முதலில் ஒரே மதிப்புள்ள ஆறு நாணயங்களை(ஆறு ஒரு ரூபாய்/இரண்டு ரூபாய்/ஐந்து ரூபாய்/உங்கள் வசதியை பொறுத்தது) கீழேயுள்ள படத்தில் உள்ளது போல் மேஜையில் அடுக்குங்கள்.
இப்பொழுது மொத்தம் மூன்று நாணயங்களை மட்டும் நகர்த்த வேண்டும். நாணயங்களை மேஜையிலிருந்து தூக்கியெல்லாம் வைக்கக் கூடாது. இழுத்து மட்டுமே நகர்த்தலாம். ஒரு நாணயத்தை நகர்த்தும்பொழுது முடிவில் அது எப்பொழுதுமே வேறு இரண்டு நாணயங்களை தொடுகிறார்போல் இருக்க வேண்டும். மேலும் ஒரு நாணயத்தை நகர்த்தும்பொழுது, மற்ற நாணயங்களை தள்ளி நகர்த்திவிடக் கூடாது.இப்படி நகர்த்தக்கூடாது
எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்!!
4 comments:
நீங்கள் காசுகளை வரிசைப் படுத்தியிருக்கும் முதல் படத்தில் காசுகளுக்கு எண்வரிசைப் படுத்தினால் (இ-வ,மே-கீ) 1, 2, 3, 4, 5, 6 என்று கொள்ளுவோம்.
4வது காசை 1ன் இடப்புறம் (நமக்கு இடப்புறம்) நகர்த்தி வைக்கவும்; 3ம் 6ம் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக மற்ற காசுகளைச் சுற்றிக் கொண்டு நகர்த்தவும் - 4,5 காசுகளுக்குக் கீழ்.
கெபி,
//ஒரு நாணயத்தை நகர்த்தும்பொழுது முடிவில் அது எப்பொழுதுமே வேறு இரண்டு நாணயங்களை தொடுகிறார்போல் இருக்க வேண்டும்.//
நீங்கள் இந்த வரியை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் உங்கள் விடையை புரிந்துகொண்டபடி, உங்கள் முதல் இரு நகர்த்தல்களிலிலும், முடிவில், நகர்த்தப்படும் காசு ஒரேயொரு நாணயத்தை மட்டுமே தொட்டுக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு நகர்த்தலின் முடிவில் நகர்த்தப்படும் காசு இரு நாணயங்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
எனது புரிதல் தவறாயிருந்தால், தயவுசெய்து படம் போட்டு விளக்கவும்.
Original Position:
1 2 3
4 5 6
Move 1:
1 2 3
5 6
4
Move 2:
1 2 3
5 6
4
Move 3:
2 3
5 6
1 4
இந்த மூவ் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
பல்லு பிச்சை,
நீங்கள் அளித்துள்ள விடை சரியானதுதான். வேறு யாரும் விடை சொல்கிறார்களா என்று இன்னும் ஒரு நாள் பார்த்தபின், நாளை உங்கள் விடையை பதிகிறேன்.
Post a Comment