ஏற்கெனவே சில பழமொழிகள் காலப்போக்கில் திரிந்து போனதைப் பற்றி நம் வலைத் துணுக்கில் பார்த்தோம். அந்த வரிசையில் இன்னொரு பழமொழி.
"ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்பது வழக்கத்தில் உள்ள பழமொழி(இப்படில்லாம் பயமுறுத்தினா யார்கிட்டதான் வைத்தியம் பாக்குறது?).
இதன் உண்மையான வடிவம் இதுதான்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்". அதாவது ஆயிரம் வேர்களைப் பற்றி நன்கு அறிந்து உபயோகப்படுத்தியவன் அரை வைத்தியன்(அட! ஒரே ஒரு எழுத்து மாறிப் போனதில் அர்த்தம் எப்படி மாறிப் போச்சு பாருங்க!!).
Tuesday, January 11, 2005
பழமொழி விளக்கம் - 2
Posted by யோசிப்பவர் at 7:32 PM
Labels: துணுக்குகள், மொத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
--இது திரிந்தது.
ஒரிஜினல்--
போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை.
வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை.
அப்படீன்னு சொல்றாங்க, உண்மைதெரியாது.
Post a Comment