இன்னைக்கு ஆபீஸ்ல ரொம்ப வெட்டியா இருந்தேனா! சரி, நாம சுமார் பத்து மாசத்துக்கு முன்னால வலைத்துணுக்குன்னு ஓன்னு ஆ'ரம்பிச்சோமே', அதுல எத்தன துணுக்கு எழுதியிருக்கோமுன்னு கணக்கெடுக்கலாமேன்னு, உக்காந்து துணுக்குகளை(துக்கடாக்களையும் சேர்த்துதான்) எண்ண ஆரம்பிச்சேன்.இதுவரை மொத்தம் 103 துணுக்குகள் பதிவாயிருக்கு(இது 104). சரி அத விடுங்க. நாம பத்து பெட்டி கணக்குக்கு வருவோம்.
ஒரு ராஜாகிட்ட நிறைய தங்கம் இருந்தது(வேற யார்கிட்ட இருக்க முடியும்?!?). பத்து பொற்கொல்லர்களை அழைத்து, அந்த தங்கத்தையெல்லாம் ஒரே அளவுள்ள தங்க கட்டிகளாக செய்து தர சொன்னார். ஒரே ஒரு பொற்கொல்லர் மட்டும் கொஞ்சம் தங்கத்தை லவட்டி விட்டு மீதியிருந்ததை சொல்லப்பட்ட அளவைவிட ஒரு சவரன் குறைவான தங்ககட்டிகளாக செய்து விட்டார். எல்லா பொற்கொல்லர்களும் தாங்கள் செய்த கட்டிகளை ஒரு பெட்டியில் அடுக்கி ராஜா முன் கொண்டு சென்றனர். இதற்குள் ராஜாவுக்கு பத்து பேரில் யாரோ ஒருவர் ஒரு சவரன் குறைவான தங்ககட்டிகள் செய்திருக்கிறார் என்ற செய்தி ஒற்றர் மூலம் கிடைத்துவிட்டது. இப்பொழுது ராஜாவின் முன் பத்து பெட்டிகளும் இருந்தன. யார் குற்றவாளி என்பதை ராஜா ஒரே ஒரு தடவை மட்டும் சில தங்ககட்டிகளை எடைபோட்டு கண்டு பிடித்துவிட்டார். எப்படி கண்டுபிடித்தார்?(ஆஆ...வ்)
Saturday, July 02, 2005
பத்து பெட்டி தங்ககட்டி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மொத பொட்டிலேந்து ஒரு கட்டி, ரெண்டாவது பொட்டிலேந்து ரெண்டு கட்டி, மூணாவது பொட்டிலேந்து மூணு கட்டி.... ன்னு பத்து பொட்டிலேந்தும் மொத்தமா எடுத்து ஒரு தரம் எடை போடுங்க. யாரு ·ப்ராடுன்னு கண்டுபுடிச்சிறலாம்
You had previously posted a similar one. Go look at ur archieves ;).
.:dYNo:.
Post a Comment