Wednesday, February 08, 2012

கலைமொழி - 12

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.


சென்ற கலைமொழிக்கான விடை : இன்றே செய்ய வேண்டிய வேலையை, நாளை என்ற நாளுக்குத் தள்ளிப் போடாதீர்கள். அதை செய்வதற்கு நாளை மறுநாள் என்று கூட ஒரு நாள் இருக்கிறது.

விடை கூறியவர்கள் : மாதவ், பூங்கோதை, 10அம்மா, அரசு, தமிழ் பிரியன், முத்து, ஹரிஹரன், ராமசாமி, கலை.

13 comments:

Show/Hide Comments

Post a Comment