பிளாக்களில் இப்பொழுது நிறைய பேர் கேள்வி கேட்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான். கேள்வி கேட்கும் பதிவிற்குதான் பின்னூட்டங்களும் அதிகமாக வருகின்றன. நம்ம வலைத் துணுக்கிலேயேகூட புதிர் கேள்வி துணுக்குகளுக்குதான்(பல தடவை அதற்கு மட்டும்தான்) அதிகமான பின்னூட்டங்கள் வருகின்றன. அதனால்தான் நானும் வாரம் ஒரு புதிராவது போட்டுக் கொண்டிருக்கிறேன்.
சென்னைக்கும் திருச்சிக்கும் இடையே 25 செக்போஸ்ட்கள்(சும்மா வச்சுக்கங்க) இருக்கின்றன. ஒரு தேங்காய் மூடை லாரி இந்த வழியாப் போனா, மூடை ஒன்றுக்கு(மூடையில் எத்தனை தேங்காய் இருந்தாலும் கவலை இல்லை) ஒரு தேங்காய் வீதம் ஒவ்வொரு செக்போஸ்டிலும் கொடுக்க வேண்டும். இப்ப, ஒரு லாரி இரண்டு மூடை தேங்காய் ஏற்றிக் கொண்டு சென்னையிலிருந்து, திருச்சிக்கு போகிறது. ஒவ்வொரு மூடையிலும் 25 தேங்காய்கள் இருக்கின்றன. திருச்சிக்குப் போய் சேரும்போது கொஞ்சமாவது தேங்காய்கள் மிச்சமிருக்குமா? மிச்சமிருந்தால் அது எப்படின்னு சொல்லுங்க.
Sunday, November 14, 2004
சென்னை To திருச்சி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ரொம்ப நல்ல கேள்வி ஆனா நம்ம ஊர் காவல் அதிகாரிகள் கிட்ட மாட்டினா லாரி கூட மின்ச்சாது.
என்னாச்சு இன்னைக்கு? ஆளாளுக்கு என்னோட பழைய பதிவுகளையெல்லாம் படிக்கிறாங்க?!
y dont you chk out my blog http://dailycoffe.blogspot.com
i need atleast some one to comment on my blog lol
Post a Comment