவிங்கியலோ?//
நாமளும் ஒருத்தர். அவ்ளோதான்!!:-)
ஸ்டாலின் (தனி விற்பனை): 60 கிலோ வகுத்தல் 2 கிலோ 30 units x ரூ1.00 = 30:00
ஸ்டாலின்: (கூட்டணி விற்பனை)60 கிலோ வகுத்தல் 5 கிலோ 12 units x ரூ2.00 = 24:00
----------------------------------------------------------------------------------------
நஷ்டம் 6:00
----------------------------------------------------------------------------------------
அழகிரி: (தனி விற்பனை)60 கிலோ வகுத்தல் 3 கிலோ 20 units x ரூ1.00 = 20:00
அழகிரி: (கூட்டணி விற்பனை) 60 கிலோ வகுத்தல் 5 கிலோ 12 units x ரூ2.00 = 24:00
----------------------------------------------------------------------------------------
லாபம் 4:00
-------------------------------------------------------------------------------------------
ஆக மொத்தம் 6:00 கழித்தல் 4:00 இரண்டு ரூபாய் காணமல் போய்விட்டது
Selling separately
Stalin Rice = 50 P per Kg
Azagiri Rice = 33.333 Per Kg
Mixing and Selling
Stalin Rice = 40 p per Kg
Azagiri Rice = 40 p per Kg
==>
Azagiri rice earns by mixing = (24 - 20) = 4 rupees.
Stalin rice loses by mixing = (30 -24) = 6 rupees
==>
Net = (6 Loss) - (4 Gain) = 2 Rupees Loss.
வாத்தியார் ஐயா,
விளக்கம் சரியாகத்தான் இருக்கிறது. அப்படியே, இரண்டு அரிசியையும் கலந்த பிறகு, 50 ரூபாய் கிடைக்க எப்படி விற்றிருக்கலாம் என்றும் முடிந்தால் யோசியுங்கள்!!
(வாத்தியார் ஸ்டூடண்டோட கேள்விக்கு பதில் சொல்றார் டோய்!!):-))
NicePyg,
Explanations are fine and ok. Try also, how could it be sold after mixing, to get a total of Rs.50!!
If he sells 3 kgs for 1.25 Rs he will get 50 Rs.
நையாண்டி நைனா,
இதுவும் ஓகேதான். ஆனால் "ரூபாய்க்கு முன்று கிலோ", "இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ" அப்படின்னு "ரவுண்டா" சொல்லும்போது எவ்ளோ அழகாயிருக்கு. "ஒன்னேகால்"னு சொன்னா ஒரு இதுவா இருக்க மாதிரியில்ல?!:-))
உங்களோட தளராத விடாமுயற்சியை பாராட்டி கம்பெனி உங்களுக்கு ஒரு அதிசய க்ளூ கொடுக்கப் போவுது. அதாவது கலந்து வச்ச அரிசி மொத்தத்தையும் ஒரே விலை அளவில்தான் விற்கனுமா? விலைவாசி ஏறும், இறங்கும்!!!
சிறு துளி பெரு வெள்ளம். சின்ன சின்ன பைசாவை கணக்கு பார்க்காமல் விட்டால் இப்படித்தான் ஆகும்.
யோசிக்க வச்சுட்டீங்க
யோசிப்பவர்,
ஸ்டாலின் அரிசியை ரெண்டு ரெண்டு கிலோவா பிரிச்சி கட்டினா 30 பை வரும்.
அழகிரி அரிசியை மூனு மூனு கிலோவா பிரிச்சி கட்டினா 20 பை தான் வரும்.
ரெண்டையும் கலந்து ஐந்து கிலோ கட்டு கட்டினால் 24 பை வரும்.
அதாவது அழகிரி குடுதத அளவை விட 4 பை அதிகமா அவர் விலைக்கு விற்கப்படுது. அதை சரி கட்ட ஸ்டாலினோட கணக்குல 6 பை குறையுது. அதாவது அவரோட 6 பையை அழகிரியின் 4 பை விலைக்கு வித்திருக்காரு. அதாவது 6 ரூபாய்க்கு பதிலா 4 ரூபாய். அதான் அந்த 2 ரூபாய் நஷ்டம்..
என்ன ரொம்ப குழப்பிட்டேனா?
//ஐம்பது ரூபாய் கிடைத்திருக்க வேண்டுமென்றால், எப்படி விற்றிருக்க வேண்டும்//
ஐந்து ஐந்து கிலோவா 20 பையை கட்டி வித்துடனும். 40 ரூபாய் கிடைக்குமா?
மீதி இருக்குற 20 கிலோவை
1)ரெண்டு ரெண்டு கிலோவா கட்டி ஸ்டாலின் விலைக்கு வித்தா 10 ரூபாய்.
2) ஐந்து ஐந்து கிலோவா கட்டி மொத்தம் 4 பை.. ஒரு பை 2ரூபாய்ன்னு விக்கறதுக்கு பதிலா 2.5 ரூபாய் (கடைசி இல்லையா.. டிமாண்டு அதிகமாகி விலை ஏறிப்போயிடுச்சி) போட்டு விக்கலாம். அப்பவும் 10 ரூபாய் கிடைக்கும்
இல்லையா.. மொதல்ல இருந்தே ஐந்து கிலோ ரூ 2.0833333333 க்கு விக்கலாம்.
ஆக மொத்தம் கடைசியில 50 ரூபாய் கிடைச்சதா.
விற்றிருக்க வேண்டிய விடை: 2.083
கிலோ அரிசி Rs 0.50க்கும் உள்ளது Rs 0.33333க்கும் உள்ளது.
ஆதலால் ஒரு கிலோவின் நிகர விலை
0.50000 +
0.33333
--------
0.83333 /
2
--------
0.41665 = ஒரு கிலோ அரிசியின் நிகர விலை
0.416665
5
--------
2.083325
--------
என்ன சரியா யோசிப்பவரே?
தகடூர் கோபி,
கலக்கிட்டீங்க! நான் எதிர்பார்த்த விடையை(யும்) சொல்லிட்டீங்க!! விளக்கங்களுக்கு நன்றி!!
Amar,
சரியான விடைதான்!!
ஆனால், நையாண்டி நைனாவுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்!!
//ஆனால் "ரூபாய்க்கு முன்று கிலோ", "இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ" அப்படின்னு "ரவுண்டா" சொல்லும்போது எவ்ளோ அழகாயிருக்கு. "ஒன்னேகால்"னு சொன்னா ஒரு இதுவா இருக்க மாதிரியில்ல?!:-))
உங்களோட தளராத விடாமுயற்சியை பாராட்டி கம்பெனி உங்களுக்கு ஒரு அதிசய க்ளூ கொடுக்கப் போவுது. அதாவது கலந்து வச்ச அரிசி மொத்தத்தையும் ஒரே விலை அளவில்தான் விற்கனுமா? விலைவாசி ஏறும், இறங்கும்!!!
//
Please publish the actual result.
We want to see, the correct approach/answer and what you expect?
/*உங்களோட தளராத விடாமுயற்சியை பாராட்டி கம்பெனி உங்களுக்கு ஒரு அதிசய க்ளூ கொடுக்கப் போவுது. அதாவது கலந்து வச்ச அரிசி மொத்தத்தையும் ஒரே விலை அளவில்தான் விற்கனுமா? விலைவாசி ஏறும், இறங்கும்*/
இப்படி எல்லாம் இஸ்டதுக்கு வரைமுறைகளை மாற்றினால் அது போ ங்கு ஆட்டம் என்று கருதப்படும்......
அப்புறம்... நான் 10 கிலோ அரிசியை தானமா கூட கொடுப்பேன்... மீதி இருக்கிற அரிசியை அதிக விலைக்கு விற்பேன்... என்று கூட சொல்ல முடியும்...
நையாண்டி நைனா,
//இப்படி எல்லாம் இஸ்டதுக்கு வரைமுறைகளை மாற்றினால் அது போ ங்கு ஆட்டம் என்று கருதப்படும்......//
நீங்கள் ஏற்கனவே சொன்ன விடைகள் எல்லாம் சரிதான். வேறு என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன என்ற ஒரு தேடல் முயற்சிதானே இது!! விடைகள் நாளை!!:-))
ஐயா யோசிப்பவரே.....
யோசிச்சி...யோசிச்சி... விடிஞ்சி போச்சி..... விடையை கொஞ்சம் சொல்லுங்க.....
6 kg rice for Rs 2.50.
6 * 20 = 120 kg.
2.50 * 20 = 50 Rs.
12 kg rice for Rs 5.
12 * 10 = 120 kg.
5 * 10 = 50 Rs.
அமெரிக்க ஜனாதிபதி... முடிவை கூட உடனே சொல்லிட்டாங்க..... ஆனா நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க... நீங்க என்ன புதிர் உலகத்து ரஜினியா?????
உங்களின் இந்த பதிவினை 'வலைச்சரத்தில்' அறிமுகம் செய்துள்ளேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும். நன்றி.
madhavan 17-12.2010
Post a Comment