புதிர் போட்டு ரொம்ப நாளாச்சு!!! நம்ம வலைத் துணுக்கே அதுக்குத்தானே. அதனால இஷ்டத்துக்கு யோசிங்க இரண்டாவது பதிவு இது. இஷ்டத்துக்கு யோசிச்சு கீழேயுள்ள புதிர்களுக்கு பதில் சொல்லுங்க!!!
1) சரவணனும், அருணும் விவசாயிகள். இருவருடைய நிலங்களும் அடுத்தடுத்து இருந்தன. இருவருடைய நிலங்களின் நீள அகலங்களும் ஒரே அளவுதான். இருவரும் ஒரே பயிரைத்தான் எப்பொழுதும் பயிரிடுவார்கள். ஒரே மாதிரியான விவசாய முறைகளைதான் கையாள்வார்கள். ஆனாலும் எப்பொழுதும் சரவணன் அருணைவிட அதிக விளைச்சல் அறுவடை செய்கிறான். இது எப்படி?
2) ஒரு ஆணும் ஒரு பெண்ணும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து கொண்டனர். இருவருக்குமிடையில் மிகவும் அந்தரங்கமான உரையாடல் நடந்தது. ஆனாலும் ஒருவர் உருவத்தை பற்றி இன்னொருவர் தங்களது நண்பர்களிடம் விவரிக்க முடியவில்லை. ஏன்?
3) மத்திய சிறையில் மச்சாடோ தனது வக்கீலுடன் பேசிக்கொண்டிருந்தான். ஜட்ஜ் பெய்லை மறுத்துவிட்டதால் இருவரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். விவாதத்தின் முடிவில் மச்சாடோ கோபமாக சிறையிலிருந்து வெளியெறினான். இதை விளக்க முடியுமா?
4) பாண்டியராஜன் மூன்று முறை முயற்சி செய்த பிறகு கடைசியாக அந்த கொட்டகையின் கீற்றில் ஓட்டை போட்டு உள்ளே ஓடி கொண்டிருந்த படத்தை பார்க்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அங்கிருந்து போய்விட்டான். பிறகு அடுத்த நாள் அதே படத்தை டிக்கெட் வாங்கி போய் பார்த்தான். என்ன நடக்கிறது?
Saturday, April 01, 2006
இஷ்டத்துக்கு யோசிங்க - II
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
2) அவர்கள் இருவருமே கண் பார்வை இல்லாதவர்கள். ராகவண்ணா ஒரு கதையே எழிதி இருக்காரே.
3) வழக்கில் மாட்டிக்கொண்டு உள்ளே போனவர் வக்கீல் அவரை பார்க்கத்தான் மச்சாடோ உள்ளே போனார்.
2. அந்த ஆணும் பெண்ணும் சந்தித்தது இண்டர்னெட் சாட் ரூமில்.
3. வேறு யாரோ ஒருவருக்காக மச்சாடோ வக்கீலை அமர்த்தி வழக்கை நடத்துகிறார். அவ்வக்கீலும் மச்சாடோவும் சிறைக்குச் சென்று குற்றம் சாட்டப்பட்டவரைச் சந்திக்கும்போது இச்சம்பவம் நிகழ்கிறது.
சரியா?
நன்றி
கமல்
2. Avargal santhitha idam -- internet chat
3. Machado than veliyil irukkiran. Vakkeel Jeyilil irukkirar
1) சரவணனின் நிலம் தாழ்வாக இருந்திருக்கும், அதான் அதிக நீர் பிடிப்பு கிடைத்திருக்கும்.
2) இருவரும் குருடர்களா? பாவம்
3) அப்போ வக்கீல் தான் குற்றவாளியா?
4) கடைசியா தானே கீற்றை கிழித்து உள்ளே போனார், அதான் படத்தின் கடைசி பகுதி தான் பார்த்திருப்பார், முழுப் படம் பார்க்க மீண்டும் டிக்கெட் வாங்குகிறார்.
1. no fencing for arun's fields
2. both are dumb(founded)
3. machchaadO is not a prisoner but may be on duty in the prison
1. ஒருவேளை அருணுக்கு முன்னாடி நாளே போய் அவன் நிலத்தில் இருந்தும் அறுவடை செய்து விடுவானா??!!!;)
2. அ) அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இணைய அறையில் சந்தித்தனர்..
ஆ) அவர்கள் இருவருக்கும் கண் தெரியாது
இ) அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை.. பெரிய சுவற்றுக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சந்தித்தனர்.
3. மச்சாடோ ஒரு வக்கில் குமாஸ்தாவா? இல்லை ஜட்ஜ் பெயிலை மறுத்தது குற்றவாளிக்கு.. ஆனால், குற்றம் சுமத்தியவன் மச்சாடோ..
4. இது என்னாங்க!!! ஒரு வேளை அந்த படம் நல்லா இருந்ததினால, டிக்கெட் வாங்கி மறுநாள் பார்த்திருப்பான்...
இலவ்ச கொத்தனாரே! மூன்றாவது கேள்விக்கான உங்கள் பதில் சரி. ஆனால் இரண்டாவது கேள்விக்கான பதில் தவறு. அவர்கள் இருவருக்குமே நன்றாக கண் தெரியும்.
இரண்டு பதில்களுமே தவறு கமல். மூன்றாவது கேள்விக்கான பதிலை இலவச கொத்தனாரின் பின்னூட்டத்தில் பார்க்கவும்.
பிரபு ராஜா, மூன்றாவது கேள்விக்கான விடை சரி. இரண்டாவது தவறு.
பரஞ்ஜோதி, முதல் கேள்விக்கான விடையை ஒரு மாதிரி யோசித்து கூறியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி யோசித்தால் விடை தானே வருகிறது!!(க்ளூ : நிலம்) இரண்டாவதில் இருவரும் குருடர்கள் இல்லை. மூன்றாவது மிகச் சரியான பதில்!!! நான்காவது தவறு(கொஞ்சம் டெக்னிக்கலாக சிந்திக்கவும்!!)
முதல் இரண்டு விடைகளும் தவறு லதா!! மூன்றாவதில் ஒரு பகுதி சரி //machchaadO is not a prisoner//.
பொன்ஸ்! முதல் கேள்வி தவறான விடை(எல்லாரையும் நம்மள மாதிரியே நினைச்சா எப்படி?!;)))
இரண்டாவது கேள்விக்கு உங்களது மூன்றாவது விடை(இ) கொஞ்சம் நெருங்கி வருகிறது. இன்னும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். மூன்றாவது தவறு. நான்காவது ஒரு சின்ன டெக்னிக்கல் விஷயம்!!!
4. is that cinema a 3-d one?
2. they did not talk face to face but back to back ?
//பொன்ஸ்! முதல் கேள்வி தவறான விடை(எல்லாரையும் நம்மள மாதிரியே நினைச்சா எப்படி?!;)))//
தன்னைப் போல் பிறரை நினைன்னு சொல்லி இருக்காங்களே... அதான்..
சரி, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பொன்ஸின் இன்றைய யோசனைகள்:
1. ஒருவேளை அருணின் நிலத்திலேயே ஏதேனும் வளம் இல்லையா?
2. // இ) அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை.. பெரிய சுவற்றுக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சந்தித்தனர்.
இரண்டாவது கேள்விக்கு உங்களது மூன்றாவது விடை(இ) கொஞ்சம் நெருங்கி வருகிறது. //
என்னங்க, இது நெருங்கி வருதுன்னா, எப்படி, ஒருவேளை பெரிய சுவர் இல்லையா..??? குட்டிச் சுவரா?? ஒருவேளை ரெண்டும் மனுஷங்களே இல்லையா? எறும்பு கழுதை இது மாதிரியா? அதான் எல்லாம் ஒரே மாதிரி தானே இருக்கும், என்ன விவரிக்கறதுன்னு விட்டுட்டாங்களா?
3. இது தான் கொத்தனார் சொல்லிட்டாரே.. ஜூட்.
4. டெக்னிகல் விஷயம்னா எப்படி, அது 3D படமா??? கண்ணாடி போடாம பாக்க முடியாதுன்னு உள்ள போய்ட்டானா? இல்லைன்னா, ஒருவேளை, அந்த தியேட்டர்காரர் புத்திசாலித்தனமா, அங்க கொட்டகையைப் போட்டுட்டு அதுக்குப் பின்னாடி சுவற்றைக் கட்டிடாரா?
4) அது 3D படம் (மை டியர் குட்டிச்சாத்தான்?)
லதா! நேற்றைக்கு விட்டதை இன்று பிடித்துவிட்டார். நான்காவது மிக மிக சரி. இரண்டாவது ஒரு பாதிதான் சரி(//they did not talk face to face//);))
பொன்ஸ் உங்கள் விடா முயற்சியை பாராட்டுகிறேன்!!! இப்ப உங்க விடைகள் பத்தி...
1) சரியான விடையில்லை.
2) //இது நெருங்கி வருதுன்னா, எப்படி, ஒருவேளை பெரிய சுவர் இல்லையா..??? குட்டிச் சுவரா?? // சுவரே கிடையாது. ஆனா....
3) ஜூட்.
4) //டெக்னிகல் விஷயம்னா எப்படி, அது 3D படமா??? கண்ணாடி போடாம பாக்க முடியாதுன்னு உள்ள போய்ட்டானா? //
ரொம்ப சரியான விடை. உங்களுக்கு முன்னாலேயே நம்ம லதா சொல்லிட்டாங்க. இருந்தாலும் விடை பிரசுரமாகாததால், உங்கள் முயற்சிக்கு பலன் - ஒரு சரியான விடை!!!
கோபி! மிகச் சரியான விடை.
//மை டியர் குட்டிச்சாத்தான்?//
இப்ப நிறைய 3டி படம் வந்துட்டுதே!!!;)
2. church - confession ?
1.arun's field get lesser sunlight due to shady trees nearby.
//உங்கள் முயற்சிக்கு பலன் - ஒரு சரியான விடை!!! //
அதெப்படிங்க.. ஒரு சரியான விடை, ஒரு கிட்டத் தட்ட சரியான விடை, (என்னைத் தவிர இந்த குட்டிச்சுவர் மேட்டர் கிட்ட யாரும் வரவில்லை என்பதை இந்தக் கட்டதில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்..)..
சரி, இன்றைய யோசனைகள்:
1. சரவணன் வயலில் அருண் வயலில் இருப்பதை விட வரப்புகள் அதிகம். அதனால் உழவு நிலம் குறைந்து விடுகிறது??
2. அ. சுவர் இல்லைன்னு சொல்லிட்டிங்க.. ஒருவேளை அவங்க ரெண்டு பேரும் ஏதேனும் கவசம் போட்டுகிட்டு சந்திச்சாங்களா? அதான் உருவத்தைப் பத்தி விளக்க முடியவில்லையா?
ஆ. ஒருவேளை ரெண்டு பேரும் வேற வேற கட்சிக்காரங்க.. ரகசிய சந்திப்பு.. அதுனால நண்பர்கள் கிட்ட சொல்ல முடியாது.. எப்படி???!!!
இது தான் சரின்னு சொல்லிடுங்க.. ரொம்ப யோசிக்க வைக்கறீங்க.. ஏற்கனவே டச் இல்லாத விஷயம்.. ;)
//2. church - confession ?//
மிகச் சரியான விடை லதா! மொத்தமாக இரு கேள்விகளுக்கு சரியான விடை!!! ஆனால் முதல் கேள்விக்கான பதில் தவறு! வேணும்னா ஒரு க்ளூ தரேன் - நில பரப்பு!!!
பொன்ஸ்!
//என்னைத் தவிர இந்த குட்டிச்சுவர் மேட்டர் கிட்ட யாரும் வரவில்லை என்பதை இந்தக் கட்டதில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்//
லதா உங்க கட்டத்துக்கு முன்னாடியே இதுக்கு விடை சொல்லிட்டாங்கங்கறதை இந்த கட்டத்தில் சொல்லி கொள்ள ஆசைப்படுறேன்;))
//சரவணன் வயலில் அருண் வயலில் இருப்பதை விட வரப்புகள் அதிகம். //
வரப்பில்லை. என்னதுன்னு லதாவுக்கு சொல்லியிருக்கிற பதிலில் பாருங்க! முடிஞ்சா அது எப்படின்னு சொல்லுங்க!!!
சரிங்க சரி.. லதா சொல்லிட்டாங்க... நிலப்பரப்பு மேட்டர் நம்ம 'நிலம் போன்ற' மண்டைக்கு ஒத்துவரலை.. லதாவோ கொத்தானரோ சொல்லட்டும்.. நான் 'விட்டு'க் கொடுத்துடறேன்... :) :)
1. // இருவருடைய நிலங்களின் நீள அகலங்களும் ஒரே அளவுதான். //
ஆனால் அருணின் நிலத்தில் கிணறோ மற்ற ஏதோ மரங்களோ இருந்தன. அதனால் விளைச்சல் குறைவு.
:-))
ஒரு நாளைக்கு ஒரு சரியான விடைதான் அளிக்க இயலும்.
//நான் 'விட்டு'க் கொடுத்துடறேன்//
எவ்வ்வ்வ்ளோ பெரிய மனசு!!!
//ஆனால் அருணின் நிலத்தில் கிணறோ மற்ற ஏதோ மரங்களோ இருந்தன. //
சரி எல்லோரும் ரொம்ப யோசிச்சு யோசிச்சு டயர்டாயிடீங்க!!! இதுக்கு பதில் நானே சொல்லிடுறேன்.சரவணின் நிலம் குன்று போல் அமைந்த நிலம். அதனால் அவனது நிலத்தின் பரப்பு அருணின் நிலத்தைவிட அதிகம். அதனால் விளைச்சலும் அதிகம்!!!
குன்று போன்ற நிலமாயிருந்தா விளைச்சல் குறைஞ்சு போயிடுமா? எனக்குத் தெரியவே தெரியாது... அதுனால நான் யோசிச்சிருந்தாலும் உபயோகம் இல்லை.. அடுத்த பாட்ச் கேள்வி போடுங்க..
பொன்ஸ், குன்று போன்ற நிலத்தினால் நிலப்பரப்பு அதிகமாகும். நிலப்பரப்பு அதிகமானால் விளைச்சலும் அதிகமாகும்தானே!
// பொன்ஸ், குன்று போன்ற நிலத்தினால் நிலப்பரப்பு அதிகமாகும். நிலப்பரப்பு அதிகமானால் விளைச்சலும் அதிகமாகும்தானே! //
எனக்கு ஒரு சந்தேகம்... இந்த நிலம் இப்படி குன்று போல் இருந்தால், அதிலே விடர தண்ணி கீழே ஓடி வந்திராது? அப்படி வந்திட்டா, விளைச்சல் எப்படி அதிகமாகும்?
பொன்ஸ், அதற்கெல்லாம் நிறைய முறைகள் இருக்கு. அதை பற்றியெல்லாம் என்கிட்ட கேட்டா எப்படி? நல்ல விவசாயியை பார்த்து கேட்டால் தெரியும். அர்ஜண்டுக்கு வேணா நம்ம விவசாயியை கேளுங்களேன்!!!
4,when pandiyarajan was seeing the movie, two reasons for leaving,,
1,the power went off.so he had to leave.
2,he fell down into the kottaai.he was caught.
so he was forced to come back the next day.
nijamaave yosichu sonnathu.
Post a Comment