போன மாதம் கொத்ஸை தொடர்ந்து நாமும் குறுக்கெழுத்துப் போட்டோம். ஆனா சரியா வரலை. ஆனாலும் தன்னுடைய முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல இந்த மாதமும் புதிரை உருவாக்கிட்டேன். போன முறை செய்ததில் தவறு என்று தோன்றியவைகளை இந்த முறை சரி செய்திருக்கிறேன். கேள்விகள், விடைகள் இரண்டுமே எளிதாக இருக்கும்படியே புதிரை அமைத்திருக்கிறேன்.
அப்புறம் கொத்ஸ் இந்த மாதம் மதிப்பெண் வேறு போட்டு விட்டாரே. அதையும் காப்பியடிக்காவிட்டால் எப்படி என்பதால், விடை சொன்னவர்களுக்கான மதிப்பெண்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்(போன தடவை ஒரே ஒருத்தர்தானே பதில் சொன்னார்! ஒருத்தருக்காக ஒரு லிங்க்கா?!).
டிஸ்கி - 3:
மரியாதையாக நான்கைந்து பேராவது பதில் சொல்லனும். அப்படி சொல்லலைன்னா, அடுத்த மாதமும் புது கு.எ.புதிர் போடுவேன். நாலைந்து பேராவது பதில் சொன்னால் இந்த மாதத்தோடு நிறுத்தி கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்!!
இப்ப புதிரைப் பார்க்கலாம்
1 | 3 | 4 | 8 | |||||
2 | 5 | |||||||
6 | ||||||||
9 | 7 | |||||||
19 | 16 | 11 | ||||||
18 | 10 | |||||||
17 | 13 | |||||||
15 | 14 | 12 |
இடமிருந்து வலம் :
2) விழியருகில் இதயத்துடிப்பின் ஓசை மாறினால் தெளிவாகத் தெரியும்.(4).
3) மாமாவை ஒருமுறை ஆகாரமில்லாமல் ஆறுதல் செய்தால் மாற்றம் வரும்.(4)
6) பணிவின் ஸ்வரத்தை மாற்றி முட்டையை உடைத்தால் இரக்கம் பிறக்கும்.(3)
11) வகையின் கையுடைத்து உள்ளுடையில் அடைந்திருப்பது மறுபாதி வடிவமானால் தமிழ்மறை.(5)
17) பல்லியின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2)
மேலிருந்து கீழ் :
1) சுழிகள் நிறைந்த கன்னி விஷயத்தில் நஞ்சை அகற்றினால் கௌரவம்.(5)
3) மடி மீது கால் வைத்து ஏறிப் போ.(2)
4) தற்கொலையின் அடிமுடியை ஆராய்ந்தால் சிரம் தனியே வந்துவிடும்.(2)
8) ஞானத்தின் ஒரு கரை வரை அடைய இது வழிகாட்டும்.(4)
16) மீசையை திருப்பி விட்டுத் திரித்து கோபத்தில் அரசனை விரட்டியதால் அண்மையில் கிடைத்தது.(4)
19) உயர்ந்தோர் தரச்சொல்லி அழுக்கின் சோகம் அகற்றி துன்புறுத்தும் உறுப்பு.(4)
வலமிருந்து இடம் :
5) வதக்க ஆரம்பித்து காலையில் பறவையை விரட்டினால் மீனைப் பிடிக்கலாம்.(2)
9) கரகத்தின் இடையில் சில சில சமயம் முடிந்தால் மறைக்கப்படும்.(5)
13) சாலையின் ஒரு ஓரத்தில் குரங்கு வந்தால் மணக்கும்.(4)
14) அங்குசமின் முனையில் அங்கதனின் இடையை சொருகினால் வெட்டிக் கூட்டம்.(4)
18) ஆட்டுத் தலைக்கு பதில் மீன் தலையை வைத்து வீணையை வாசி.(3)
கீழிருந்து மேல் :
7) கவலையின் காலை உடைத்து காதலின் தலையை வெட்டி உள்ளே நுழைத்தால் செய்தி தரும்.(4)
10) அவள் மருவி மனைவி என்பது தெய்வப்பிறவி.(5)
12) உட்காராததால் மலைமகள் கண்மண் தெரியாமல் நதியாக ஓடுகிறாள்.(5)
14) பதியின் சரி பாதி இவள்.(2)
15) மிச்சம் விழுந்ததை கழித்து எடுத்தால் அடிப்பான்.(2)
இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.
51 comments:
போன தடவை ஒருத்தர் தானா? ரெண்டு பேர் இருந்தோமே. என்னை இப்படி ப்ளாக் லிஸ்ட் செய்யலாமா?
நீங்க பாட்டுக்கு ஈசின்னு ஈசியா சொல்லிடறீங்க. நாங்கதானே சொல்லணும் ஈசியா இருக்கான்னு....
பதில் தெரியலைன்னா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு!! ஒரு 10 விடைகள் வரை போட்டாச்சு. இன்னும் கொஞ்சம் யோசிச்சிட்டு வரேன்.
போன தடவை நீங்க சாட்லதானே விடை சொன்னீங்க. அதான், அதை இதுல சேர்க்கலை!;-)
//நாங்கதானே சொல்லணும் ஈசியா இருக்கான்னு//
"ஈசி"ன்னு சொல்றது ஈசிதானே? நீங்க கூட "ஈசி"ன்னு சொல்லிப்பாருங்க. ஈசியா இருக்கும்!!;-)
கொத்ஸ்,
உங்களுடைய மதிப்பெண்களை அப்டேட் செய்து விட்டேன்.;-)
இன்னும் ஒண்ணு.
1 மேகீ கண்ணியம்
கொத்ஸ்,
மேகீ 1ம் சரியான விடையே
பெனாத்தல் சுரேஷ்,
எல்லாமே சரிதான். இந்த தடவை நீங்கதான் முதல்ல முடிச்சிர்க்கீங்க. எல்லாம் ஈசியாதானே இருந்தது?
//மரியாதையாக நான்கைந்து பேராவது பதில் சொல்லனும். அப்படி சொல்லலைன்னா, அடுத்த மாதமும் புது கு.எ.புதிர் போடுவேன். //
ம்ம்... அப்ப புதிரை முயற்சி செஞ்சா அடுத்த மாசம் புதிர் வருவதற்கான வாய்ப்புகள் குறைஞ்சிடும் போலிருக்கே :-)
ஏற்கெனவே பினாத்தலார் போட்டுட்டார்ப் போல. அதனால நான் மௌனமாவே விளையாடுறேன்.
(ஸ்ஸ்ஸப்பா.. புதிர் போடாம தப்பிக்கிறதுக்காக என்னவெல்லாம் பில்ட்-அப் கொடுக்க வேண்டியிருக்கு :)) - சோம்பேறி ஸ்ரீதர்)
என்னால் முடிந்த விடைகள் -
இவ
2: கண்ணாடி
3. மாறுதல்
6. கருணை
11. வள்ளுவம்
17. பலி
மேகீ
1. கண்ணியம்
3. மாடி
4. தலை
6. கருணை
16. சமீபம்
19. இடுப்பு
வ இ
5. வலை
9. ரகசியம்
13. சாமந்தி
14. சங்கமம்
18. மீட்டு
கீ மே
7. தகவல்
10. அவதாரம்
14. சதி
இ.வலம்
2. கண்ணாடி ,
3. மாறுதல்
6. கனிவு
11. வள்ளுவம்
17. பழி
மே.கீழ்
1. கண்ணியம்
3. மாடி
4. தலை
8 அறிவுரை
16. சமீபம்
19. இடுப்பு
கீ.மேல்
7. தகவல்
10. அவதாரம்
12. அமராவதி
14. சதி
15. கழி
வ.இடம்
5. வலை
9. ரகசியம்
13. சாமந்தி
14. சங்கம்
18. மீட்டு
சகாதேவன்
விடையும் போட்டிருந்தேனே..... வரவில்லையா?
நான் தான் முதலில் எழுதினேன் என்று நினைத்தேன். சுரேஷ் முந்திக்கொண்டாரே.
என் விடைகள் எல்லாம் சரியா?
சகாதேவன்
சகாதேவன்,
மேகீ 19ஐ தவிர மற்றதெல்லாம் சரி. அந்த ஒன்று மட்டும் பாக்கி!!;-)
Sridhar,
விடைகள் வந்து விட்டன. உங்கள் விடைகளில் இவ: 6,17 தவறு. மேகீ: 19 தவறு. 8 இன்னும் சொல்லவில்லை. மற்றதெல்லாம் போட்டவரை சரி. எது எது இன்னும் போடவில்லை என்று மதிப்பெண் பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!;-)
இடமிருந்து வலம் :
2) விழியருகில் இதயத்துடிப்பின் ஓசை மாறினால் தெளிவாகத் தெரியும்.(4). கண்ணாடி
3) மாமாவை ஒருமுறை ஆகாரமில்லாமல் ஆறுதல் செய்தால் மாற்றம் வரும்.(4) மாறுதல்
6) பணிவின் ஸ்வரத்தை மாற்றி முட்டையை உடைத்தால் இரக்கம் பிறக்கும்.(3) கருணை
11) வகையின் கையுடைத்து உள்ளுடையில் அடைந்திருப்பது மறுபாதி வடிவமானால் தமிழ்மறை.(5) வள்ளுவம்
17) பல்லியின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2) பழி**
மேலிருந்து கீழ் :
1) சுழிகள் நிறைந்த கன்னி விஷயத்தில் நஞ்சை அகற்றினால் கௌரவம்.(5) கண்ணியம்**
3) மடி மீது கால் வைத்து ஏறிப் போ.(2) மாடி
4) தற்கொலையின் அடிமுடியை ஆராய்ந்தால் சிரம் தனியே வந்துவிடும்.(2) தலை
8) ஞானத்தின் ஒரு கரை வரை அடைய இது வழிகாட்டும்.(4) _ _ ணை _*
16) மீசையை திருப்பி விட்டுத் திரித்து கோபத்தில் அரசனை விரட்டியதால் அண்மையில் கிடைத்தது.(4) சமீபம்
19) உயர்ந்தோர் தரச்சொல்லி அழுக்கின் சோகம் அகற்றி துன்புறுத்தும் உறுப்பு.(4) கொடுக்கு.***
வலமிருந்து இடம் :
5) வதக்க ஆரம்பித்து காலையில் பறவையை விரட்டினால் மீனைப் பிடிக்கலாம்.(2) வலை
9) கரகத்தின் இடையில் சில சில சமயம் முடிந்தால் மறைக்கப்படும்.(5) ரகசியம்
13) சாலையின் ஒரு ஓரத்தில் குரங்கு வந்தால் மணக்கும்.(4) சாமந்தி
14) அங்குசமின் முனையில் அங்கதனின் இடையை சொருகினால் வெட்டிக் கூட்டம்.(4) சங்கம் **
18) ஆட்டுத் தலைக்கு பதில் மீன் தலையை வைத்து வீணையை வாசி.(3) மீட்டு
கீழிருந்து மேல் :
7) கவலையின் காலை உடைத்து காதலின் தலையை வெட்டி உள்ளே நுழைத்தால் செய்தி தரும்.(4) தகவல்
10) அவள் மருவி மனைவி என்பது தெய்வப்பிறவி.(5) அவதாரம்
12) உட்காரத்தால் மலைமகள் கண்மண் தெரியாமல் நதியாக ஓடுகிறாள்.(5) அமராவதி
14) பதியின் சரி பாதி இவள்.(2) சதி
15) மிச்சம் விழுந்ததை கழித்து எடுத்தால் அடிப்பான்.(2) கழி**
* விடை தெரிய வில்லை.
** விடைகள் தவறாக இருக்கலாம்.
*** அடப்பாவிகளா, இப்படியா முதல் எழுத்துக்கு எந்த தொடர்பும் இல்லாம வைக்கிறது. :)
நீங்கள் விடை சொல்வதற்குள், எனக்கு சரியான விடைகள் தெரிந்தால் தெரிந்தால் மீண்டும் ஒரு முறை அனுப்பி வைக்கிறேன்.
அமர்,
இவ: 6 தவறு
மேகீ 8 : *
மற்றதெல்லாம் சரியான விடையே "**" உட்பட!!;-)
//*** அடப்பாவிகளா, இப்படியா முதல் எழுத்துக்கு எந்த தொடர்பும் இல்லாம வைக்கிறது. :)/
தொடர்பு இருக்கிறதே!! தொல்காப்பியம்!!!;-))
யோவ் யோசிப்பவரே..
மாசக்கடைசி அலுவலக குடைச்சலப்ப இந்த மாதிரி மண்டைய குடைய விடுறதுக்கு முதல் வாரத்தில் போட்டால் ஏதோ இருக்குற கொஞ்சூண்டு அறிவ யூஸ் பண்ணுவமே தல..
நர்சிம்
நர்சிம்,
//மாசக்கடைசி அலுவலக குடைச்சலப்ப இந்த மாதிரி மண்டைய குடைய விடுறதுக்கு முதல் வாரத்தில் போட்டால் ஏதோ இருக்குற கொஞ்சூண்டு அறிவ யூஸ் பண்ணுவமே தல..
//
இந்த மாதிரி மாசகடைசி அலுவலக் குடைச்சல்களிலிருந்து (நான்) ரிலாக்ஸ் ஆகறதுக்குத்தானே இந்த மாதிரி போட்டியே நடத்துறோம். நீங்களும் ரிலாக்ஸ் பண்ணுங்க!!;-)
இடமிருந்து வலம்
2- கண்ணாடி
3- மாறுதல்
6- கணிவு
11- வள்ளுவர்
17- பழி
மேலிருந்து கீழ்
1- கண்ணியம்
3- மாடி
4- தலை
8- அறிவுரை
16- சமீபம்
19-
வலமிருந்து இடம்
5- வலை
9- ரகசியம்
13- சாமந்தி
14- சங்கம்
18- மீட்டு
கீழிருந்து மேல்
7- தகவல்
10- தேவதாரம்
12-அமாரவதி
14- சதி
15- கழி
-அரசு
இவ
6 - கனிவு
17 - பழி
மேகீ
8 - அறிவுரை
19 - கொடுக்கு
கீமே
12 - அமராவதி ('உட்காரததால்' ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா 'உட்காரத்தால்'ன்னு இருக்கு. அதான் குழம்பிட்டேன்)
15 - கழி
எல்லாம் போட்டாச்சு!!
11 வள்ளுவம்
8 அறிவுரை
19 கொடுக்கு (தெய்வமே எப்ப்
9 ரகசியம்
10 அவதாரம் (நைஸ்)
12 அமராவதி (கேள்வி தப்பு நைனா!)
உட்காரத்தால் அப்படின்னு பார்த்த உடனே உள்ளே காரம் அப்படின்னு உருளைக்கிழங்கு போண்டா வரைக்கும் போயிட்டேன். அது என்னடான்னா உட்காராததால். கேள்வி தப்பு!! எல்லாருக்கும் மார்க் குடுக்கணும்!!
சில குறிப்புகள் பத்திப் பேசணும். இப்போ நேரமில்லை. அப்புறமா ஒரு நாள் மின்னரட்டையில்....
Sridhar,
//'உட்காரததால்' ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா 'உட்காரத்தால்'ன்னு இருக்கு. அதான் குழம்பிட்டேன்)
//
ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை சரி செய்து விட்டேன். சுட்டியதற்கு நன்றி!!;-)
எல்லாமே சரிதான். அனைத்தையும் முடித்த இரண்டாவது ஆள் நீங்கதான்;-)
புதிர்கள் நன்றாக இருந்தது. எனக்குப் பிடித்த புதிர்கள்
பணிவின் ஸ்வரத்தை மாற்றி முட்டையை உடைத்தால் - மூணு சுழியில் ஒரு சுழியை உடைக்க சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றாக இருந்தது
உதைத்த க்ளூக்கள் சில
மேகீ
12) உட்காரத்தால் மலைமகள் - ஸ்பெல்லிங் மிஸ்டேக் போல. :-)
5) வதக்க ஆரம்பித்து - 'வ' வருது
கா'லை'-யிலிருந்து எப்படி 'லை' வருதுன்னு தெரியல. 'கா' என்று பறவை இருக்கா என்ன?
கீமே
15) மிச்சம் விழுந்ததை கழித்து எடுத்தால் அடிப்பான்.(2)
இங்கும் விடை 'கழி' என்பது சுலபமாக வந்துவிட்டது. ஆனால் 'மிச்சம் விழுந்தது' - கழிவு என்று வரும். அதிலிருந்து 'கழி' எப்படி வருகிறது என்று குறிப்பு சொல்கிறதா என்று தெரியவில்லை. 'அடிப்பதும்' விடையே குறிப்பில் ஒளிந்திருப்பதும் இலகுவாக்கிவிடுகின்றன.
நல்லதொரு புதிருக்கு நன்றி யோசிப்பவர்.
அரசு,
சொன்ன விடைகள் அனைத்தும் சரியே. 19 மட்டும்தான் பாக்கியா? சீக்கிரம் அதையும் முடிச்சுருங்க!;;))
கொத்ஸ்,
எல்லாமே சரியான விடைதான். Sridhar ஜஸ்ட் 10 நிமிஷம் உங்களுக்கு முன்னால முடிச்சுட்டார். 19 - ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை சொல்றீங்களா? அதை சரி பண்ணியாச்சு. இல்லைன்னா கேள்வியே தப்பா?
மேலிருந்து கீழ்
19- கொடுக்கு
-அரசு
3. Maadi
13. saamanthi
11. Valluvam
14. sathy
Tricky, Tough Treat. Continue pannunga :)
அரசு,
முடிச்சுட்டீங்க!!;-)
பாஸ்டன் பாலா,
என்னதிது? நாலே நாலு விடைகள்தான் சொல்லியிருக்கீங்க! மிச்சத்தை யார் சொல்வது. சீக்கிரம் வந்து கம்ப்ளீட் பண்ணுங்க!!
யோசிப்பவரே,
இவ: 6 கனிவு
மேகீ 8 : அறிவுரை
விடைகள் சரிதானே?
அமர்,
சரியான விடைகள்தான். நீங்கள் ஆறாவதாக முடித்திருக்கிறீர்கள்!!;-)
நானும் நிறைய போசிச்சி பார்த்தேன். . .
உங்க அளவுக்கு யோசிக்க முடியல. . .
பதில் என்னன்னு சொல்லுவீங்கதானே. . . .
அப்புறம் ஆற அமர யோசிக்கிறேன்.
saar... no tamil pram aappeech. poying home, typing thamilu, posting answeru latteru. ok saar ?
வெங்கட்ராமன்,
விடை இன்னும் ஒரு வாரம் கழித்துதான் சொல்லலாம் என்றிருக்கிறேன். இன்னும் டைம் இருக்கிறதே. நாளை வேறு விடுமுறை!! இன்னும் கொஞ்சம் யோசிங்க!!!
ஒன்னு ரெண்டு கூடவா தெரியலை?!
Jeeves aiya,
aappiiSla no tamilna, goto http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm. typing tamilu. solling vidaiyu. keep blogginggu.
answer quickku!!;-)
KRS,
இவ 6 தவறு. மேகீ 19 தவறு.
மேகீ 8,வ.இ 9, கீ.மே 10 ஆகியவற்றுக்கு இன்னும் விடை சொல்லலை.
மற்றதெல்லாம் சரிதான்.
இடமிருந்து வலம் :
2. கண்ணாடி
3. மாறுதல்
6. கனிவு
11. வள்ளுவம்
17. பழி
மேலிருந்து கீழ் :
1. கண்ணியம்
3. மாடி
4. தலை
8. ஞானவுரை
16. சமீபம்
19. உடுக்கை
வலமிருந்து இடம் :
5. வலை
9. ரகசியம்
13. சாமந்தி
14. சங்கம்
18. மீட்டு
கீழிருந்து மேல் :
7. தகவல்
10. அவதாரம்
12. வாமனவதி
14. சதி
15. கழி
தமிழ் பிரியன்,
மே.கீ 8,19 தவறு. கீ.மே 12 தவறு. மற்றதெல்லாம் சரி.
இடமிருந்து வலம் :
2) விழியருகில் இதயத்துடிப்பின் ஓசை மாறினால் தெளிவாகத் தெரியும்.(4).
கண்ணாடி
3) மாமாவை ஒருமுறை ஆகாரமில்லாமல் ஆறுதல் செய்தால் மாற்றம் வரும்.(4)
மாறுதல்
6) பணிவின் ஸ்வரத்தை மாற்றி முட்டையை உடைத்தால் இரக்கம் பிறக்கும்.(3)
கனிவு
11) வகையின் கையுடைத்து உள்ளுடையில் அடைந்திருப்பது மறுபாதி வடிவமானால் தமிழ்மறை.(5)
வள்ளுவம்
17) பல்லியின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2)
பழி
வலமிருந்து இடம் :
5) வதக்க ஆரம்பித்து காலையில் பறவையை விரட்டினால் மீனைப் பிடிக்கலாம்.(2)
வலை
9) கரகத்தின் இடையில் சில சில சமயம் முடிந்தால் மறைக்கப்படும்.(5)
ரகசியம்
13) சாலையின் ஒரு ஓரத்தில் குரங்கு வந்தால் மணக்கும்.(4)
சாமந்தி
14) அங்குசமின் முனையில் அங்கதனின் இடையை சொருகினால் வெட்டிக் கூட்டம்.(4)
சங்கம்
18) ஆட்டுத் தலைக்கு பதில் மீன் தலையை வைத்து வீணையை வாசி.(3)
மீட்டு
கீழிருந்து மேல் :
7) கவலையின் காலை உடைத்து காதலின் தலையை வெட்டி உள்ளே நுழைத்தால் செய்தி தரும்.(4)
தகவல்
10) அவள் மருவி மனைவி என்பது தெய்வப்பிறவி.(5)
அவதாரம்
12) உட்காராததால் மலைமகள் கண்மண் தெரியாமல் நதியாக ஓடுகிறாள்.(5)
அமராவதி
14) பதியின் சரி பாதி இவள்.(2)
சதி
15) மிச்சம் விழுந்ததை கழித்து எடுத்தால் அடிப்பான்.(2)
கழி
மேலிருந்து கீழ் :
1) சுழிகள் நிறைந்த கன்னி விஷயத்தில் நஞ்சை அகற்றினால் கௌரவம்.(5)
கண்ணியம்
3) மடி மீது கால் வைத்து ஏறிப் போ.(2)
மாடி
4) தற்கொலையின் அடிமுடியை ஆராய்ந்தால் சிரம் தனியே வந்துவிடும்.(2)
தலை
8) ஞானத்தின் ஒரு கரை வரை அடைய இது வழிகாட்டும்.(4)
கடவுள்
16) மீசையை திருப்பி விட்டுத் திரித்து கோபத்தில் அரசனை விரட்டியதால் அண்மையில் கிடைத்தது.(4)
சமீபம்
19) உயர்ந்தோர் தரச்சொல்லி அழுக்கின் சோகம் அகற்றி துன்புறுத்தும் உறுப்பு.(4)
அஸ்குபுஸ்கு.. எல்லாத்துக்கும் என் கிட்டையே பதில கேளுங்க.
இடமிருந்து வலம் :
2) கண்ணாடி - விழியருகில் இதயத்துடிப்பின் ஓசை மாறினால் தெளிவாகத் தெரியும்.(4).
3) மாறுதல் - மாமாவை ஒருமுறை ஆகாரமில்லாமல் ஆறுதல் செய்தால் மாற்றம் வரும்.(4)
6) கனிவு - பணிவின் ஸ்வரத்தை மாற்றி முட்டையை உடைத்தால் இரக்கம் பிறக்கும்.(3)
11) வள்ளுவம் - வகையின் கையுடைத்து உள்ளுடையில் அடைந்திருப்பது மறுபாதி வடிவமானால் தமிழ்மறை.(5)
17) பழி - பல்லியின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2)
மேலிருந்து கீழ் :
1) கண்ணியம் - சுழிகள் நிறைந்த கன்னி விஷயத்தில் நஞ்சை அகற்றினால் கௌரவம்.(5)
3) மாடி - மடி மீது கால் வைத்து ஏறிப் போ.(2)
4) தலை - தற்கொலையின் அடிமுடியை ஆராய்ந்தால் சிரம் தனியே வந்துவிடும்.(2)
8) அறிவுரை - ஞானத்தின் ஒரு கரை வரை அடைய இது வழிகாட்டும்.(4)
16) சமீபம் - மீசையை திருப்பி விட்டுத் திரித்து கோபத்தில் அரசனை விரட்டியதால் அண்மையில் கிடைத்தது.(4)
19) உடுக்கை - உயர்ந்தோர் தரச்சொல்லி அழுக்கின் சோகம் அகற்றி துன்புறுத்தும் உறுப்பு.(4)
வலமிருந்து இடம் :
5) வலை - வதக்க ஆரம்பித்து காலையில் பறவையை விரட்டினால் மீனைப் பிடிக்கலாம்.(2)
9) ரகசியம் - கரகத்தின் இடையில் சில சில சமயம் முடிந்தால் மறைக்கப்படும்.(5)
13) சாமந்தி - சாலையின் ஒரு ஓரத்தில் குரங்கு வந்தால் மணக்கும்.(4)
14) சங்கம் - அங்குசமின் முனையில் அங்கதனின் இடையை சொருகினால் வெட்டிக் கூட்டம்.(4)
18) மீட்டு - ஆட்டுத் தலைக்கு பதில் மீன் தலையை வைத்து வீணையை வாசி.(3)
கீழிருந்து மேல் :
7) தகவல் - கவலையின் காலை உடைத்து காதலின் தலையை வெட்டி உள்ளே நுழைத்தால் செய்தி தரும்.(4)
10) அவதாரம் - அவள் மருவி மனைவி என்பது தெய்வப்பிறவி.(5)
12) அமராவதி - உட்காராததால் மலைமகள் கண்மண் தெரியாமல் நதியாக ஓடுகிறாள்.(5)
14) சதி - பதியின் சரி பாதி இவள்.(2)
15) கழி - மிச்சம் விழுந்ததை கழித்து எடுத்தால் அடிப்பான்.(2)
Jeeves,
மேகீ 8 தப்பு. மேகீ 19 :- நீங்க பதில் சொல்லலைன்னா வேற யார் சொல்லுவா?
வடகரை வேலன்,
மேகீ 19 மட்டும் தவறு. மற்றதெல்லாம் சரி!!
19 மே கீ - கொடுக்கு ?
வடகரை வேலன்,
மேகீ 19ம் சரிதான்!!;-)
19 - உடும்பு
12 - அமராவதி
8 - அறிவுரை
தமிழ் பிரியன்,
மேகீ 8ம் கீமே 12ம் சரி.
மேகீ 19 தவறு
குறுக்காக :
2) லத்தி
3) தாங்கு
5) சிந்தி
7) படுதா
8) கூவம்
10) வசதி
11) தட்டி
12) துலாம்
13) காந்தி
15) ஆகுதி
16) வைரம்
17) கைரிகா
நெடுக்காக :
1) இலக்குவன்
3) தாதி
4) குப்பம்
5) சித்தாந்தம்
6) திகை
8) கூதிர்காலம்
9) கொடிமுந்திரி
12) துதிக்கை
14) சுவை
15) ஆகா
சிந்தித்தேன், ரசித்தேன்
பார்த்தசாரதி
குறுக்காக :
2) லத்தி
3) தாங்கு
5) சிந்தி
7) படுதா
8) கூவம்
10) வசதி
11) தட்டி
12) துலாம்
13) காந்தி
15) ஆகுதி
16) வைரம்
17) கைரிகா
நெடுக்காக :
1) இலக்குவன்
3) தாதி
4) குப்பம்
5) சித்தாந்தம்
6) திகை
8) கூதிர்காலம்
9) கொடிமுந்திரி
12) துதிக்கை
14) சுவை
15) ஆகா
சிந்தித்தேன், ரசித்தேன்
பார்த்தசாரதி
Post a Comment