சுஜாவும், பாலாவும் நண்பர்கள். ஒரு ஞாயிற்றுகிழமை இருவரும் மகாபலிபுரத்துக்கு பிக்னிக்(தமிழ் வார்த்தை ப்ளீஸ்(மன்னிக்கவும், தயவுசெய்து)) சென்றனர். மதிய உணவுக்கு இட்லி பொட்டலங்கள் சென்னையில்ருந்தே கொண்டு சென்றனர். சுஜா ஐந்து பொட்டலங்களும், பாலா மூன்று பொட்டலங்களும் எடுத்துச் சென்றனர். ஒவ்வொரு பொட்டலத்திலும் மூன்று மூன்று இட்லிகள். மதிய உணவுக்கு சாப்பிட உட்கார்ந்தபொழுது அவ்ர்களின் நண்பன் ஷங்கர் அங்கு வந்து சேர்ந்தான்(கரெக்டா சாப்பாட்டு டயத்துக்கு வந்திருக்கான்யா!). மூவரும் ஆளுக்கு எட்டு இட்லி சாப்பிட்டு, பொட்டலங்களை காலி செய்தனர். ஷங்கர் கிளம்பும்பொழுது சாப்பிட்ட எட்டு இட்லிக்கு எட்டு ரூபாய் கொடுத்து(மானஸ்த்தன்!), இருவரையும் பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டான். இப்பொழுது அந்த எட்டு ரூபாயை சுஜாவும், பாலாவும் எப்படி பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்? யோசிங்க வலைத்துணுக்கு வாசகர்களுக்கு இது ஒரு கஷ்டமான கேள்வியல்ல. அதனால் உங்கள் பதிலை பதிவு செய்ய முந்துங்கள்.
Saturday, May 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பாலாவின் பதிலும், ராகவனின் விளக்கமும் சரியே. சுஜா ரூ.7ம், பாலா ரூ.1ம் எடுத்துக் கொள்ள வேண்டும். செல்லாவும் சரியாக பதிலளித்துள்ளார்.
பி.கு.
ஒரு ஆளை பத்தி மட்டும் கரெக்டா சொல்லிட்டீங்க பாலா. இன்னோரு ஆள் தப்பு(நீங்க இல்லை!;))
யோசிப்பவரே ... எப்படியும் பிரிச்சு எடுத்துக்கட்டும் .. அதுவா இப்ப முக்கியம்..??
மொதல்ல ..இட்லி க்கு தொட்டுக்க என்ன இருந்தது னு சொல்லுங்க... மிளகா பொடியா?? பருப்பு பொடியா.. சட்னியா??? இல்லை சர்க்கரை யா??? :)
வீ .எம்
எளிய கணக்கு என்பதால் என்விடையின் தேவையிருக்காது! :-))
'பிக்னிக்' என்பதற்கான தமிழ்ச்சொல் நான் தரவா? சிற்றுலா
Tour - சுற்றுலா
Picnic - சிற்றுலா
"சிற்றுலா" - நன்றாய்த்தான் இருக்கிறது வாசகரே! ரொம்பப் பழைய பதிவையெல்லாம் தேடிப் பிடித்து படித்திருக்கிறீர்கள்!! நன்றி!;-)
Post a Comment