இரண்டு மாதமாக குறுக்கெழுத்துப் புதிரை வைத்தே காலத்தை ஓட்டியாகிவிட்டது. அதனால் வழக்கம் போல இன்று கணிதப் புதிர்.
ஒரு கடைக்காரர் மொத்த வியாபாரி ஒருவரிடம் கோலிக் குண்டுகளுக்கு ஆர்டர் செய்தார். மொத்த வியாபாரி கோலிகளை 7 சிறு பைகளிலும், 18 பெரிய பைகளிலுமாக அடுக்கி, பேக் செய்து பில்லோடு(BILL) அனுப்பிவிடுகிறார். ஆனால் கடைக்கு வந்து சேருமுன் போக்குவரத்தில், பைகளுக்குள் இருந்த கோலிகள் நொறுங்கிவிடுகின்றன.
ஒவ்வொரு அளவிலான பைகளிலும் ஒரே எண்ணிக்கையளிவிலான கோலிகளே இருந்தன என்பது கடைக்காரருக்குத் தெரியும். அதாவது எல்லா சிறு பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும், ஒவ்வொரு பெரிய பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும் கோலிகள் இருந்தன. ஆனால் சிறு பைகளில் எவ்வளவு எண்ணிக்கை, பெரிய பைகளில் எவ்வளவு எண்ணிக்கை என்பது கடைக்காரருக்குத் தெரியாது. பில்லில் மொத்த கோலிகளின் எண்ணிக்கை 233 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதை வைத்துக் கொண்டு சிறு பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள், பெரிய பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள் என்பதை கடைக்காரர் கண்டுபிடித்து விட்டார். அதையே உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
Thursday, October 30, 2008
கோலி
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
why so easy question today?
answer 5 and 11
5 x 7 = 35
11 x 18 = 198
Total 233
ஆமாம் வெண்பூ,
கொஞ்சம் எளிதான கேள்விதான். கேள்வி கேட்டு நாளாச்சா! அதுதான் கொஞ்சம் எளிதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று எண்ணினேன். அடுத்த வாரம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று நம்புகிறேன்!!;-)
11*18 + 5*7 = 233
4*18 + 23*7 = 233
(பெரிய பையில் கொஞ்சமா இருக்கக் கூடாதுன்னு சட்டமா என்ன?)
சிறு பைகள்: ஒவ்வொன்றிலும் 5 கோலிகள்
பெரிய பைகள்: ஒவ்வொன்றிலும் 11 கோலிகள்
(7 x 5) + (18 x 11)
35 + 198 = 233
சரியா?
இ.கொ.,
சரிதான். பெரிய பையில் கொஞ்சமா இருக்கக் கூடாதுன்னு நான் சட்டம் போட மறந்துட்டேன்! உங்களை மாதிரி அறிவாளிங்க வந்து ஆப்பு வைப்பாங்கன்னு தெரியாமப் போச்சு!!;-))
அ. நம்பி,
உங்கள் விடை சரிதான்.
I solved it..
5 in small Bags
11 in big Bags
7(5) + 18 (11)= 233
5 in small Bags and 11 in big bags..
7(5)+18(11)=233
1) சின்ன பையில் 5, பெரிய பையில் 11
2) சின்ன பையில் 23, பெரிய பையில் 4
:-)))...சின்ன பையில் எண்ணிக்கை கம்மியா இருக்கும்னு நீங்க சொல்லவேயில்லையே!!!
ahhh....sorry...
உங்க 2-வது கமெண்டை இப்பதான் பாத்தேன்...
யோசிச்சி,யோசிச்சி ரொம்ப களைப்பா ஆகிருச்சு, நாளைக்கு சொல்றேன் பதில
சின்ன பைல 23*7 = 161
பெரிய பைல 4*18 = 72
மொத்தம் = 233
இன்னொரு விடை.
சின்ன பைல 5*7 = 35
பெரிய பைல 11*18 = 198
மொத்தம் = 233
நையாண்டி நைனா,
உங்கள் விடை சரியானதுதான்!:-)
விஜய் ஆனந்த்,
நீங்களும் அறிவாளிதான்! ஒத்துக்கிறேன்!!!;-))
வாலு,
எல்லாரும் ரொம்ப எளிதாக விடை கண்டுபிடிக்கிறாங்க. நீங்க என்னடான்னா இப்படி "இன்று போய் நாளை வாரேன்"னு சொன்னா என்ன அர்த்தம்?!
களத்துல குதிங்கப்பா!!;-)
ஜேகே,
சரியான விடை(கள்). நீங்களும் அறிவாளிதான்!!!;-))(பார்க்க கமெண்ட் நம்பர் 2)
7X + 11Y = 233
X = 5 and Y = 11
35+ 198 = 233
endrum anbudan
Sriram, Boston USA
big bag =11 marbles
small bag 5
thyagarajan
There is an alternate solution big bag = 4 marbles, small bag 23 marbles...assuming small bag is big enough to take 23 marbles!!
thyagarajan
5, 11
சரியான விடை ஸ்ரீராம்!!
தியாகராஜன்,
உங்களது இரு விடைகளுமே சரியானவைதான்!!
யாரோ ஒருவனே(ரே)!,
வழக்கம் போல் சரியான விடை.
என்னய்யா இது? ஏற்கனவே இலங்கை அரசின் 6ம் வகுப்பு கணிதப் புத்தகத்தில வந்திற்றுதே? 9,27 என்று இலக்கங்களோடு. சரி உங்களூக்கு சிகரெட் கணக்கு தெரிஞ்சாப் போடுங்கோ. கொஞ்சம் கணிக்த அறிவைப் பாக்கலாம்.
இதுக்கு ரோம்ப புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை. 7x+18y=233 என கூகுளிட்டாலே போதுமே!
ஆட்காட்டி,
//ஏற்கனவே இலங்கை அரசின் 6ம் வகுப்பு கணிதப் புத்தகத்தில வந்திற்றுதே?//
அப்படியா? எனக்குத் தெரியாது. சரி, சரி! அடுத்த முறை 10ம் வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்து கணக்கு கேட்டால் போச்சு!!;-))
Big Bag = 11 Nos
Small Bag = 5 Nos
It's correct or not
Regards
K. Jegan
RIGHT Jegan!!!
Post a Comment