. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து” என்னும் பெயரில் அறிமுகப்படுத்தினார்.
அதே விளையாட்டை வலையிலேயே விளையாடும் விதமாக “சொல் ஒன்று சொல்”என்னும் பெயரில் இங்கே ஏற்றியுள்ளேன் - http://free.7host07.com/
தற்பொழுது சுமார் 40+ வார்த்தைகள் Databaseல் நீங்கள் கண்டுபிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. விளையாடுபவர்கள் புதிய வார்த்தைகளையும் தொகுப்பில் சேர்க்க முடியும். விடைகளை கண்டுபிடித்தவர்கள் அப்படியே அதை கேள்வி வார்த்தை கொடுத்தவர்களுக்கு இமெயிலும் அனுப்ப முடியும். விளையாட்டுக்கான விதிமுறைகள் இங்கே -> http://free.7host07.com/
இப்போதைக்கு 3 அல்லது 4 அல்லது 5 எழுத்து வார்த்தைகள் மட்டுமே சேர்க்க முடியும். விடைகளைக் கெஸ்(guess) செய்ய ஆரம்பிக்குமுன், கேள்வி வார்த்தையில் எத்தனை எழுத்துக்கள் என்பதில் கவனம் கொள்ளவும்.
Code சில சமயம் எரர் அடிக்கலாம்(எழுதினது நானுல்ல!!;-)). Server சில சமயம் Slowஆக இருக்கலாம். விரைவில் அவற்றை சரிப்படுத்துவேன் என்று நம்புவோமாக;-)
விளையாடிப் பார்த்து நிறை/குறைகளை சொல்வீர்கள் என்ற நம்புகிறேன்.
Thursday, November 17, 2011
சொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds
Posted by யோசிப்பவர் at 3:04 PM 0 comments
Labels: Puzzles, அறிமுகம், அறிவிப்புகள், புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விளையாட்டு
Subscribe to:
Posts (Atom)