பூமி கோள வடிவில் இருக்கிறது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். உண்மையில் அது மிகச் சரியான கோளம்(Perfect Sphere) கிடையாது. பள்ளங்களும் மேடுகளாமாய்த்தான் உள்ளது. கணக்கிற்காக அது மிகச் சரியான கோளமாய் இருக்கிறது எனக் கொள்வோம். அந்த பூமிக் கோளத்தை சுற்றி, தரையோடு தரையாக எஃகினாலான ஒரு பெல்ட் அமைக்கிறோம். இப்பொழுது அந்த பெல்டை வெட்டியெடுத்து, அதன் நீளத்தில் சரியாக ஒரு அடி மட்டும் கூட்டுகிறோம். இப்பொழுது பெல்டை மறுபடியும் பூமியின் தரையிலிருந்து சமமான தூரத்தில் அமைத்தோமானால், தரைக்கும் பெல்ட்டுக்கும் இடைவெளி எவ்வளவு இருக்கும்? இதே செய்முறையை பூமிக்கு பதில் நிலவை வைத்து செய்தால், அப்பொழுது இடைவெளி எவ்வளவு இருக்கும்?
பி.கு : படத்துக்கும் கேள்விக்கும் சம்பந்தம் இல்லை!!:-)
Monday, July 07, 2008
பூமிக்கு ஒரு பெல்ட்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பூமிக்கே பெல்ட்டா ?
பூமியோட சுற்றளவுக்கு முன்னால ஒரு அடி என்பது ஜூஜூபி.. மேலும்,, தரைக்கும், பெல்ட்டுக்கும் என்னும்போது, தரை என்பது எதை குறிக்கிறது? ஏதாவது சிகரத்தையா அல்லது ஏதாவது பள்ளத்தாக்கையா?
ஆமாம் பெல்ட்டோட வழியில வரும் நீர்நிலையின் அடியையா கணக்கிடிகிறீர்கள்.. அல்லது நீர் மட்டத்தையா?
கேள்வியே ரொம்ப குழப்பமா இருக்கே?
அனானி,
// ஏதாவது சிகரத்தையா அல்லது ஏதாவது பள்ளத்தாக்கையா?
//
//கணக்கிற்காக அது மிகச் சரியான கோளமாய் இருக்கிறது எனக் கொள்வோம்.//
அதாவது பூமியை ஒரு பந்து போல எண்ணினால், அந்த பந்தின் மேற்பரப்பைத்தான் இதில் தரை என்று குறிப்பிட்டுள்ளேன்.
1/(2*pi)
அதாவது 0.15923566878980891719745222929936 அடி
சரியான விடை புபட்டியன். உங்கள் விடையை நாளை பதிகிறேன்.
I think this question need some clarification. Next time you try to give right examples with right meaning.
//PPattian : புபட்டியன் said...
1/(2*pi)
அதாவது 0.15923566878980891719745222929936 அடி
//
You are 100% correct. You guys can publish how you arrived at the answer. that would be more useful.
As your name suggests, you made me to think..
Post a Comment