நமது திரட்டில் இரண்டாவது பாடல் இது. இது போன்ற பாடல்களை சுட்டிக் காட்டி உதவுமாறு வாசகர்களை கேட்டிருந்தும் யாரும் சுட்டவில்லை. இன்றும் வாசகர்கள் இது போன்ற பாடல்களை சுட்ட வரவேற்கபடுகிறார்கள். இனி பாடல்...
யாயும் ஞாயும் யாரோ கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறை கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே
இந்த பாடல் இடம் பெற்ற படம் உங்களனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்தப் படத்தில் எல்லா வரிகளும் வராது. 1, 3, 4, 5 வரிகள் மட்டுமே வரும். அதுவும் இந்த பாடலில் உள்ளது போலவே வராது(உதா :- செம்புலம் பெயர்ந்த நீர்த் துளி போல்) . இந்த பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. அதனால் இந்த பாடலை எழுதியவர் இதில் வரும் உவமையைக் கொண்டு "செம்புல பெயல் நீரார்" என்றே அழைக்கப்படுகிறார். இந்தப் பாடலின் அர்த்தம் உங்களுக்கு எளிதில் விளங்கும் என்றே நினைகிறேன். மேலும் இதில் ஒரு மறைபொருள்("சொல்லாமல் சொல்லப்பட்டது" அல்லது "சிறப்பு") இருக்கிறது. அதையும் என்னவென்று கண்டுபிடியுங்கள்.
Friday, April 07, 2006
சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - II
Posted by யோசிப்பவர் at 3:59 PM
Labels: சங்கத்தமிழ், மொத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
உங்களுக்காக ஒரு வித்தியாசமான பாடல்.
நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தென்ன பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்ச் சத்திமுற்ற வாவியுட் தங்கி நனை சுவர்க்கூரைக்கனைகுரல் பல்லி பாடு பார்த்திருக்கும் என் மனைவியைக்கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீஇப் இப் பேழையில் இருக்கும் பாம்பெனெ உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டனம் எனுமே.
சத்திமுற்றப் புலவர். எழுதியது.
செம்புலம் பெயர்ந்த நீர் என்று நான் படிக்கவில்லை. செம்மண் நிலத்தில் கலந்த் நீர் எப்படி செம்மண் நிறமாக இருக்கிறதோ அப்படி உன் மனமும் என் மனமும் கலந்து உள்ளது என்று அர்த்தம்.
Geetha Sambasivam, "செம்புலம் பெயர்ந்த நீர்" என்று நானும் சொல்லவில்லை. இருவர் படத்தில் நறுமுகையே பாடலில் அப்படி வரும். அதைத்தான் குறிப்பிட்டேன். நீங்கள் குறிப்பிட்ட பாடல் நல்ல பாடல். ஆனால் அது இந்த திரட்டில் எப்படி சேர்க்க முடியும்? "சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - I" பார்க்கவும்.
அப்புறம் இந்தப் பாடலில் உள்ள சிறப்பை பற்றி கேட்டிருந்தேனே? அதைப் பற்றி தாங்கள் படிக்கவில்லையா?
பங்கு பெற்றதற்கு நன்றி!!!
அவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதி என்று மறைமுகமாக அல்லது அதைப் பற்றியே இருவரும் நினைக்கவில்லை என்று வருவதாகத் தோன்றுகிறது.
Geetha Sambasivam, வேறு வேறு ஜாதி என்றெல்லாம் எனக்கு தோன்றவில்லை. அவர்களிருவரும், அதற்கு முன்பு ஒருவருக்கொருவர் கொஞ்சம் கூட அறிமுகமில்லாதவர்கள் என்பதுதான் அந்த சிறப்பாக நான் படித்தேன்.
the uvamai in this song is " sembulappeyar neer" . that you will have known. redearth is dry. when rain falls and mixes with the earth, they become fertile lands. engal thamizh aasiriyar
eppotho sonnathu.NanRi
>>மனைவியைக்கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் கையது கொண்டு மெய்யது பொத்தி<<
நடுவில் ஒரு வரி வரும்.
..
எங்கோன் மாறன் வழுதிக்கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது போர்த்தி
...
என்று படித்ததாக நினைவு.
ramesh,
நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் நமது தலைப்புக்கு எப்படி பொருந்தும்?
Post a Comment