கோடை ஆரம்பிச்சாச்சு. வெயில் இப்பவே தாங்க முடியலை. சரி ஐஸ்கிரீம் சாப்பிடலாம்னு ஒரு ஐஸ் கிரீம் பார்லருக்கு போனேன்.
அன்னைக்குன்னு பார்த்து அங்கே புதுசா ஒரு ஸ்கீம் அறிமுகப்படுத்தியிருந்தாங்க. அந்த பார்லரில் எப்பவுமே மெனுவில் ஒரு ஃபேமிலி கப் உண்டு. கொஞ்சம் பெரிய சிலிண்டிரிக்கல் கிளாஸில் ஐஸ் கிரீமை சமமட்டத்திற்கு நிரப்பித் தருவார்கள். விலை 90 ரூபாய்.
அன்னைக்கு ஃபேமிலி கப் ஜாரின் அதே விட்டம், உயரமுள்ள இரண்டு கோன் ஐஸ் கிரீம்கள், அதே 90 ரூபாய்க்கு விற்பதாக விளம்பரம் போட்டிருந்தார்கள். ஃபேமிலி கப்பை விட கோனுக்கு ஆர்டர்கள் அமோகமாக பறந்து கொண்டிருந்தன. ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன், இந்த புதிய ஸ்கீமால் கடைக்காரருக்கு எவ்வளவு நஷ்டமென்று!! எவ்வளவு நஷ்டமென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
10 comments:
irandin vilai onRukku enumbothu nastam thaan
//irandin vilai onRukku enumbothu nastam thaan //
எவ்வளவு நஷ்டம்?
கடைக்காரருக்கு நஷ்டம் கிடையாது. கோன் வாய்ப்பகுதியில் மட்டுமே அதே விட்டத்தில் இருக்கும். கீழே செல்ல செல்ல விட்டம் குறைவதால், நிரப்பப்படும் ஐஸ் க்ரீம் அளவும்
குறைகிறது. மேலும், கோனில் பாதிக்கு மேல் கீழ் பகுதியில் காலியாகத்தான் இருக்கும் :-)
volume of cone = 1/3 π r^2 h
volume of cylinder = π r^2 h
குறைகுடம்,
உங்கள் பின்னூட்டத்தில் ஓரளவு விடையிருப்பதால், இன்னும் இரு நாட்கள் கழித்து அதை பிரசுரிக்கிறேன். மேலும்,
//கோனில் பாதிக்கு மேல் கீழ் பகுதியில் காலியாகத்தான் இருக்கும் //
முழுதும் நிரப்பப் பட்டுள்ளது என்றே வைத்துக்கொள்வோம்.
Volume of a cone is 1/3 of a volume of a cylinder with same radius and height.
So, he's selling only 2/3 of ice cream for the same price (Rs. 90). Hence, he's actually gaining and NOT losing anything.
-Sundar Rams
Yes anna
Volume of the Cone is
4/3 x pi x(radius)^2 x height
volume of the cylinder is just
1/3 x pi x(radius)^2 x height..
so the shop keeper will not incure any loss...
இது சரின்னா எனக்கு ஒரு ice cream அனுப்புங்க...
குறைகுடம்,
உங்கள் ஃபார்முலா சரிதான். ஆனால் நீங்கள் முழுவிடையையும் சொல்லவில்லையே!;)
சுந்தர் ராம்ஸ்தான் சரியான விடையளித்திருக்கிறார்!!!!
volume of cone = 1/3 π r^2 h
volume of cylinder = π r^2 h
அதாவது,
volume of cone=1/3 volume of cylinder
இப்பொழுது மூன்றின் விலைக்கு, இரண்டுதான் கொடுப்பதால், கடைக்காரருக்கு மூன்றில் ஒரு பங்கு அல்லது ஒரு செட் ஐஸ்கிரீமுக்கு 30 ரூபாய் லாபம்தான்!!!
அவந்திகா தங்கச்சி!!,
லாபம்னு சரியான விடை சொல்லிட்டீங்க!! ஆனால் ஃபார்முலா தப்பா சொல்லீட்டீங்களே! இது எதற்குரிய ஃபார்முலான்னு சொன்னா நானும் தெரிஞ்சுப்பேன். ஃபார்முலா தப்பா சொன்னதால உங்களுக்கு ஐஸ்கிரீம் கிடையாது.;)
இப்படி ஃபார்முலா எல்லாம் போட்டுப் பள்ளிக்கூடப் பாடத்தையெல்லாம் நினைவு"படுத்தறது" கொஞ்சங்கூட நல்லால்ல.. சொல்லிட்டேன்!!
//இப்படி ஃபார்முலா எல்லாம் போட்டுப் பள்ளிக்கூடப் பாடத்தையெல்லாம் நினைவு"படுத்தறது" கொஞ்சங்கூட நல்லால்ல.. சொல்லிட்டேன்!! //
இதென்ன அராஜகமா இருக்கு!!!;)))
iOOOOOO. kolai.
Post a Comment