Thursday, June 11, 2009

குறுக்கெழுத்துப் போT - 3

ஒரு மிக நீண்ண்ண்ட இடைவெளிக்குப் பின்பு, மறுபடி புதிர் பக்கம் வந்து விட்டேன். இன்றைக்கு(அல்லது இந்த மாதம்) குறுக்கெழுத்து புதிர்தான். ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால்(கொத்ஸ் கூட மூனு மாசமா லீவு!), உங்களுக்கு குறுக்கெழுத்துக் கேள்விகளைப் பார்த்ததும் தலை சுற்றலாம். அதனால் இது போன்ற (க்ரிப்டிக்) குறுக்கெழுத்துக்கான வாஞ்சிநாதனின் அறிமுகத்தை இங்கே க்ளிக்கி படித்து விட்டு வந்து விடுவது நல்லது. நாங்கல்லாம் இதில் பழந்தின்னு கொட்டை போட்டவங்களாக்கும் என்பவர்கள் டைரக்டாக கீழே கேள்விகளை படிக்க ஆரம்பிக்கலாம்.

விடைகளை இங்கே கட்டங்களிலேயே நீங்கள் நிரப்பிப் பார்க்கலாம். ஆனால் எனக்கு விடைகளை கமெண்டில்தான் சொல்ல வேண்டும். விடை சொல்பவர்களுக்கான மதிப்பெண்கள், அவ்வப்பொழுது இந்தப் பக்கத்தில் அப்டேட் செய்யப்படும்.



13456
2

7
89
10
11
12

13
1415
1617


குறுக்காக :
2) லட்டைப் பிட்டு அத்திக் காம்பில் வைத்தால் கரிக்கழிவு (3).
3) சகித்துக் கொள்ள அங்கு இடையை நடுவில் தாக்கு (3).
5) சமவெளி நாகரிகத்தின் இறுதி உயிரைத் திரித்து யோசி (3).
7) படுதாமரையில் மறைந்திருப்பது திரை (3).
8) கூடமிடையில் வசிக்க ஆரம்பித்தால் ஆறும் நாறும் (3).
10) வகையின் கரத்தில் மனைவி அமர்ந்தால் சொகுசு (3).
11) தடி நடுவே கட்டுப் போட்டால் மறைக்கலாம் (3).
12) துணி வெட்டி விஞ்ஞான ஜனாதிபதிக்கு முடி திருத்தினால் எடை போடலாம் (3).
13) கதராடையில் சரி பாதி கிழித்து தமயந்தியின் காலில்லா அண்ணன் இறந்தால் ஒளி வீசும் (3).
15) வலியில் கத்தித் துள்ளினால் அக்கினிக்கு உணவு (3).
16) அறுவை அறுத்து கை காலை ஒட்டினால் மின்னும் கரி (3).
17) வள்ளலின் கரங்களில் திரும்பிய பெண்மணி (3).

நெடுக்காக :

1) இவன் இடையில் ஆங்கிலத்தில் அதிர்ஷ்டம் தேய்ந்து வந்ததால் இளையவன் ஆனான் (6).
3) தகர வரிசை படிக்கிறாள் வேலைக்காரி (2).
4) அங்கும் இறுதியாக சுப்பன் நடுவே நுழைந்து பார்த்தால் சேரி (4).
5) சித்தனை அழைத்த மகிழ்ச்சியில் ஆணையைத் தொலைத்தால் தத்துவம் பிறக்கும் (6).
6) சிறையில் இருப்பவன் திரும்பி வந்தால் ஆச்சர்யமடை(2).
8) கூடல் தொடங்க தலையற்று சதிர் ஆடும் நேரம் நடுங்கும் (6).
9) கொம்பில் ஏறும் செடியில் முந்தானையை படரவிட்டு ஒரு ஸ்வரம் இசைத்தால் பழம் சாப்பிடலாம் (6).
12) வணங்கி கைநீட்டி ஆசிர்வாதம் தரும் (4).
14) கொசுவைக் கொஞ்சம் நசுக்கினால் ருசிக்கலாம் (2).
15) பசுவும் காக்கையும் சேர்ந்திருந்தால் பிரமாதம் (2).




பி.கு.:-
முதலில் குறுக்காக 5க்கான கேள்வி விடுபட்டுப் போயிருந்ததை, சுட்டிக் காட்டிய பெனாத்தலாருக்கு ஸ்பெஷல் நன்றி!!!

31 comments:

Show/Hide Comments

Post a Comment